9.11.19

மாவீரர் நாள் 2017

தனிநாடு கேட்டு எழுந்த கோரிக்கை இன்று 'ராணுவமே எங்கள் காணியைவிட்டு வெளியேறு' என்ற புள்ளியில் நிற்கிறது.

மொழியின்பேரால் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருந்த தமிழ் மக்களின் விடுதலைக்கான நியாயத்தை இன்னும் வெளியுலகம் புரிந்துகொள்ளவில்லை. அதை தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கடமை உள்ளது. ஈடில்லா மாபெரும் அறிவாளிகள், நேர்மையானவர்கள் எல்லாம் தங்களை கொடையாகத் தந்திருக்கிறார்கள் விடுதலைப் போராட்டத்திற்கு. இந்தியாவில் உள்ள எல்லா தேசிய இனங்களும் ஈழ விடுதலைக்கான நியாயத்தை உணர்ந்து ஆதரிக்கும் சூழல் ஏற்படுத்த வேண்டும். இன்னும் புலிகளை பயங்கரவாதிகளாகவே பார்க்கும் பார்வை இந்தியா முழுதும் இருக்கிறது. குறைந்தபட்சம் காஷ்மீர் விடுதலைக்காக அம்மக்கள் செயல்படும் அளவுக்கூட தமிழர்களின் செயல்பாடுகள் இந்தியாவுக்குள் இல்லை என்பதே உண்மை.

ஈழம் விடுதலை அடைந்தால் அதன் தாக்கம் நிச்சயமாக எல்லா தெற்காசிய தேசிய இனங்களிலும் பரவும். அதனாலேயே இப்போது அதற்கு ஆதரவுதர மறுக்கிறார்கள். எல்லா இன மக்களையும் ஈழத் தமிழினத்திற்கு நேர்ந்த; நேரும் கொடுமைகளை உணரும்படிச் செய்வதே தனி ஈழத்திற்கு பலம். அதற்கான தேவையே இல்லாதது போலவும், தேசிய இனங்களுக்குள் பகை மூட்டியும், புகழ்ச்சி மயக்கத்திலேயேயும் தமிழர்களை மிதக்க வைத்தும், புலிகளின் புகழ் பாடுவதே இறுதியான நிறைவானது என்பதாகவுமான புள்ளியிலேயும்தான் இன்றைய அரசியல் நிற்கிறது.

ஈழப்போராட்டம் எல்லா பக்கத்திலும் தோற்றுவிட்டது என்பதே நிதர்சனம். இதை நாம் நேர்மையாக ஏற்று அதன் காரணகாரியங்களை பரிசீலனை செய்ய வேண்டும். வெறும் சாகசவாதக்காரர்களாக புலிகளையும் பிரபாகரனையும் கொண்டாடும் மனோபாவப் போக்குத்தான் இங்கு நிறைந்துள்ளது. "இப்பேர்ப்பட்ட புலிகளாலேயே ஈழத்தை அடையமுடியவில்லை, புலிகளையே அழித்தனர் சிங்களர்கள், இனி எவனால் முடியும்?" என்றவாறான உளவியல் சிதைவையும் எண்ணத்தையும் கூடவே அது உருவாக்குகிறது.

நாம் தோற்றுள்ளோம் என்ற யதார்த்தத்தை நேர்மையாக உள்வாங்கும்போதுதான் வெற்றியடைவதற்கான தெளிவான பாதையை வகுக்க ஏதுவாகும்.

இனியாவது மேடைப் பேச்சாளர்களையே வியந்து பார்த்துக்கொண்டு நில்லாமல் செயலாற்றல் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தோள் கொடுத்து தமிழர் உரிமைப் போராட்டத்திற்கு தம்மால் இயலும் சிறு பங்களிப்பையும் செய்ய உறுதியேற்க வேண்டும் என்பதை உணர்ந்து மாவீரர்களின் தியாகத்திற்கு அனைவரும் வலுசேர்த்தால் நல்லது.

பிறப்பால் பேதம் வளர்க்கும் முறைமையற்ற தமிழர்நாடு அமையட்டும். ஈழப்போராளிகளின் தியாகமும் தலைவரின் அர்ப்பணிப்பும் அதற்கு முன்மாதிரியாக இருக்கட்டும்.
 
27.11.2017 

எல்லாவற்றுக்கும் இவரை அணுகலாம்

தமிழ்நாட்டின் அதிபரும்; தமிழக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும்; தமிழக காவல்துறையின் அதி உயர் அலுவலர் மற்றும் புலனாய்வுப் பிரிவு தலைவரும்; உலகின் ஒப்பற்ற புரட்சியாளரும்; தமிழர்களிலேயே அதிக #மானம் உள்ளவருமான திருவாளர் சீமான் அவர்கள், ஒருவரது இறப்பு குறித்து தெரிவித்துள்ளதாக இணையத்தில் உலவும் புரட்சிகர புலனாய்வு கருத்து இது.

மேலும், தமிழ்நாட்டில் யாரார் எதனால் எப்படி இறந்தார்கள்? என்ற விவரம் தேவைப்படுவோர் இவரை அணுகவும்.
 
