26.2.18

ஹிந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்


 31-05-2017

மாட்டிறைச்சியும் உடலுறவும்

"மாட்டிறைச்சி தின்பது சகோதரிகளுடன் உறவு கொள்வதற்கு சமம்" - கிரிராஜ் சிங், பிஜேபி.

# அப்ப நீங்க ஏன் உங்க சகோதரிகளை (மாட்டுக்கறியை) ஏற்றுமதி செய்றீங்க ஆபிசர்?

சிந்தனைச் சிற்பி மோடி

நவீன ஹிந்தியாவின் சிந்தனைச் சிற்பி, சீரியசாக சிந்தித்துக்கொண்டிருந்தபோது...
 
30-05-2017
 

கடவுள் ஓட்டம்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கோவில் திருவிழாவில் பக்தர்கள் தேரை வேகமாக இழுத்ததால் கட்டுப்பாட்டை இழந்து முன் சக்கர அச்சு முறிந்து தேர் கவிழ்ந்தது.

3 பக்தர்கள் காயம்.
 
கடவுள் ஓட்டம். 30-05-2017


போராடுபவர்களைப் பாதுகாப்போம்

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.

01. இந்த வழக்கிலிருந்து எளிதில் தோழர் விடுதலை பெறுவார். வழக்கு தள்ளுபடியாகும் என்று அந்த டில்லி எடுபிடிகளுக்கு நன்றாகவே தெரியும். தெரிந்தும் கைது செய்யக் காரணம் தமிழர் உரிமைக்கு போராடுபவர்களை அச்சுறுத்தவும் மிரட்டவுமே.

02. தொடர்ந்து பாஜக-வுக்கு எதிராக விவாதங்களில் அவர் பங்கெடுப்பது பலருக்கு தலைவலியாக இருக்கிறது. எதிர்ப்பாரின்றி பொய்யை பரப்ப சூழலை ஏற்படுத்திக் கொண்டது பாஜக.

03. தமிழ் அமைப்புகளைக் கண்டு உண்மையிலேயே டில்லி மிரளத் துவங்கியுள்ளது என்பது இதிலிருந்து வெளிவரும் நுண் உண்மை.

04. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியும் ஒரு அட்டைகத்தி, எதிர்க்கட்சியும் ஒரு அட்டைகத்தி. இம்மாதிரியானதொரு அருமையான சூழலில் மே 17 மாதிரியான அமைப்புகளையும் முடக்கினால் டெல்லிக்கு மிக வசதியாக இருக்கும்.

05. தோழருக்கு சிறையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். கேட்க வலுவான தலைவர்களில்லை.

06. தமிழகத்தின் பல பிரச்சினைகளுக்கு இடையிலும் எந்த போராட்டத்திலும் பங்கெடுக்காமல் நாங்க அப்படி இப்படி, எங்க தலைவர்தான் தமிழின தலைவர், நாங்கதான் உண்மையான போராளிகள் என்று வழக்கம்போல முகநூலிலேயே பலரும் கம்பு சுத்திக் கொண்டிருப்பது டில்லிக்கு இன்னும் கூடுதல் வசதி.

07. அடிக்கடி ஐநா-வில் இந்தியாவுக்கு எதிராக இலங்கைக்கு எதிராக உண்மைகளைப் பேசி இரு நாடுகளின் முகமூடியை தோலுரித்து கிழிக்கும் திருமுருகன் காந்தியை டில்லி மிரட்டுவது பழிவாங்கும் நோக்கில்தான்.

"தோழரை விடுவிக்க குரல் கொடுப்போம். போராடுகிறவர்களை பாதுகாப்போம்"
 
29-05-2017
 

தலக்கோணம் அருவியில்...

@ தலக்கோணம் அருவி, ஆந்திரா. 29-05-2017
 

 

படித்ததில் பிடித்தது

'நீங்கள் பெரியமகான். எப்போதுமே தரையிலேயே ஏன் அமர்ந்துள்ளீர்கள்?' என ஒருவர் கேட்டதற்கு,

புத்தர் சொன்னார் :
"தரையில் அமர்பவன் ஒருபோதும் தவறி விழமாட்டான்"

- படித்ததில் பிடித்தது 27-05-2017

இந்தியாவில் தமிழ்நாடு

இந்தியாவிடம் மாட்டிக்கொண்ட தமிழ்நாட்டின் நிலைமை
 
17-05-2017
 

அரசியல் ஆலோசகர்கள்...???

இருவரும் தீவிர ஆலோசனை. விரைவில் நல்ல முடிவு...
Welcome Superstar ji... 💐💐

16-05-2017


விநோதம்

😇...
இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கு சொந்தமில்லையாம். ஆனால் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு பெற்று வெற்றி பெற்ற கட்சியின் ஆட்சியில் அவருக்கு முதல்வர் பதவியாம்.
 
16-05-2017
 

கேப்டன் இல்லாத குறைய தீர்த்து வையி கடவுளே...

கடவுளே, தமிழ்நாட்டின் மீது கருணை காட்டு. நல்ல முடிவா எடு. சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வர்ற மாதிரி முடிவெடு. மீடியாவுல கேப்டன் இல்லாத குறைய தீர்த்து வையி. இதேமாதிரி கொஞ்சநாள் கழிச்சி வேற ஒரு உச்ச நடிகரை எறக்கி விடு. இத்தனைநாள் மாதிரி ரொம்ப இழுக்காம சட்டுபுட்டுனு முடிவெடு கடவுளே.

