22.8.15

ஆயர் சமூகத்தினருக்கு ஒரு வேண்டுகோள்...!!!

ஆயர் சமூகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்...!!!

கிருஷ்ண ஜெயந்தி வருகிறது. என்ன செய்யலாம்? அரும்பாடுபட்டு சேர்த்த பணத்தை எப்படி செலவழிக்கலாம்? திருவிழாவிற்கு எவ்வளவு செலவிடலாம்? இப்படி பலவாறான எண்ணங்களில் மூழ்கியிருக்கும் நம் இளைஞர் சமூகம்.

வருடத்திற்கு தமிழ்நாடு முழுதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்திற்காக சுமார் 50 கோடி ரூபாய் பணம் செலவழிக்கப்படுகிறது நம்மால். ஒரு 10 ஆண்டுகள் நாம் இப்பணத்தைச் சேமித்தால் நாடார் சமூகத்தைப்போல நாமும் நமக்கென ஒரு வங்கிக்கு அடித்தளம் அமைக்கலாம். நம்மிலிருந்து ஒரு நல்ல ஆளுமையான தலைவன் தோன்றும் வரையிலும் இது சற்று கடினம்தான். இவ்வளவு தொகையை நாம் எப்படி நம் சமூகத்திற்குப் பயனுள்ளதாக மாற்றலாம்? இதோ யோசனைகள்...

01. அந்தந்த பகுதிகளில் வறுமையில் வாழும் திறமையான இடையர் சமூக மாணவர்களை  கண்டறிந்து படிப்புக்கு  உதவலாம்.

02. பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களுக்கும் முதியோர்களுக்கும் தேவையான சிறு உதவி செய்யலாம்.

03. இடையர் சமூக ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு முடிந்த உதவி செய்யலாம்.

04. இடையர் சமூகத்தில் திருநங்கைகளாக மாறியோர்களைக் கண்டறிந்து அரசு உதவி கிடைக்க துணை நிற்கலாம். வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

05. படித்து முடித்த இளைஞர்களுக்கு சுயதொழிற்புரிய உதவ முயற்சிக்கலாம்.

06. அடுத்தடுத்த தலைமுறையினருக்கு நம் பொருளாதாரம் நமக்கே பயனுறும் வழியில் உதாரணமாக நடந்து காட்டலாம்.

07. அந்தந்த பகுதிகளில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, பட்டி மன்றம் நடத்தி நம் சமூகத்தின் சுய அறிவுத் திறனை மேம்படுத்தலாம்.

பிறர் கவுரமாகப் பார்க்க வேண்டும் என யாரும் திருவிழாக்களை நடத்தாதீர்கள். இதனால் ஒரு பயனும் இல்லை. எவ்வளவுக்கெவ்வளவு சிக்கனமாய் திருவிழா நடத்த இயலுமே அப்படி நடத்தி மீதிப் பணத்தில் நற்பணி செய்யுங்கள்.

பெருமைகளைப் பேசிப் பேசி வீழ்ந்துகிடப்பது போதும்.

ஏழை எளியோருக்கு உதவும் மனப்பான்மையை வளர்ப்பதே நம் கண்ணணுக்கு நாம் செலுத்தும் உயர்ந்த மரியாதை.

எல்லா சமூகமும் விழித்துக்கொண்டது. நாம் எப்போது?

No comments:

Post a Comment