26.11.2017
 

உலகமும் அறிவியலும்

மாயன் நாகரீகம் உலகம் (பூமி) தட்டையானது, அதன் நான்கு முனைகளிலும் நான்கு சிறுத்தைப் புலிகள் தாங்கி நிற்பதாக நம்பியது.

பெர்சியன் நாகரீகம் பூமியில் ஏழு அடுக்கு உலகம் உள்ளதாகவும் நாம் மேல் அடுக்கில் இருக்கிறோம் என்றும் நம்பியது.

பண்டைய சீன நாகரீகம் உலகம் என்பது ஒரு கனசதுரம் என நம்பியது.

கிமு ஆறாம் நூற்றாண்டில் முதன்முதலாக பூமி உருண்டையானது என்ற பேச்சு எழுந்தது. ஆனால் பெரிதாக கவனம் கொள்ளப்படவில்லை.

பிற்பாடு வந்த மதங்களும் பூமி தட்டையானது என்றே கூறி வந்தது. பூமி உருண்டையானது என கூறிய அறிஞர்கள் வீட்டுக்காவலில் வைக்கபட்டதும் உயிரோடு தீயிட்டு கொளுத்தப்பட்டதும் நடந்தது.

நவீனத்துவ காலங்கள் வரைக்கும் பூமியின் உள் என்ன இருக்கிறது என்பது கற்பனை கதைகளாகவே இருந்தது.
கிபி 1692-ல் தான் முதன்முதலாக பூமி ஒரு உலோகப் பந்து என்ற முடிவுக்கே வந்தனர்.

தற்சமயம் மிகத் துல்லியமாக பூமியின் அடுக்குகளையும், அதன் உள்ளிருப்புகளையும் அறிவியல் கண்டுபிடித்துள்ளது. அறிவியல் என்பது முற்றுபுள்ளி இல்லாத எண்கள் போல் முடிவற்ற ஒன்று. அதன் தேடல் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

கடவுளை துவைத்து காயப்போடும் முயற்சியில்...

தல Raj Arun
26.11.2017

பிரபாகரன் பிறந்த நாள் விழா 2017

தமிழீழத் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் 63 வது பிறந்தநாளை முன்னிட்டு 25-11-2017 ம் நாளன்று தோழர் கரு.அண்ணாமலை அவர்களின் தலைமையில், அம்பத்தூர் தாய்த்தமிழ் பள்ளியில் "கற்க கல்வி அறக்கட்டளை" சார்பில் இனிப்பு வழங்கியும் சுமார் 100 குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்கியும் கொண்டாடினோம். முன்னதாக தோழர் நாத்திகனின் "மந்திரமா? தந்திரமா?" அறிவியல் நிகழ்ச்சி குழந்தைகளுக்காக நடத்தப்பட்டது.
 
26.11.2017






 

ராகவேந்திரர் கட்டளைப்படியே உலகம் இயங்குகிறது எனில்

10 கோடி கொடுத்தாலும் உட்கார்ந்தபடிதான் ஆசீர்வாதம். எழுந்து கொடுத்தால் கெத்து போயிடும்.

எப்போதுமே "ராகவேந்திரர் கட்டளைப்படியே" உலகம் இயங்கும்போது சூப்பர்ஸ்டார் அரசியலுக்கு வந்தால்மட்டும் எப்படி எல்லா அநியாயங்களும் மாறிவிடும்?
 
25.11.2017
 

சொம்புகள் என்றால் இப்படித்தான்


மிரட்டப்பட்டதால் இறந்திருக்கிறார் சினிமா தயாரிப்பாளர் ஒருவர். இறக்கும் முன்னர் அதை விவரமாக எழுதி வைத்திருக்கிறார். அது பொய்யாம். வட்டிக்கு கொடுத்தவரின் சொம்புகள் சொல்வதெல்லாம் உண்மையாம்.

அதாவது, என்னைக் கற்பழித்தான் என்று ஒருவன் மீது குற்றம்சாட்டி ஆதாரத்துடன் எழுதி வைத்துவிட்டு ஒரு பெண் இறந்துவிடுகிறாள். ஊரிலுள்ள பெண்கள் எல்லாம் வந்து அவன் அப்படியில்லை, உத்தமன், என்னை கற்பழிக்கவில்லை, அவன் கற்பழித்திருக்க மாட்டான் என்று தானாய் வந்து சொல்வதெல்லாம் எந்த வகை டிசைன்கள்?

சிறையிலிருக்கும் ஒவ்வொருவனுக்கும் நற்சான்றிதழ் வழங்க எவ்வளவோ பேர்கள் இருப்பார்கள் ஊரில். அப்படியெனில் சட்டமும் நீதியும் முழு முட்டாளா? பாதிக்கப்பட்டவன் தனக்கு நேர்ந்ததை சொல்கிறான். இவர்களுக்கு என்ன அதில் பிரச்சினை?

சொம்பே, உனக்குப் பிரச்சினை என்றால் நீயும் சென்று புகார் கொடு. இல்லையென்றால் மூடிக்கொண்டிரு.