15-05-2017
 

"ஆறுமுகம் - இமையம்"

இன்று காலை தி நகரில் ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டேன். எப்படியும் கைதாவதென்று முடிவுசெய்து கையோடு இந்த "ஆறுமுகம்" என்ற நாவலைப் படிக்க கொண்டு சென்றேன். எனக்கு எழுத்தாளர் இமையம் அவர்களின் எழுத்தின்மீது மிகுந்த ஈர்ப்பு உண்டு. அவரது "பெத்தவன்" கதை இன்னமும் நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருக்கிறது.

இதுவரை 68 பக்கம்தான் இந்நாவலை படித்தேன். என் ஊரில் வாழ்ந்த பல மனிதர்களின் ஞாபகங்களைத் தூண்டுகிறது. கிராமத்து எளிய மக்களின் சொல்லாடல்களிலும் எழுத்து நடையிலும் ஆங்காங்கே கண்ணீர் முட்டுகிறது. முடித்ததும் நாவலின் சுருக்கம் பதிவிடுகிறேன்.
 
14-05-2017

இளையராஜாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ராஜபக்சேவின் கட்சியைச் சேர்ந்த எம்.பி., ராஜசிங்கம் என்பவனும் நார்வேயில் வசிக்கும் கமல் என்பவனும் சுப்பிரமணிய சாமியின் நெருங்கிய நண்பர்கள். இவர்களது ஏற்பாட்டில் 70 நாட்களுக்கும் மேலாக நடந்துவரும் தமிழர்களின் ராணுவ ஆக்ரமிப்பு காணிகளை மீட்கும் போராட்டத்தை திசைதிருப்பவும், கருப்பு ஜூலை மாத நிகழ்வுகளை மழுங்கடிக்கவும் அடுத்த மாதம் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை கொழும்பிலும் யாழிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு இசைஞானி இளையராஜா அவர்கள் செல்லக்கூடாது என இன்று அவரது வீட்டு முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் இன்று காலை நடைபெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் பற்றி இன்றைய "மாலைமுரசு" மாலை இதழில் வெளியான செய்தி.
14-05-2017

இலங்கையின் காலணி நாடு இந்தியா...?

"இந்தியா என்பது உண்மையில் சிங்களன்களின் கட்டளைக்கு கீழ்பணிந்து சேவகம் செய்யும் இலங்கையின் காலணி நாடு" என்பது சிங்கள அரசியல்வாதிகளின் கடந்தகால வரலாற்றை கவனித்தால் எளிதாய் புரியும்.

இந்திய கொடி கட்டி வரும் மீனவ படகுகளை மயிரளவுக்குகூட மதிக்காத இலங்கை நட்பு நாடாம்.

இந்த புத்த சாமியார்கள் மோடிக்கு தரும் மரியாதையை கவனியுங்கள். இப்படி ஏன் குனிய வேண்டும் ஒரு நாட்டின் பிரதமர். அந்த சாமியார்களிடம் அப்படி என்னவிருக்கிறது?

மா மா மன்னர் மோடிக்கே இந்த மரியாதைதான் என்றால் தமிழ் மாணவர்களை, பெண்களை, போரில் சிக்கிய அப்பாவி மக்களை எப்படியெல்லாம் அந்த காவி உடை போர்த்திய இனவெறியர்கள் நடத்தியிருப்பார்கள்; இனியும் நடத்துவார்கள் என்பதை யோசிக்க நெஞ்சம் நெருப்பாய் கொதிக்கிறது.

(அங்கே சிங்கள ராணுவத்தில் பணிபுரிபவனுக்கும் புத்த சாமியாருக்கும் இனவெறியில் ஒரு மயிரிழை வேறுபாடும் இல்லை.)
 
12-05-2017
 
 

முன்பு டீ இப்போது நாடு

"அவர் டீ கடை வைத்திருந்தபோது அவரிடம் வாடிக்கையாய் டீ குடித்தவர்கள் எல்லாரும் ஏதேனும் பலவித வயிற்றுக் கோளாறுக்கு ஆளாகி அரை ஆயுளில் செத்திருப்பார்களோ என்னவோ?.."

