21.8.15

கவிஞர்கள் கவனத்திற்கு...!!!

தங்கள் முகநூல் பக்கத்தில் கவிதைக்கு மட்டுமே முக்கியத்துவம் தருபவர்கள் தயவுசெய்து ஒரு நாளைக்கு ஒரு கவிதை மட்டும் எழுதுங்கள்.

கிட்டத்தட்ட 50 கவிதை எழுத்தாளர்கள் நிறைந்த முகநூல் தொடர்பில் ஒரு நாளைக்கு 100 கவிதைகள் வாசிப்பது என்பது கவிதையை வாசிப்பதின் மேலேயே அயர்ச்சி வந்து கடந்துபோய்விடத் தோன்றுகிறது.

கவிதை என்பது ஒரு அனுபவம்.

ஒரு நல்ல கவிதை எழுதுபவன் கவிஞன் என அறியப்படுகிறான். அவன் கவிஞனாக அறியப்பட்ட காரணத்தால் பிற்பாடு அவன் எழுதுவதெல்லாம் கவிதை என்று எழுதுபவர்களால் நினைத்துக் கொள்ளப்படுவது மிக ஆபத்து. அது பல நல்ல வாசிப்பாளர்களைக் கொலை செய்துவிடவும் கூடும்.

மொழி வற்றிவிடப் போவதில்லை, அவ்வாறே உங்கள் அனுபவ நினைவுப் பதிவுகளும். ஆக, ஒரு வாரமானாலும் ஒரே ஒரு நல்ல கவிதை மட்டும் எழுதவாவது முயற்சியுங்கள்.

நல்ல ஒரு ஆத்மார்த்தமான கவிதைக்காக சற்று காத்திருங்கள். தவமிருங்கள். அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள்.

கவிதை ஆர்வலர்களை காப்பாற்றுங்கள். கவிஞர்களே, தயவுசெய்து கருணை காட்டுங்கள்.

கவனத்தில் கொள்ளுங்கள், கவிதைகளிலும் இப்படி வகை உண்டு.

பிளாஸ்டிக்
இரும்பு
ஈயம்
பித்தளை
வெண்கலம்
முத்து
மாணிக்கம்
பவளம்
வெள்ளி
தங்கம்
பிளாட்டினம்
வைரம்

உங்கள் கவிதை இதில் எந்த வகை?

No comments:

Post a Comment