வான்டடாக வந்து ஓவராக கூவுவது ஏன்? வெட்கமாக இல்லையா? கேட்டதும் பணம் கொடுப்பவனுக்கு வட்டியும் கொடுத்துவிட்டு விளக்கும் பிடிப்பீர்களா?
25.11.2017

E-டீக்கடை (Facebook)

நம் எல்லா கிராமத்து டீக்கடைகளிலும் ஒரு முக்கியமான வழக்கமுண்டு.

ஒவ்வொரு MLA, MP, உள்ளாட்சித் தேர்தலிலும் நல்லவன் யார்? அறிவாளி யார்? எவன் வந்தால் நாட்டு நிலைமை மாறும்? என்று எதுவும் யோசிக்காமல் தன் ஜாதிக்காரனாகப் பார்த்து ஓட்டு போட்டுவிட்டு பின்னர் வருசம் 365 நாளும் நாட்டில் நடக்கும் அநியாயங்களைப் பற்றி யோக்கியன் மாதிரி அரசியல் பேசுவார்கள். அதே அநியாயங்களை ஊருக்குள்ளேயே அவனவன் ஜாதிக்காரன் செய்தால் மூச்சுவிடாமல் கண்டுகொள்ளாமல் கமுக்கமாய் இருந்துவிடுவார்கள். மேலும் அப்படியான அறிவு வீங்கிய சிலர், 'நாட்ல எவந்தான் யோக்கியம்?' என்று சப்பைகட்டுகட்டி சமாளிப்பார்கள்.

e-டீக்கடையான முகநூலும் இப்படித்தான். அயோக்கியத்தனம் பண்ணுபவன் தன் ஜாதிக்காரன் என்று தெரிந்தும் கமுக்கமாய் இருப்பது; அல்லது சப்பைகட்டுகட்டி சமாளிப்பது; அல்லது பகிரங்கமாய் அந்த அயோக்கியத்தனத்திற்கு தொடர்பேயில்லாத விளக்கம் தந்து ஜிகினா ஒட்டி ஆதரிப்பது என்று எல்லாமும் செய்துவிட்டு, பின்னர் 365 நாளும் நாட்டைப்பற்றி அக்கறைப்படுவது.

எவ்வளவுதான் அறிவிருந்தும் இதனால் என்னதான் பயன்?

நீதி, அநீதி என்ற ஒரு அளவுகோல் போதாதா விமர்சனம் செய்ய? அதைத்தாண்டி மற்றதெல்லாம் எதற்கு?
 
25.11.2017
 

தமிழ்த் தேசிய தலைவர் பிறந்த நாள் விழா 2017

தமிழ்த்தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் 63 வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை 25-11-2017 அன்று மாலை 3 மணிக்கு அம்பத்தூர் தாய்த்தமிழ் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா.

அம்பத்தூர் பகுதி மற்றும் அருகிலுள்ள பகுதி தோழர்களை பங்கேற்க அழைக்கிறோம்.

தொடர்புக்கு

கரு.அண்ணாமலை,
அறக்கட்டளை செயலாளர்,
9444011124
 
24.11.2017
 

நம்ம மதத்தோட ஸ்பெஷல்

இந்தக் கடவுள் கம்பெனி ஹை ஆபீசர்களின் கால்களில் செருப்பு இருந்திருந்தால் இன்னும் சரியாக இருந்திருக்கும்.

மகிழ்ச்சியுடன் அருளைப் பெறுவது தெலங்கானா அமைச்சர் பாட்டீலாம். படிச்சாலும் அறிவு வராதுங்கறது நம்ம மதத்தோட ஸ்பெஷல்.

நல்லவேளை நம்ம ஊரு "கால் & டயர் நக்கி கோஷ்டிகள்" இதுங்களவுக்கு போகல. நம்மாளுங்க வேற லெவல்.
 
21.11.2017
 

முடிவிலாத் துயரம்

இதைச்சொல்ல; இப்படிச்சொல்ல கொஞ்சம்கூட வெட்கமே இல்லை. இதெல்லாம் இந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர்.

இந்தியா உண்மையிலேயே ஒரு நாடாகத்தான் இருக்கிறதா?

பொறுப்புக்கு வருபவர்களுக்கு கொஞ்சமாவது ஒரு தகுதி இருக்க வேண்டாமா?

'எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்கிறோம், உங்கள் பாதுகாப்பு எங்களுக்கு எதற்கு? நடையைக் கட்டுங்கள்' என்று சொல்ல ஒரு வலுவான இயக்கமும் தலைவனும் இங்கே இல்லாதது தமிழ் மீனவர்களின் முடிவிலாத் துயரம்.
 
