28.8.15

பாலியல் பலாத்கார தேசம்

இந்தியாவுக்கு மட்டுமல்ல‬‪, ரேப்புக்கும் தலைநகரம் டில்லிதான்‬..!!

NCRP என்ற அமைப்பின் ஆய்வுப்படி பெண்கள் மீதான வன்கொடுமை இந்தியா அளவில் 4% அதிகரித்திருக்கிறது. அதுவே டெல்லி என்று வரும்போது 2 மடங்காக அதிகரித்துள்ளது. பெண்களின் எண்ணிக்கை விகிதப்படி பார்த்தால் முதலிடம் குவாலியர், அடுத்ததாக ஜபல்பூர்.

டெல்லியில் 2013-ல் 1441 வழக்குகள் பாலியல் பலாத்கார வழக்குகள். அதுவே, 2014-ல் 1813-ஆக உயர்ந்துள்ளது. பாலியல் குற்றங்களில் மட்டுமல்ல கொள்ளை, வழிப்பறி, வண்டித்திருட்டு போன்ற வழக்குகளிலும் டெல்லிதான் முதலிடம்.

பாம்பே டெல்லியைவிட குறைவுதான் என்றாலும் பாம்பேவில் 2013 ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது 2014-ல் குற்றங்கள் 2 மடங்காக உயர்ந்துள்ளது. பாம்பேவில் 2013-ல் 391 வழக்குகள். 2014-ல் 607 வழக்காக கூடியுள்ளது.

போலீஸ் கஸ்டடி ரேப்பில் உத்தரப் பிரதேசம்தான் முதலிடம். மொத்தம் கஸ்டடி ரேப்பு-197. இதில் உத்திரபிரதேசத்தில் மட்டும் 189 லாக்கப் வல்லுறவுகள். பலபேர் சேர்ந்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவதில் 1 இடம் உத்தரப்பிரதேசம். 2-ம் இடம் ராஜஸ்தான். 3-ம் இடம் மத்தியப்பிரதேசம். 84% வன்புணர்ச்சி, சீண்டல், வன்கொடுமைகள் எல்லாம் சொந்தக் காரர்கள், அறிமுகமானவர்களாலேயே நடக்கிறது.

சென்ற ஆண்டில் நடந்த மொத்த கொலைகள் 34,000. சிறிதும், பெரிதுமான மோதல்கள், கலவரங்கள் 66,000. பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளின் எண்ணிக்கை 3,30,000 வழக்குகள். 1,56,000 வழக்குகள் பாலியல் வழக்குகள். 1,74,000 வழக்குகள் பெண்கள் மீதான வன்கொடுமைகள்.

ஒரு நாளைக்கு 905 வழக்குகள். ஒரு நாளைக்கு 37 பேர், 2 மணி நேரத்துக்கு 3 பேர் என பெண்கள் மீதான பாலியல் தாக்குதல், வன்கொடுமைகள் நடந்துகொண்டிருக்கிறது.

அதே போல் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தில் தமிழகம் 2-வது இடம். 1084 வழக்குகள். தினம் 2 குழந்தைகள் ஏதாவது ஒரு வகையில் துன்புறுத்தப் படுகின்றனர். முதலிடம் வழக்கம்போல் உத்தரப் பிரதேசம், 3637 வழக்குகள்.

மேலும், சிறார் குற்ற வழக்குகளில் (கொலை,கொள்ளை, திருட்டு, போதை) முதலிடம் வகிப்பது மகாராஷ்ட்ரா. 2-வது ஒரிசா, 3-வது குஜராத், 4-வது தங்கத் தமிழ்நாடு. இதுதான் பாரத புண்ணிய பூமியின் லட்சணம்.

பெண்களை தெய்வமாக மதிக்கும் இந்துக் கலாச்சாரத்தின் லட்சணம், உலகில் எய்ட்ஸில் 2-வது இடம். ஆபாசப்படம் பார்ப்பதிலும் முதலிடம் அரபு நாடுகள்தான். அதற்கடுத்ததாக முன்னிலிருக்கும் நாடு இந்தியா. 5 பேருக்கு ஒரு மனைவி. அவளையும் காப்பாற்றத் துப்பில்லாமல் சூதாட்டத்தில் அவளை வைத்து தோற்றது, அதில் பொறுக்கி கிருஷ்ணன்தான் முக்கிய கடவுளாம். இது மகா பாரதம்.

தசரதனுக்கு 64,000 மனைவிகள், பெண்ணைக் கடத்து, மூக்கறு, தீயில் இறங்கச் சொல் என்று பெண்களை மத, கலாச்சார ரீதியாக ஒடுக்குவது ராமாயணம். இதுதான் இந்தியாவின் இதிகாசங்களாம்.

இந்துக் கலாச்சாரத்தை பிரலிபலிக்கும் கடவுளின் கதைகளாம். இதை சிறுவயது முதல் பள்ளியில் பாடமாக சொல்லித் தருகிறார்கள். பிறகேன், பெண்கள் மீதான வன்கொடுமை நடக்காது. பாலியல் வன்முறை நடக்காது? குழந்தைத் திருமணம் நடக்காது?

முஸ்லீம் நாடுகளில் பெண்ணடிமைத் தனமும் பெண்கள் மீதான கொடூர வன்முறைக்கும் காரணம் குரான்தான். இந்த இருமதத்தையும் ஒழித்துக் கட்டினாலே உலகில் பாதி பிரச்சனை தீரும். குரான், பைபிள், ராமாயணத்தை, மகாபாரதம் கீதையை தடைசெய்ய வேண்டும்.

பெண்களே!

முழுவிடுதலை சோசலிச சமூக அமைப்பில்தான் கிடைக்கும் ஆனால் பாதி விடுதலையாவது பெற வேண்டுமென்றால் மதத்தை தூக்கியெறியுங்கள் கடவுள் சிலைகளை தூக்கிப்போட்டு மிதியுங்கள். புனித நூல்களை தீயில் எறியுங்கள். பர்தாவை பெட்ரோல் ஊத்திக் கொளுத்துங்கள். மதத்தைச் சொல்லி அடிமைப்படுத்த வரும் ஆண்களின் முகத்தில் ஆசிட்டை வீசுங்கள். மதமாம் மதம் மண்ணாங்கட்டி.

கட்டுரை : புஷ்கின்.

No comments:

Post a Comment