8.11.19

எங்கும் காவிமயம்; அபாயத்தில் கல்வி...

"எங்கும் காவிமயம்; அபாயத்தில் கல்வி"

ராணிப்பேட்டை சிப்காட், ஹிந்து வித்யாலயா பள்ளியின் CBSE 8-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தின் நடுவே உள்ள விளம்பரம் இது. புத்தகமோ வெறும் xerox பிரதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்ல 3-ம் வகுப்பு தமிழில் "அர்ஜுனன்" பற்றி தனிப்பாடம். துவக்கத்திலேயே சமஸ்கிருத சுலோகங்கள்.

ஹிந்து ஹிந்திய தேசியத்தை எதிர்க்கவே வாய்ப்பில்லாத ஒரு கல்வி முறையை அவர்கள் வெற்றிகரமாக விதைத்துவிட்டார்கள். இனி அவர்கள் சொல்வதை நம்புவதே அறிவு, அறிவாளிகள். மீண்டும் "வர்ணாசிரம மனு தர்ம" இந்தியாவை மீட்பதே அவர்கள் இலக்கு.

இந்தியாவுக்குள் யார் எந்தத் தேசியம் பேசினாலும் அதில் அறியாமை மூடநம்பிக்கைகளை ஒழிப்பதும், ஜாதி மத பேத ஏற்றத்தாழ்வற்ற முழு தனிமனித ஜனநாயகத்தை கட்டமைக்கவுமான "தீவிர பார்ப்பனீய எதிர்ப்பு" இல்லையேல் அதில் ஒன்றும் பயனில்லை.

"ஹிந்துத்துவா" என்பது பிற மதத்தினர்களுக்கு மட்டுமல்ல, தான் ஹிந்து என்று புராண பெருமையில் ஊறி நம்பிக்கொண்டு வாழும் எல்லா அப்பாவி ஏழை எளிய மக்களுக்குமான எதிரிதான்.

(தமிழ்நாட்டு பாடநூல் புத்தக முகப்பிலும் கூட இதேபோல் இருப்பதை கவனிக்கவும்)
 
05.10.2017

 

No comments:

Post a Comment