21.11.2017
 

அப்பாவிகள் கவனிக்கவும்

உலகில் சுமார் 250 நாடுகள் உள்ளன. இதை அனைத்தையும் ஆட்சி செய்துகொண்டிருப்பவர்கள் எல்லாம் பெரிய அறிவாளிகளாகவும் சிந்தனைச் சிற்பிகளாகவுமே இருப்பார்கள் என்பது அரசியல் தெரியாத மக்களின் பொதுப்புத்தியில் பதிந்திருப்பவை. இந்த கருத்துடையவர்களை அடையாளம் காண்பது மிக சுலபம். சமூகத்தில் அதிகம் பக்தி நிறைந்தவர்களாகவும், பணக்காரர்களாகவும், அவரவர் பகுதிகளில் பெரிய புள்ளிகள் மாதிரியும், கௌரவமாக வாழ்பவர்கள் என்றும் எண்ணிக்கையில் பெருமளவில் இவர்கள் இருக்கிறார்கள். ஏறக்குறைய உலகெங்கும் வலதுசாரிக் கல்விமுறையே இருப்பதால், எந்த ஒரு சமூக அவல உதாரணங்களைக் கண்டும் இவர்களால் இடதுசாரி பார்வைக்கு வர இயலுவதில்லை.

"பதவியில் இருக்கிறவர்களையும் ஆள்பவர்களையும்" அறிவாளிவாளிகளாக கருதும் அப்பாவிகள் தங்கள் எண்ணத்தை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பாக இந்தியாவிலிருந்து சமீபத்திய இன்னொரு உதாரணம்தான் திருவாளர் மோடியும் அவரது உளறல்களும்.
 
08.11.2017
 

கலெக்டர்கள் எனும் மன்னர்கள்

பாலாவின் கார்ட்டூனைக் கண்டு கோபமடைந்த நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி இவன்தானாம்.

ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற என்னவெல்லாம் படித்திருப்பான் இவன்? ஏழைகளுக்கு எப்படி பணக்காரன் சேவை செய்வான்? மக்களிடம் எப்படி இதை நம்ப வைக்கிறார்கள்? மக்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதைவிட கலெக்டரின் அரண்மனைகளில் வேறென்ன முக்கியப் பணிகள் இருக்கும்?

மன்னர் வாழ்க்கை வாழும் இந்த பெரிய சம்பள; மெத்தப்படித்த மேதாவி கலெக்டர்களையெல்லாம் மீறி நாட்டில் எப்படி ஊழல் நடக்கிறது?
 
06.11.2017
 

அன்பை போதிக்கும் ஹிந்து மதம்

"ஹிந்து தீவிரவாதம்" என்று கமல்ஹாசன் சொன்னது மிகப்பெரிய பொய்.

இராமபிரானின் சீடர்கள், சக மனிதர்களிடத்தில் விதவிதமாக அன்பை போதிக்கும் ஒவ்வொரு படத்தையும் நன்றாகப் பாருங்கள்.

முழு இராமராஜ்யத்தில் இதுபோல் இன்னும் விதவிதமான மானுட அன்புகள் காத்திருக்கக்கூடுமோ என்னவோ.!!
 
06.11.2017
 

இதுதான் மக்களாட்சியா?

முன்னர் தோழர் வளர்மதியின் துண்டறிக்கைக்கு பயந்தவர்கள், திருமுருகனின் மெழுகுவர்த்தி ஏந்தலுக்கு பயந்தவர்கள், இப்போது பாலாவின் கார்ட்டூனுக்கு பயப்படுகிறார்கள். சட்டங்களோ தண்டனையோ அவர்களுக்கு பயம் கொடுக்கவில்லை. ஒருபோதும், தவறு செய்ய மட்டும் ஆட்சியாளர்கள் பயப்படுவதாய் தெரியவில்லை.

இதுவரையில் கந்து வட்டிக்கு விட்ட எவனையும் அடித்து இழுத்துச் செல்லாத காவல்துறை அதைப் பற்றி படம் வரைந்தவரை அடித்து இழுத்துச் செல்கிறதெனில் இங்கு கருத்துரிமை என்பதுதான் என்ன?

பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத கலெக்டருக்கு என்ன தண்டனை?

பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட SP-க்கு என்ன தண்டனை?

உண்மையிலே இங்கு மக்களாட்சிதான் நடக்கிறதா?


மக்கள் பணி செய்யவேண்டிய ஒவ்வொரு கலெக்டர், மாஜிஸ்ட்ரேட், தாசில்தார், இன்ஸ்பெக்டர், மணியக்காரன், தலாரிகள்கூட பெரிய மன்னர் பரம்பரை வாரிசுகள் போலவே நடந்துகொள்கிறார்களே?

உண்மையிலே இது மக்களாட்சியா? இல்லை மெத்த அதிகாரம் உள்ளவர்களின் ஆட்சியா?

சேகர் ரெட்டி மற்றும் இன்னும் பல ஊழல்வாதிகளை எல்லாம் எப்போது அடித்து உதைத்து கைது செய்யும் காவல்துறை?
05.11.2017

ஐ லைக் அக்கா தமிழிசை

"கமலாலயத்தில் 3 நாட்களாக உணவை வைத்துக் கொண்டு காத்திருக்கிறோம். மக்கள் யாருமே வராதது வருத்தமளிக்கிறது"

- தமிழிசை சௌந்தரராஜன்

# வெள்ளத்துல சிக்கியிருக்கிறவங்க எல்லாம் பிஜேபி அலுவலகம் வரைக்கும் எப்படியாவது நீந்தி வந்து சாப்பிட்டுட்டுப் போகனுமாம்.

என்ன இருந்தாலும் ஆக்கின சாப்பாட்டை வெச்சிக்கிட்டு 3 நாளா காத்திருப்பது எல்லாம் வேற லெவல்.

