9.11.19

இதுதான் மக்களாட்சியா?

முன்னர் தோழர் வளர்மதியின் துண்டறிக்கைக்கு பயந்தவர்கள், திருமுருகனின் மெழுகுவர்த்தி ஏந்தலுக்கு பயந்தவர்கள், இப்போது பாலாவின் கார்ட்டூனுக்கு பயப்படுகிறார்கள். சட்டங்களோ தண்டனையோ அவர்களுக்கு பயம் கொடுக்கவில்லை. ஒருபோதும், தவறு செய்ய மட்டும் ஆட்சியாளர்கள் பயப்படுவதாய் தெரியவில்லை.

இதுவரையில் கந்து வட்டிக்கு விட்ட எவனையும் அடித்து இழுத்துச் செல்லாத காவல்துறை அதைப் பற்றி படம் வரைந்தவரை அடித்து இழுத்துச் செல்கிறதெனில் இங்கு கருத்துரிமை என்பதுதான் என்ன?

பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத கலெக்டருக்கு என்ன தண்டனை?

பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட SP-க்கு என்ன தண்டனை?

உண்மையிலே இங்கு மக்களாட்சிதான் நடக்கிறதா?


மக்கள் பணி செய்யவேண்டிய ஒவ்வொரு கலெக்டர், மாஜிஸ்ட்ரேட், தாசில்தார், இன்ஸ்பெக்டர், மணியக்காரன், தலாரிகள்கூட பெரிய மன்னர் பரம்பரை வாரிசுகள் போலவே நடந்துகொள்கிறார்களே?

உண்மையிலே இது மக்களாட்சியா? இல்லை மெத்த அதிகாரம் உள்ளவர்களின் ஆட்சியா?

சேகர் ரெட்டி மற்றும் இன்னும் பல ஊழல்வாதிகளை எல்லாம் எப்போது அடித்து உதைத்து கைது செய்யும் காவல்துறை?
05.11.2017

No comments:

Post a Comment