11-05-2017

NEET எனும் பூணூல்

இன்னமும் இங்கே பூணூலை பற்றித்தான் பேசிக்கொண்டிருக்க வேண்டுமா என்று நிறைய பேர் நொந்துக்கொள்கிறார்கள். பூணூல் தவிர்த்து அரசியல், பொருளாதாரம் என்பதெல்லாம் இங்கே ஒன்றுமே இல்லை. இங்கே எல்லாவற்றையும் ஏதோ ஒருவகையில் நிர்ணயிக்கும் சக்தியாக பூணூல் இருக்கிறது. ஒரு பெண்ணின் உள்ளாடையை கழற்ற சொன்ன பரதேசிக்கு ஒருவனின் பூணூலை கழற்று என்று சொல்ல தெரியாதா? ஆனால் தப்பி தவறி கூட இங்கே ஒருவனால் அப்படி சிந்தித்துக் கூட பார்க்க முடியாது. நீட் தேர்வில் உள்ளாடையை கழற்ற சொல்லலாம், சட்டையின் கைகளை அறுத்து அவனது சுயமரியாதையை சீண்டி பார்க்கலாம், சிலுவையும், குல்லாவும் அணியக்கூடாது என்று சட்டம் போடலாம், ஆனால் எந்த தடையும் இல்லாமல் இங்கே ஒருவன் பூணூல் அணியலாம். பூணூல் அணிந்தவன் பூணூல் வழியே பிட்டு பேப்பர் வைத்திருக்க மாட்டான், அவன் பரிசுத்தமானவன் என்பதுதான் இங்கே காலம் காலமாக கற்பிக்கப்பட்ட உண்மை. நீட் தேர்வில் யாரோ ஒருவனது பூணூல் அறுக்கப்பட்டிருந்தால் கூட இந்நேரம் நாடாளுமன்றம் கூடியிருக்கும். உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் எல்லாம், தன்னிச்சையாக வழக்கை எடுத்துக்கொண்டு, நீட் தேர்வை ரத்து செய்யும் அளவிற்கு போயிருக்கும். ஆனால் சாதாரண மக்களின் ஜட்டியை கழட்டலாம், கோமணத்தை அவிழ்க்கலாம், சட்டைகளை கிழிக்கலாம், கையில் கட்டியிருக்கும் காப்பு கயிறுகளை வெட்டி எறியலாம், குடியானவனின் குடியை கெடுப்பதுதான் இங்கே சட்டம், அந்த சட்டம் பூணூலுக்கு எப்போதும் தனிமரியாதை வழங்கி பாதுகாக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை பூநூல்தான் அரசியல், பொருளாதாரம் எல்லாமுமே. பூணூலை தவிர்த்து பேசுங்கள் என்று சொல்லுபவன் ஒன்று கடைந்தெடுத்த முட்டாளாக இருக்க கூடும், இல்லை பூணூல் போர்த்தாத பார்ப்பன அடிவருடியாக இருக்க கூடும்.

Arun Mo 10-05-2017


இயற்கைக்கு மதமில்லை

இந்த இயற்கையில் உயிரினங்கள் தோன்றுகின்றன..

அவை சில காலம் அவைகளின் தாய், தந்தை, சுற்றம் தன்முயற்சி இவற்றாலும் பின் தனித்தும் வளர்ந்து வாழ்கின்றன..

இந்த வளர்ச்சியின் போது நாம் என்ன செய்தாலும் அதற்கு ஒரு எதிர்வினை உண்டு அவ்வளவே!

கடவுளோ! இயற்கையோ! உயிர்களும் இந்த இயற்கையும் தோன்ற, இருக்க, காரணமானது எதுவாக இருந்தாலும் அதற்கு கருணை, பாவம், புண்ணியம், நல்லது, கெட்டது, நியாயம், தர்மம், எதுவும் தெரியாது.

அந்த பண்புகள் அனைத்தும் படிப்படியாக வளர்ந்து, பரிணாமத்தில் மனிதனுக்கு ஆறாவது அறிவு தோன்றிய பின்னரே பகுத்தறியும் திறனால் இன்று மேலும் வளர்ந்து வந்துள்ளது.

அதுவே கடவுள் என்ற கருத்தையும் உருவாக்கியுள்ளது.

மனிதன் நல்வழியில் நடந்தால் மட்டுமே இந்த இயற்கையும் உயிர்களும் நலமோடு இருக்க வாய்ப்புண்டு. இல்லையேல் எவருக்கேனும் துன்பம் ஏதாவது ஒரு வழியில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும்.

மனிதனால் ஏற்படுத்தப்பட்ட கடவுள் என்ற கருத்து ஒரு போதும் உங்களுக்கு துண்பங்களை ஏற்படுத்துவதும் இல்லை தீர்க்கப்போவதும் இல்லை.

இயற்கை, காலம் இவை தன் வழியில் பயணித்துக் கொண்டிருக்கும் அதில் சில காலம் நாமும் நம் இச்சைப்படி பயணிக்கிறோம். அவ்விச்சைகளை வரன்முறை படுத்தினால் மட்டுமே நல்ல வாழ்வுண்டு எல்லோருக்கும்.

கடவுளை ஏற்றுக்கொள்ளலாம், அது சுய ஒழுக்கம், அமைதி, அன்பு, இவற்றிற்காக பின்பற்றப்படும் வரை. ஆனால் ஒரு போதும் அது அந்த நிலையிலேயே நின்று விடுவதில்லை.

இன்று கடவுள், மதம் என்பது வெறும் சம்பிரதாய நிகழ்வுகளுக்காகவும், அது பிற கடவுள் மதங்களின் மீது வெறுப்பை வளர்ப்பதற்கும், பணம் ஈட்டும் ஒரு வணிகமாகவும்,

இவை எல்லாவற்றையும் விட மோசமான ஒன்றாக மனிதனின் துன்பங்களுக்கு சக மனிதனும் அவனை ஆட்சி செய்யும் முறையுமே காரணம் என்பதை மறைத்து, கடவுளின் பெயரால், விதி என்றும் கர்மா என்றும் அவனை மூளைச்சலவை செய்து அவன் துன்பங்களை நீக்க போராட்ட குணம் கொள்ளாமல் மங்குனியாக மாற்றுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது என்ற காரணத்தால் அப்படி கடவுள் என்ற கருத்து அவசியமற்ற ஒன்றாகவே இருக்கிறது.