ஐ லைக் யூ அக்கா...
 
05.11.2017
 

தொழர்களுக்கு நன்றி...

சென்னை மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் இணையதளப்பொருப்பாளரும் கற்க கல்வி அறக்கட்டளையின் துணைத்தலைவரும் ,சிறந்த பெரியாரியல் சிந்தனைவாதி ,திரைப்பட உதவி இயக்குனர் தோழர் மாசிலா வினாயகமூர்த்தி அவர்களுக்கு இன்று பிறந்த நாள் தோழர் இணையதளத்தில் திராவிடர் இயக்கத்தை மற்றும் தந்தை பெரியாரை ,டாக்டர் அம்பேத்கர் பற்றி விமர்சனங்கள் வைத்தால் சாதி வெரியார்கள் மதவெரியர்களுக்கு தகுந்த ஆதாரங்களுடன் பதில்கள் அளிக்கக்கூடிய சிறந்த சிந்தனையாளர் தந்தை பெரியார் திராவிடர் கழக வளர்ச்சிக்கும் கற்க கல்வி அறக்கட்டளையின் வளர்ச்சிக்கும் பாடுபடும் தோழரை நீங்களும் வாழ்த்துங்கள் தோழர்களே !
 
04.11.2017




 

இது சிவனுக்கு அழகா?

"இந்தப் பூதலத்தில் தீதுற்ற செல்வமென்?
தேடிப் புதைத்த திரவியமென்?
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே"

'சுவேதாரண்யன்' என்ற பெயருடன் பூம்புகாரில் வாழ்ந்த பெரும் வணிகனுக்கு "மருதபிரான்" என்ற மகனாய் வந்து சேர்ந்து வளர்ந்து ஆளாகி கடல் கடந்து வணிகம் செய்து திரும்பி வரும்போது மாட்டுச்சாணி வட்டைகளை குவித்து வந்து "காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே" என செல்வம் குவிப்பது பயனற்றது என்ற ஞானத்தை உணர்த்திவிட்டுச் சென்றானாம் சிவன். இது நடந்ததாக வரலாறு சொல்வது 11-ம் நூற்றாண்டில். அதன் பின்னர் 'சுவேதாரண்யன்' என்ற அந்த பெரும் வணிகன் தன் உடைமைகள் பொன் பொருள் உறவுகள் அனைத்தும் துறந்து பட்டினத்தாராக காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து வாழ்வின் நிலையாமை பற்றி மக்களுக்காகப் பல பாடல்களைப் பாடி சிவனடி சேர்ந்தார்.

11-ம் நூற்றாண்டில் வந்துபோன சிவன் அதன்பின்னர் ஏனோ வரவில்லை. உலகமே; இந்தியாவே கார்ப்பரேட்களால் சூறையாடப்படும் இந்த காலசூழலில் இதேபோல் தனியார் முதலாளிகளுக்கு வாரிசாய் பிறந்து ஞானம் போதித்தால் நல்லது. யாரேனும் மெய்யான பக்தர்கள் நாட்டின் நிலையை அவருக்கு உணர்த்த முயற்சிக்க வேண்டும்.

பட்டினத்தாருக்கு ஞானம் போதித்த சிவன், அம்பானி அதானிகளுக்கும் லாப வேட்கை கொண்ட எல்லா வணிகர்களுக்கும் கொஞ்சம் வகுப்பெடுக்க வேண்டும். இல்லையேல் இனி இம்மண்ணில் பிறக்கும் குழந்தைகளின் வாழ்வாதாரம் என்னாவது? சுவேதாரண்யனை மட்டும் அப்படி அலையவிட்டது ஒருதலைப்பட்சமாகிவிடும் அல்லவா? இது சிவனுக்கு அழகா?
 
01.11.2017
 

அம்மா ஆதிலட்சுமி

தன் வாழ்நாள் முழுதும் மாடு மேய்த்தே எங்களை ஆளாக்கி விட்டுச் சென்ற என் அம்மா "ஆதிலட்சுமி" யின் 8-வது நினைவு நாள் இன்று. எனைப் பெற்றதில் ஒருபயனும் அறியாத எம் அம்மாவின் முகத்தைப் பார்க்கும்போதெல்லாம் எழும் குற்றவுணர்வுக்கு அஞ்சி உடன் வைத்துக்கொண்டே எப்போதாவது பார்க்கும் நிழற்படம்.

பட்டகடன் தீர்க்க, அம்மா பெயர் வைப்பதற்காகவேணும் எனக்கொரு மகள் பிறப்பாள்.
 
01.11.2017
 

இன்னும் எவ்ளோ நாளைக்குதான்...?

