25.8.15

வாழ்க்கை வாழ்வதற்கே

கடவுள்
பேய்
சொர்கம் நரகம்
மறுபிறவி
கர்மா
தலைவிதி
பாவ புண்ணியத்தால் ஜாதி
கீழ் ஜாதி
மேல் ஜாதி
தீட்டு
வரம்
அருள்
ஜாதகம்
ஜோசியம்

இதுதான் ஒரு மனிதனின் முதல் எதிரி. எம்மதமானாலும் இப்படி குருட்டுத்தனம் உண்டு. இந்த எதிரிகளை ஒழிக்காமல் தெலுகன் எதிரி, மலையாளி எதிரி, கன்னடன் எதிரி என்பதில் எனக்கு ஆர்வமில்லை. உடன்பாடில்லை.

விருப்பப்பட்டால் உலகில் எங்கு வேண்டுமானாலும் சென்று வாழும் உரிமை யாருக்கும் இருக்க வேண்டும். இயற்கை பொதுவானது.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"

தாய்மொழிப் பற்று தேவை. ஆனால் பிறமொழி வெறுப்பு தேவையற்றது. ஒரு கன்னடனின் / சிங்களனின் / மலையாளியின் / தெலுகனின் / ஹிந்திக்காரனின் தமிழ் வெறுப்பை எப்படி ஏற்க முடியும்? அவ்வாறே பிற மொழிகள் மீதான நமது வெறுப்பும். ஒவ்வொரு மொழியிலும் நல்ல கருத்துக்களும் இலக்கிய வளமும் உண்டு. எந்த மொழியும் மேலானதும் இல்லை, எம்மொழியும் கீழானதும் இல்லை. தேவையென்றால் கற்கவும் பிழைக்கவும் செய்யலாம். திணிக்கப்படின் எதிர்க்கலாம்.

சமத்துவம் - சகோதரத்துவம் - சுதந்திரம் - ஜனநாயகம்.

ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வாழ்க்கையே சரியென நினைக்கிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே, அறிவுடனும் மகிழ்வுடனும்.

No comments:

Post a Comment