அப்படி கடவுள் பக்தி மிகுந்தவர்களையும் விட அதிகமாக, சக மனிதர்களையும், சக உயிர்களையும், மண்ணையும், இயற்கையையும், மதிப்பவர்களாக அன்பு செலுத்துபவர்களாக, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களே இருக்கின்றனர் என்பது தான் நிதர்சனம்.

ஒரு மார்க்கத்தை பின்பற்றுபவன் பிற மார்க்கவாதிகளிடம் அன்பை செலுத்துபவனாக இருப்பதில்லை. எந்த மார்க்கத்தையும் பின்பற்றாதவனே எல்லோரிடத்தும் அன்பு கொண்டவனாக இருக்க முடியும்.

Selvakumar Appakutti 10-05-2017




மோசமான உதாரணத்திற்கு ஒரு நாடு

சில கார்ப்பரேட் முதலாளிகளின் லாபத்திற்காக இந்த ஒரு தலைமுறையோடு மொத்தமாக பூமியின் வளங்களைச் சுரண்டி அதை இனி மக்கள் வாழ தகுதியற்ற இடங்களாக நிரந்தரமாக மாற்றுவதற்கு பெயர் வளர்ச்சித் திட்டங்கள்..?

கந்து வட்டிக்கு விட்டவன் இன்னமும் விடுகிறவன், ஜாதியையும் மதத்தையுமே தம் பெரிய பெருமையாகவும் பதவியை பிடிக்கிற குறுக்கு வழியாகவும் நினைக்கிறவன், பாவம் செய்தவர்கள்தான் கஷ்டப்படுகிறார்கள் என்று நம்புகிறவன், கடவுளை கும்பிட்டால் செய்த பாவம் போய்விடும் என்று நினைக்கிறவன், எல்லாமே நல்லதற்குத்தான் என்று நம்புகிறவன், எல்லாமே அவன் செயல் என்று நம்புகிறவன், வெங்கடாஜலபதியைப் பார்த்தால் வாழ்க்கை மாறிவிடும் என்று நம்புகிறவன் எல்லாருமாக சேர்ந்து வார்டு மெம்பர், கவுன்சிலர், தலைவர், மேயர், MLA, MP, அமைச்சர், முதல் அமைச்சர், பிரதமர், ஜனாதிபதியாக வரைக்கும் இருக்கிற ஒரு நாடு வெறெந்த லட்சணத்தில் இருக்கும் என்பதற்கு நல்ல உதாரணம் இந்தியா.
 
09-05-2017
 

நிர்வாகத் திறமை வளராத நாடு..!!

ஒரு கல்வித் தேர்வை நடத்தவும் / ஒரு இடைத் தேர்தலை நடத்தவும் நிர்வாகத் திறமை வளராத நாடு..!

சில கார்ப்பரேட் முதலாளிகளின் லாபத்திற்காக இந்த ஒரு தலைமுறையோடு மொத்தமாக பூமியின் வளங்களைச் சுரண்டி அங்கே மக்கள் வாழ தகுதியற்ற இடங்களாக இனி நிரந்தரமாக மாற்றுவதற்கு பெயர் வளர்ச்சித் திட்டங்கள்..?

கந்து வட்டிக்கு விட்டவன் இன்னமும் விடுகிறவன், ஜாதியையும் மதத்தையுமே தம் பெரிய பெருமையாகவும் பதவியை பிடிக்கிற குறுக்கு வழியாகவும் நினைக்கிறவன், பாவம் செய்தவர்கள்தான் கஷ்டப்படுகிறார்கள் என்று நம்புகிறவன், கடவுளை கும்பிட்டால் செய்த பாவம் போய்விடும் என்று நினைக்கிறவன், எல்லாமே நல்லதற்குத்தான் என்று நம்புகிறவன், எல்லாமே அவன் செயல் என்று நம்புகிறவன், வெங்கடாஜலபதியைப் பார்த்தால் வாழ்க்கை மாறிவிடும் என்று நம்புகிறவன் எல்லாருமாக சேர்ந்து வார்டு மெம்பர், கவுன்சிலர், தலைவர், மேயர், MLA, MP, அமைச்சர், முதல் அமைச்சர், பிரதமர், ஜனாதிபதியாக வரைக்கும் இருக்கிற ஒரு நாடு வெறெந்த லட்சணத்தில் இருக்கும் என்பதற்கு நல்ல உதாரணம் இந்தியா.
 
07-05-2017
 

பாசம் எனும் புரியாத புதிர்

எவ்வளவுதான் மனிதர்களுக்கு சுயநலம் இருந்தாலும்; எவ்வளவு அவமானப்பட்டாலும்; அதையெல்லாம் விஞ்சும் இந்த "பாசம்" என்பது ஒரு புரியாத புதிர்.
 