"சென்னை மக்கள் வெள்ளத்தை பற்றி அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் ஜெயக்குமார்"

# இதை நெனச்சி அச்சப்படலய்யா அமைச்சரே, இன்னும் எவ்ளோ நாளைக்கி உங்க ஆட்சின்னு நெனச்சிதாய்யா அச்சப்படறோம்...
 
31.10.2017 

காறித்துப்பும் மழை

ஒவ்வொரு முறை வரும்போதும் சென்னையை காறித்துப்பிவிட்டுச் செல்கிறது மழை. அரசுக்கோ தொடர்புடைய அலுவலர்களுக்கோ கொஞ்சமும் உறைக்கவே இல்லையென தெரிகிறது.

2017, நவ நாகரீகம், பல கல்லூரிகள், தொழில் நுட்ப வளர்ச்சிகள், அறிவியல் கருவிகள், ஆகச் சிறந்த அறிவாளர்கள், ஊழல் அரசியல்வாதிகள் சூழ் சென்னைமா நகரம்....???
 
31.10.2017

திமுக எப்போது திருந்தும்?

எல்லார்க்கும் பொதுவென்பதே நாடு

இதெல்லாம் மக்களுக்குள் பிரிவை வளர்க்கவே வழிவகுக்கும்.

ஜாதிகளை சீண்டி அரசியல் செய்யும் அதே பழைய லட்சணத்துலதான் திமுக தொடர்ந்து பயணிக்கும்னா...

சிலாக்கி டும்.
 
31.10.2017
 

இராஜராஜ சோழனும் ஜாதியும்

5 ஜாதியினர் உரிமை கொண்டாடும் இராஜராஜ சோழன் எந்த ஜாதி? அதற்குப் பிறகு வந்தேறிகளிடம் தோற்றுப்போனவர்கள் எந்த ஜாதி? தமிழர் மண் வளங்களை பாழாக்கும் கார்ப்பரேட்களின் எல்லா மோசமான திட்டங்களையும் எதிர்த்து போராடி வெற்றி பெற்றது எந்த ஜாதி?

தஞ்சையை ஆக்ரமித்த சரபோஜிகளின் வாரிசுகள் இன்றும் 88 பொறுப்புகளில் ஆதிக்கத்துடன் இருக்கின்றனராம். தமிழர்கள் யாராலும் அவர்களை விலக்கிவிட்டு அந்த இடங்களை கைப்பற்ற முடியவில்லையாம். இதற்கு எதிராக இதற்குமுன்னர் போராடியது எந்த ஜாதி? இனியும் போராடப்போவது எந்த ஜாதி?
 
30.10.2017
 

வரியா? கந்துவட்டியா?

GST = 28%

கந்துவட்டி = ?
 
25.10.2017

முடியாமல் போவது ஏனோ?

50 ஆயிரம் பரிசு அறிவித்து நாயைக் கண்டுபிடிக்க முனைப்பு காட்டும் தமிழக காவல்துறையால்,

கந்துவட்டிக்காரர்களையும் சட்டத்தை மீறும் காவல்துறை அதிகாரிகளையும் என்றைக்கும் கண்டுபிடிக்கவே முடியாமல் போவது ஏனோ?

அந்த கந்துவட்டிக்காரனும் அவனுக்கு சொம்பு தூக்கிய போலிசும் யாரென இன்னும் தெரியவில்லையா காவல்துறைக்கு?

23.10.2017




மக்களாட்சி

மக்களே தாமாக தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் மக்களாட்சி. 
 
யார் மயிரைப்பிடுங்க இயங்கிக்கொண்டிருக்கிறது அரசு நிர்வாகம்? காவல்துறை நீதிமன்றம் எல்லாம் யாருக்காக?
 
என்றோ வாழ்ந்து போனவனின் எலும்பையெல்லாம் தோண்டியெடுத்து எங்கள் ஜாதியென பெருமை பேசிக்கொள்ளும் மாபெரும் அறிவு படைத்தோர்கள் இந்த கந்துவட்டி விடுபவர்களெல்லாமும் எங்கள் ஜாதிதானென விளம்பரப்படுத்திக் கொள்ளாதது ஏன்?
 
23.10.2017

 

8.11.19

செத்துருங்கடா

விமர்சனத்தை தாங்க முடியலன்னா செத்துருங்கடா.

இது யாரோட மண்ணு? உங்களோடது மட்டுமா?
 
20.10.2017

கூடுதல் வரி விதிக்கலாம்...

தமிழ் தெரியாத ஒரு தம்பதிகள் தங்கள் 2 வயது குழந்தையுடன் துப்புரவு பணி செய்துகொண்டிருந்தனர் இன்று காலையில். ஆந்திர கர்நாடக எல்லைதான் பூர்வீகமாம். மாதம் 5500 ரூ ஊதியம். தற்காலிகப் பணி. வேற்றூரில் வேற்று மொழிக்காரர்களைப் பார்த்தால் எளிய மக்களுக்கு வரும் சிறு அச்சம் கலந்த தயக்கமான பாவனையில் சம்பளக்குறைவு பற்றி சலிப்புடன் ஹிந்தியில் அவர்கள் சொன்னார்கள். எந்த ஊர்? எவ்வளவு ஊதியம்? பணி நிரந்தரமா தற்காலிகமா? என்று மட்டும்தான் நான் கேட்டேன்.

10 ஆண்டுகளுக்கு முன்பு சண்டிகாரை சுற்றியபோது அங்கு பலரும் சொல்லக்கேட்டேன், இங்கு துப்புரவு ஆட்கள் எல்லாம் தமிழர்கள்தான் என்று. இப்போதைய நிலவரம் தெரியவில்லை.

தீபாவளி நாட்களில் அனைத்து பட்டாசு விற்பனையிலும் தனியாக கூடுதல் வரி விதித்து அந்நிதியை துப்புரவு பணியாளர்களின் வாழ்வு மேம்பாட்டிற்கு மட்டுமே செலவிடும்படி ஆவண செய்யலாம் அரசு.
 
19.10.2017
 

அடுத்த 2 மாசத்துக்கு பிஸியோ பிஸி...

நரகாசூரன் சீசனுக்கு பை பை...

இனி மூலை முடுக்கெல்லாம் சாமியேய்ய்ய்ய்ய்ய்யி...

அடுத்த 2 மாசத்துக்கு இந்த பந்தள மகராசனோட பையன் புலிப்பாலை கறக்கப் போவாரு.

தமிழ்நாடும் தமிழர்களும் அடுத்த 2 மாசத்துக்கு பிஸியோ பிஸி.

19.10.2017 


தீபாவளி 2017

1.    நரகாசூரன் என்னைக்கி பொறந்தான்? பொறக்காமயே வருசாவருசம் எப்படி ஒருத்தன் சாகமுடியும்? நரகாசூரன் நல்லவனா? கெட்டவனா? அப்பனே அவனைக்கொன்னான்னா ரெண்டு பேருக்கும் இடையில சண்டை மூட்டி விட்டவன் யாரு? ரெண்டுபேருக்கும் என்ன பிரச்சினை? கடவுளே பொய்னா நரகாசூரனும் பொய்தானே? இப்ப நாடு இருக்குற பிரச்சினைக்கி இதெல்லாம் எவ்ளோ முக்கியம்?

2. முன்னொரு காலத்துல நரகாசூரன் இந்தியாவுக்கு அதிபரா இருந்தார். பட்டாசு மக்களுக்கு கேடுன்னு தடை உத்தரவு போட்டார். பட்டாசு தொழிலே அழியிற மாதிரி ஆகிடுச்சி. உடனே பட்டாசு முதலாளிங்க எல்லாம் கடவுளை பார்த்து தடையை நீக்க கோரிக்கை வெச்சாங்க. உடனே கோபம் வந்து நரகாசூரனை கடவுள் கொன்னுட்டாரு.

3. நம் MLA, MP, அரசியல்வாதிகள், அரசு ஊழியர்களைவிடவும் மோசமானவனாக இருந்திருக்க மாட்டான் நரகாசூரன்.

18.10.2017






யார் பொறுப்பு?

கட்டு விரியன் & நல்ல பாம்புகளிடமுள்ள விஷத்திற்கு அவைகளா பொறுப்பு?
 
17.10.2017

யாருக்கு திருநாள்?



தீபாவளி யாருக்கு திருநாள்?

"வணிகர்களுக்கு"

(தை பொங்கலை; தீபாவளியை எதிர்பார்த்து காத்திருந்த நாட்கள் அந்நாட்களைவிடவும் மிக அழகானவை)

17.10.2017

நண்பர்களுடன்

அண்னாதுரை திரைப்பட பின்தயாரிப்பு பணியின்போது...

17.10.2017

உழவை நிறுத்த வேண்டும்

உழவர்கள் விற்கும் நெல்லின் விலை மட்டும் அப்படியே இருக்கிறது. வணிகர்கள் விற்கும் அரிசியின் விலையோ நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டிருக்கிறது. முதலாளிகள் விற்கும் உணவுகளின் விலையோ அதிவேகமாய் வளர்ந்துகொண்டே இருக்கிறது. எல்லா உழவர்களும் கொஞ்ச நாளுக்கு உழவை நிறுத்த வேண்டும். உணவகங்கள் நடத்தி லாபம் பார்க்க வேண்டும்.
 
17.10.2017

டெங்கு அவமானம்

அணு ஆயுதம் உள்ள நாட்டை கொசுக்கள் அச்சுறுத்துவதா? அவமானம். மன்னனுக்கு டெங்கு வராதவரை மக்களுக்கு விடிவில்லை

16.10.2017

யாரெல்லாம் தமிழன்?

"பிரபாகரனை தலைவனாக ஏற்கும் அனைவருமே"
 
16.10.2017

அம்மாவோட ஆன்மா எல்லாம் எந்த மூலைக்கு?

எம்.ஜி.ஆரே இவங்க காலடியிலயாம். அப்ப இந்த அம்மாவோட ஆன்மா எல்லாம் எந்த மூலைக்கு?