07-05-2017
 
 

விசித்திர நீதிபதிகள்

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருக்கும் 98 சதவிகிதமானவர்கள் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் அல்ல. ஒரு பணக்கார பெற்றோரின் மகனாக பிறந்து, கான்வென்டில் படித்து, செல்வாக்காக காரில் பயணித்தவர்களே நீதிபதிகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு கிராமப்புற ஆரம்ப சுகாதார மையங்களின் பணி என்ன, அதில் பணியாற்றும் மருத்துவர்களின் சேவை என்ன, ஆரம்ப சுகாதார மையங்கள் எத்தகைய சேவைகளை ஏழை மக்களுக்கு ஆற்றிக் கொண்டிருக்கின்றன என்பது குறித்து துளியும் அறிவு இருக்காது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினால், முதுகலை மருத்துவப் படிப்பில் 50 சதவிகித இட ஒதுக்கீடு என்ற ஒரே காரணத்துக்காகவே எம்பிபிஎஸ் பட்டதாரிகள் கிராமப்புரங்களில் பணியாற்றுகிறார்கள். இந்த இட ஒதுக்கீடு இல்லையென்றால் என்ன ------க்கு இவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்ற வேண்டும். ?

தமிழகத்தின் மருத்துவ சூழலை முழுமையாக சிதைக்கும் வகையிலான இந்த தீர்ப்பை எழுதிய நீதிபதிகள் வெட்கப்பட வேண்டும்.
 
சவுக்கு சங்கர்
 
06-05-2017

வறட்சியிலும் பித்தலாட்டம்

உண்மையான பக்தர்களின் மந்திரம் பலித்தது.

சென்னை உட்பட ஒட்டுமொத்த தமிழ்நாடும் வெள்ளத்தில் மூழ்கியது. முதல்வர் எடப்பாடியார் தலைமையில் போர்க்கால அடிப்படையில் பேரிடர் மீட்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிக்கு ராணுவம் விரைந்து வந்துகொண்டிருக்கிறது.

வெள்ளத்தின் காரணமாக பல இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளதால் இத்தகவலை அனைவருக்கும் தெரிவிக்கவும்.
 
06-05-2017
 
 

பாகுபலி எந்த ஜாதி?

பிழைக்க வழியில்லாமல் வாழ்வு தேடி நரிகளிடம் சிக்கி குருவிகளைப் போல் திட்டமிட்டு சுடப்பட்டு தமிழன் சாகடிக்கப்பட்டான் ஆந்திர வனப்பகுதியில். ஆளாளுக்கு அறிக்கை வாசித்தார்கள். இதுவரையில் யாருக்கு என்ன நியாயம் கிடைத்தது? இன்னமும் நிர்வாணப்படுத்தப்பட்டு தமிழன் சித்ரவதைக்குள்ளாவது தொடர்கிறது. கிட்டத்தட்ட பொய்வழக்கின்பேரில் 2000 பேர் சிறைக்கொட்டடியில் வாடுவதாக செய்திகள் தெரிவிக்கிறது. மீட்க ஆளில்லை.

வீரப்பனை தேடுகிறோம் என்ற பேரில் அப்பாவி மக்களை கொன்றும் பெண்களை கற்பழித்தும் ஆட்டம்போட்ட தமிழக கர்நாடக கூட்டு அதிரடிப்படை & வனத்துறைகளை எதிர்த்து போராடி நீதி பெற்றுத்தர ஆளின்றி நெடுநாள் கத்தி கத்தி ஓய்ந்துபோனார்கள். இன்னும் சிலர் கர்நாடக சிறைகளில் பொய்க் குற்றச்சாட்டில் அடைந்து கிடக்கின்றனர். மீட்க ஆளில்லை.

பேரழிவைச் சந்தித்து ஆறாத ரணமாய் ஈழம் இன்றும் அடக்குமுறைக்குள் சிக்கியிருக்கிறது.

தமிழனையும் இங்குள்ள எந்த ஜாதியையும் எவனும் மதிப்பதாகத் தெரியவில்லை. எல்லா ஜாதியுமே டில்லி ஏகாதிபத்திய கொத்தடிமைகள்தான். டில்லியிடம் முட்டவோ அரச பயங்கரவாதத்தை வலுவாக எதிர்க்கவோ யாரையும் காணோம். ஆனால் எல்லாருமே தங்களை விசேஷ பிறப்புகளாய் எண்ணி சுயவின்பம் அடைந்துகொள்கின்றனர்.

தொழில் வாய்ப்பின்றி தமிழ் மாணவர்களின் எதிர்காலமே இருண்ட காலத்திற்குள் மூழ்கும் சூழலிலும் இங்கே பாகுபலி எந்த ஜாதி என்று ஆராய்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.

தமிழர்கள் இவ்வாறான கேவலமான மனநோயிலிருந்து விடுபடப்போவது எக்காலமோ?...
 
05-05-2017
 



 

மார்க்ஸ் பிறந்த நாள்

#_மே_05

"இந்த பூமி தனிப்பட்ட மனிதனுடையதோ, ஒரு சமூகத்திற்கு உடையதோ, ஒரு நாட்டிற்கு உடையதோ அல்ல; ஏன், மனிதர்களின் கூட்டுச் சொத்துமல்ல.

நாம் இந்த பூமிக்கு விருந்தினர் மட்டுமே. பூமியில் நமக்குக் கிடைத்ததைவிட உயர்ந்த நிலையில் அடுத்த தலைமுறைக்கு இதைக் கைமாற்றிக் கொடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது"

- மாமேதை #_கார்ல்_மார்க்ஸ்

மாபெரும் சிந்தனையாளனின் பிறந்தநாள் இன்று.
 
05-05-2017
 
 

அழகிய காலங்கள்

கோடை விடுமுறைக்காக சிங்கப்பூர் போயிருக்கும் அண்ணன் பையனும் அக்காள் பொண்ணும்.

"எனது பால்யகாலத்து கோடைகள் 30 கி.மீ-க்குள்ளேயே முடிந்துபோனதுமொரு அழகிய காலங்கள்"
 
03-05-2017
 
 

பசு / எருமை..?

"நாங்க பசுவை தெய்வமா பார்க்குறோம் - ஹிந்து மக்கள் கட்சி"

# எருமையை என்னவா பார்க்கறீங்க ஆபீசர்?

03-05-2017

20.2.18

உழைப்பாளர் தினம்

மே 01 (2017)

இந்தியாவில் நீங்கள் காணும் வளர்ச்சி முன்னேற்றம் எல்லாமும் சமஸ்க்ருத வேத மந்திர சக்திகளாலும் கடவுள் அருளாலும் விளைந்த மாற்றமே.

வியர்வையை சிந்துபவனால் தன் வாழ்க்கையைக்கூட மாற்றிக்கொள்ள இயலாது என்பது கண்கூடு. இப்படியிருக்க அவனால்தான் உலகம் சுழல்கிறது என்பது பெரும் நகைச்சுவை.

கடவுளுக்கு சேவை செய்வதே உண்மையான உழைப்பு.

"அனைத்து உழைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்"
 
 

பாகவெளி

எங்க ஊர் "பாகவெளி"

வருடா வருடம் சித்திரை மாதம் முதல் ஞாயிறன்று எங்கள் ஊரில் "பாப்பாத்தி கன்னியம்மன் திருவிழா" வெகு விமரிசையாய் நடக்கும். விவசாய கிணற்றையே கோயிலாகக் கொண்ட அம்மன் இது.

இதுபற்றி இந்தவார "கல்கி" இதழில் வெளிவந்துள்ள செய்தி.

நன்றி: செய்தியாளர் "அன்பு" அவர்களுக்கு...

நிர்மலாவின் திமிர்

கீழடியில் நடக்கும் தமிழர் வரலாற்று ஆய்வுக்கு முட்டுக்கட்டை போடுகிறது பாஜக. பொறுப்பிலிருக்கும் ஆராய்ச்சியாளரை 'அவன் இவன்' என்று ஒருமையில் கேவலமாக பேசியுள்ளார் இந்த அம்மணி. கூடவந்த தேஷ்பக்தாஸ்கள் எல்லாம் போராடிய தமிழ் அமைப்பினரை அடித்துள்ளனர்.

மக்களாட்சின்னு சொல்றானுங்க. ஆனா மக்களால தேர்ந்தெடுக்கப்படாமலே இந்தமாதிரி ஆளுங்க பின்வாசல் வழியா அதிகாரத்துக்கு வர்றாங்க. இன்னொரு பாஜக சிந்தனைச் சிற்பி இல.கணேசனும் இப்படித்தான் எம்.பி. ஆகியிருக்காரு.

கீழடி ஆராய்ச்சிக்கு ஏன் இந்த அம்மணி பொங்கனும்?

01. அம்மணி தமிழர் இல்லை. 

02. கீழடியில் கிடைக்கும் எந்த பொருளிலும் ஹிந்து மத அடையாளங்கள் இல்லை. அதனால் பாஜக-வுக்கு ஆதாயமில்லை.

03. தமிழனுக்கு ஜாதி உணர்வு அளவுக்கு இன உணர்வு இல்லை. அதனால் தமிழன் என்றால் துளியும் அச்சமில்லை.
29-04-2017

யார் புத்தர்..?

புத்தர் பெருமான் உடல் மிகவும் நலிந்து, மெலிந்து படுத்த படுக்கையில் இருந்தார். இனி அவர் பிழைப்பது அரிது என்ற நிலை. எந்த நேரத்திலும் மரணம் அவரைத் தழுவும் என்பதை உணர்ந்த தொண்டர்கள் அதிர்ச்சியில் நிலைகுலைந்து சோகத்தில் ஆழ்ந்தனர்.

மகான் அருகில் இருந்த தொண்டர் ஆனந்தர், துயரம் தாங்காமல் கதறியழுதுகொண்டே இருந்தார்.

இலேசாகக் கண்விழித்த புத்தர் மெல்லிய குரலில், “ஆனந்தா, ஏன் நீயே இப்படிக் கதறி அழுகிறாய்? மனதைத் தைரியப்படுத்திக் கொள். நான்தான் மீண்டும் நிச்சயம் பிறப்பேனே… இதனைப் பலமுறை உனக்கு தெளிவுபடுத்தி இருக்கிறேனே?” என்று கேட்டார்.

எவ்வளவுதான் ஆறுதல் கூறினாலும் ஆனந்தரால் துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சற்றே அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “சுவாமி, நீங்கள் மீண்டும் பிறப்பீர்கள் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. ஆனால் நான் எப்படி உங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும்?” என்று கேட்டார்.

புத்தரின் முகத்தில் இலேசான புன்னகை மலர்ந்தது!

“ஆனந்தா, என்னை நீ அடையாளம் கண்டு கொள்வது மிகவும் சுலபம். அன்பையும்,சேவையையும் நீ எவரிடத்தில் காண்கிறாயோ அவர்தான் புத்தர் என்பதை உணர்ந்து கொள்…” என்றார் புத்தர்.
 