மக்களெல்லாம் கீழ இருக்குறாங்க. அவ்ளோ உயரத்துல பார்த்துகிட்டு யாரை கும்புடுறாங்க? ஒருவேளை, மேலயிருந்து பார்த்தா டெல்லி தெரியுமா?
 
15.10.2017
 

stop killing elephants...

தந்தத்துக்காகவே யானைகள் கொடூரமாகக் கொல்லப்படுகின்றன. தந்தத்தாலான பொருட்களை தயவுசெய்து வாங்காதீர்கள்.

#stopkillingelephants
#lifesentencetopoachers.
 
14.10.2017
 

எந்த இடத்திலும் நேர்மையில்லை

"கோயில் திரையரங்கம் மதுபானக்கடை" மூன்றுமே தமிழன் அதிகம் புழங்குமிடம். இந்த எந்த இடத்திலும் நேர்மையில்லை, கட்டணக்கொள்ளை.
 
13.10.2017

எங்களுக்கும்தான் மகாபிரபு...

"விஷத்தை குடித்து ஜீரணிக்கும் சக்தியை கடவுள் எனக்கு கொடுத்துள்ளார்" - மோடி.

# மோடி & எடப்பாடி ஆட்சியிலெல்லாமும் பல கூத்துக்களை ஜீரணித்துக்கொண்டு உயிர் வாழும் சக்தியை அதே கடவுள் மக்களுக்கும் கொடுத்துள்ளார் மகாபிரபு...!!

# நீங்க எங்க ஜீ அதை குடிக்கிறீங்க? அதான் நைஸா "புதிய இந்தியா"ன்னு எங்ககிட்ட தள்ளிவிட்டுர்றீங்களே...
08.10.2017

இராணுவ வீர்ர்களுக்கு அரசு தரும் மரியாதை

அருணாச்சல பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த இராணுவ வீரர்களின் உடல்கள். சவப்பெட்டி கூட இல்லாமல் அட்டைப் பெட்டிகளில் சுற்றப்பட்டு கிடக்கிறது. நாட்டைக் காக்கும் இராணுவ வீர்ர்களுக்கு அரசு தரும் மரியாதை இதுதான்.

மத்தியில் ஆளும் போலி தேசபக்தர்களின் அயோக்கியத்தனத்தை மக்கள் உணரட்டும்.
 
08.10.2017
 

 

கடமையை கடுமையாக செய்ய வேண்டும்...

சிவப்பு விளக்கு எரிந்ததை கவனிக்கவில்லை. போக்குவரத்து விதியை மீறிய என்னை மடக்கி 1100 ரூபாய் அபராதம் போட்ட வளசரவாக்கம் காவற்துறையை நான் வன்மையாக பாராட்டுகிறேன்.

இதேபோல் எல்லா விதத்திலும் சட்டம் தன் கடமையை கடுமையாக செய்ய வேண்டும்.
 
08.10.2017
 

அரசாங்கம் வைத்த "செக்"...

தான் ரொம்ப அழகு என்று எண்ணிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு அரசாங்கம் வைத்த "செக்"தான் ஆதார் அட்டையும் வாக்காளர் அட்டையும் என்பது நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?
 
08.10.2017

சோளிங்கரில்...

"பஞ்சுமிட்டாய்" இயக்குநர் மோகன் அவர்களுடன்...

08.10.2017
 

எங்கதெ - இமையம்

"காதல்ல தோல்வி அடஞ்சி புலம்பிச் சாகாதவன் வாழ்க்க பூ பூக்காத, காய் காய்க்காத மரம்ண்டானு காலேஜில படிக்கும்போது ரூம்மேட் தணிகாசலம் சொன்னது ஞாபகத்துக்கு வந்துச்சி. அடச் சனியனேன்னு என்னையே திட்டிக்கிட்டேன்..."

- எழுத்தாளர் இமையத்தின் 'எங் கதெ' நாவலிலிருந்து...

(செமய்யா இருக்கு படிக்க. படிச்சி முடிச்சதும் சுருக்கம் எழுதுறன்)
 
08.10.2017
 

அபாய கட்டத்தில் இந்தியாவும் ஜனநாயகமும்...

அபாய கட்டத்தில் இந்தியாவும் ஜனநாயகமும்...

07.10.2017
 

மோடியை நம்புகிறார்களா?

பாஜக ஆட்கள் மோடியை நம்புகிறார்களா என்று சோதிக்க ஒரு எளிய வழி...

அவர்களின் வசதிக்கேற்ப அவர்களிடம் கடன் கேளுங்கள். மோடி 15 லட்சம் தந்ததும் வட்டியுடன் திருப்பித் தருவதாக உறுதி கொடுங்கள். அவர் எந்தளவு பாஜக விசுவாசி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
 
07.10.2017

அவதார புருஷன்

நித்தி ஒரு மகாசக்தி வாய்ந்த அவதார புருஷன். அவரே இன்னொருத்தரை வணங்குகிறார்னா அவர் எவ்ளோ பெரிய மகாசக்தி வாய்ந்த அவதார புருஷனா இருக்கனும். Great....
 
06.10.2017