28-04-2017
 
 

ஓஷோ

அவர் உண்மையைப் பட்டவர்த்தமாகச் சொன்னதால் 32 நாடுகள் சேர்ந்து விரட்டின. விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார். ஆனால் அவரின் உண்மையோ இன்றும் பேசிக் கொண்டே இருக்கிறது. எனக்கு வெளிச்சத்தை உணர வைத்த அவரை நினைத்துப் பார்ப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

எல்லா மதங்களையும் அவர் ஆராய்ச்சி செய்தார். அதன் பலாபலன்களை விவரித்தார். இந்து மதத்தை பூசாரிகளின் ஆதிக்கம் நிறைந்தது அங்கு கடவுளே இல்லை என்றார். முஸ்லிம் மதத்தை விமர்சித்தார். கிறிஸ்து மதத்தை மரணக் குறியான சிலுவையை வணங்கும் மதம் என்று காட்டமாக விமர்சித்தார். பிறப்பும் இறப்பும் இயற்கையானது. இடைப்பட்ட வாழ்வில் வாழ்க்கைத்தானிருக்கிறது. அதை மனிதன் வாழ வேண்டும் என்றார்.

மதம், இனம், மொழி, தேசம் என்கிறவை எல்லாம் மனிதனுக்கான தளைகள். அவைகளால் மனிதன் சிறைப்படுகின்றானோ ஒழிய அவன் வாழ்க்கை சின்னப்படுத்தப்படுகிறதோ ஒழிய அவனுக்கு நன்மை தருவதில்லை என்கிறார். தனி மனித பிரச்சினைகளுக்கு இவையே காரணம் என்று சாடுகிறார்.

ஜைன மஹாவீரர், புத்த மதங்களையும் தத்துவங்களையும் அவர் அலசி ஆராய்ந்தார். முடிவில் எல்லோராலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஜென் என்பது மனிதனுக்கானது என்று விவரித்தார்.

ஜென் மதமும் அல்ல சித்தாந்தமும் இல்லை அது எதுவுமே இல்லை என்றார். எதுவுமே இல்லாத ஒன்று தான் மனிதனுக்கு முழுமையான வாழ்க்கையைத் தருகிறது என்றார்.

சலனமற்ற, சிந்தனையற்ற மன நிலையை எவனொருவன் அடைகின்றானோ அவன் இந்த சமூக வாழ்க்கையிலிருந்து வெகு எளிதாக தன்னை மீண்டெடுத்து தனக்கான வாழ்க்கையை வாழ்வான் என்று தனது உரைகள் மூலம் ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார் ஓஷோ.

மனிதனின் தற்போதைய வாழ்க்கையை அவர் ஒரு கதை மூலம் விவரிக்கிறார். இதோ கதை!

முல்லா நஸ்ருதீனின் சமாதியில் ஒரு பெரிய மரக்கதவு பொருத்தப்பட்டுள்ளது. அது அடைத்துப் பூட்டப்பட்டிருக்கிறது. யாரும் அதற்குள் நுழைய முடியாது கதவின் வழியாக. அது அவருடைய கடைசி வேடிக்கை. அந்தச் சமாதிக்கு நான்கு சுவர்களே இல்லை. வெறும் பூட்டிய கதவு மட்டுமே. முல்லா நஸ்ருதீன் தம் சமாதியை எப்படி அமைத்தாரோ, அப்படித்தான் ஒவ்வொருவரும் தம் வாழ்வை அமைத்துக் கொள்கின்றனர் அறியாமலேயே! வாழ்க்கை பாதுகாப்பின்மையானது. அது தான் நிதர்சனம். அதை உணர்ந்து கொள்ள வேண்டும். விஷயம் அவ்வளவுதான்.

அதிகாரம், பதவி, பணம், இறையருள், ஆத்மபலம் ஆகியவைகளால் உருவான கதவினால் பூட்டப்பட்டிருக்கும் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று நினைப்பதே எவ்வளவு அனர்த்தம்? இது மட்டுமல்ல மனிதன் தான் அறிவாளி என்று நினைத்துக்கொள்வதுதான் ஆகப் பெரும் முட்டாள் தனமானது. ஒவ்வொரு மனிதனும் மதத்தின் வழியாக நின்று கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கின்றான். எதார்த்தமான வாழ்க்கை வாழாமல் நெறி முறைகளைப் பற்றிப் பேசிக்கொண்டே இறந்து போய் விடுகிறான். ஒரு கதை ஒன்று உங்களுக்காக ஓஷோ சொல்லி இருக்கிறார்.

ஓர் இருண்ட இரவில், ஒரு பக்கிரி பாழ்கிணற்றின் ஓரமாகப் போய்க் கொண்டிருந்த போது, அபயக்குரல் கேட்டு எட்டிப் பார்த்தார். “என்ன ஆச்சு?” என்று கிணற்றுக்குள் பார்த்துக் கேட்டார். “ஐயா, நான் ஓர் இலக்கணப் புலவன். துரதிர்ஷ்டமாக உள்ளே விழுந்து விட்டேன், வழி தெரியவில்லை, அதனால் தான், இப்போது நகர முடியவில்லை” என்றார் உள்ளே கிடந்தவர்.

“இரப்பா! ஒரு ஏணியும் கயிறும் கொண்டாறேன்” என்றார் பக்கிரி.

“ஒரு நிமிடம்! உங்கள் பேச்சு இலக்கணப் பிழை. அதை நான் திருத்தி விடுகிறேன்” என்றார் உள்ளே விழுந்தவர்.

”ஏணியையும், கவுத்தையும் விட அது முக்கியம்னா, நான் நல்லாப் பேசக் கத்துக்கிற வரை நீ அங்கேயே கெட!” என்றுச் சொல்லி நகர்ந்தார் பக்கிரி.

ஓஷோ உண்மையின் உரைகல். எதார்த்தமான வாழ்க்கையை வாழ விரும்புகின்றவர்கள் படிக்க வேண்டிய அற்புதமான உரைகளை ஓஷோ வழங்கி இருக்கிறார். அவரை நாம் பின் தொடர வேண்டியதில்லை. நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களைப் பற்றிய அவரின் கருத்துக்களை புரிந்து கொள்ளலாம். அதன் உண்மையை ஆராயலாம், எது சரி எது தவறு என்ற முடிவெடுக்கலாம். நாமும் புதிதாகச் சிந்திக்கலாம். அதன் தொடர்ச்சியாக வெளிச்சமடையலாம்.

ஒவ்வொருவருக்குள் வெளிச்சம் ஏற்பட வேண்டும். அதுவே உண்மையான வாழ்க்கை!

பாகுபலி...

🏃🏻🏃🏻🏃🏻

இன்னைக்கி "பாகுபலி 2" பார்க்கலன்னா நீங்கெல்லாம் கலா ரசிகர்களே இல்ல / கலைஞன்னு சொல்லிக்க தகுதியே இல்லன்ற அளவுக்கு சாயங்காலமா எல்லாரும் மூஞ்சி புத்தகத்துல ஸ்டேட்டஸ் போடப்போறத நெனச்சா ரொம்ப டெர்ரரா இருக்குது.

கட்டப்பா, பாகுபலிய கொன்ன மாதிரி ஸ்டேட்டஸ் போட்டே கொல்லப் போறாங்க....
 
28-04-2017

பிறிதொரு அவலம்

"ஆனந்தவிகடன் யாரையெல்லாம் கொண்டாடுகிறானோ அவர்களெல்லாம் மட்டும்தான் அறிவாளிகள் / திறமைசாலிகள் என்று பலரும் நம்பும்படி பொதுப்புத்தி உருவாக்கப்படுவது நிகழ்காலத்தில் தமிழ்ச்சமூகத்தின் பிறிதொரு பெரும் அவலம்"
 
27-04-2017

NEET-க்கு எதிரான போராட்டத்தில்...

NEET தேர்வுமுறையை எதிர்த்து தந்தை பெரியார் தி.க சார்பில் இன்று பல்லாவரத்தில் நடைபெற்ற இரயில் மறியல் போராட்டத்தில்....
*
NEET தேர்வை ஏன் எதிர்க்க வேண்டும்?

பல்வேறு கல்வி முறைகள் உள்ள ஒரு நாட்டில் குறிப்பிட்ட முறையிலான பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு மட்டும் பயன் அடையும் வகையில் தேர்வு நடத்துவது நியாயத்திற்கு புறம்பானதாகும்


+2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்கி இருந்தாலும் அதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் நீட் தகுதி தேர்வு மதிப்பெண்கள் மட்டும் கணக்கில் எடுத்து கொண்டு மருத்துவ சேர்கை நடத்தினால் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களும், கிராமப்புற முதல் தலைமுறையில் படித்து வரும் மாணவர்களும் வஞ்சிக்கபடுவார்கள்

மாநில அரசுகள் பணம் செலவு செய்து மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி அத்தனை இடங்களையும் பொது தொகுப்புக்குத் தாரை வார்ப்பது மத்திய அரசின் அராஜக போக்கு ஆகும்

பல ஆண்டு காலமாக நடத்தப்பட்டு வரும் இந்த நீட் நுழைவுத் தேர்வினால் பலன் பெற்றவர்கள் யார் யார் என்ற பட்டியல் வெளியிடப்படுவதில்லை

தென் இந்தியாவில் தேர்வுகள் நியாயமாக நேர்மையாக நடைபெறுவதை போல் வட மாநிலங்களில் தேர்வுகள் நேர்மையாக நடைபெறுவதில்லை இரண்டையும் ஒரு தட்டில் வைத்து பார்ப்பது மிக பெரும் தவறு

தமிழ்நாட்டில் உள்ள தரமான மருத்தவ கல்லூரிகள் போல் மற்ற மாநிலங்களில் இருப்பதில்லை நீட் தேர்வின் மூலம் மற்ற மாநிலத்திற்கு அது களவாடப் படும்

தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், இப்பொழுதுள்ள தேர்வு முறையில் (+2 தேர்வு அடிப்படையில்) அதிக இடங்களைப் பெற்று விடுகிறார்கள் என்பதால், இதனை எப்படியும் ஒழித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சூழ்ச்சி, வஞ்சகம், சதித் திட்டம்தான் அகில இந்திய நுழைவுத் தேர்வு (நீட்) என்பதாகும். ஆகவே தான் நீட் தேர்வை எதிர்க்க வேண்டும்

+2 தேர்வு முடிவின் அடிப்படையில் கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை எப்படி இருந்தது ?

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்கள் 2853. விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 25379. +2 மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டோர் 10,538, தாழ்த்தப்பட்டோர் 5720, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 5314, பிற்படுத்தப்பட்ட இசுலாமியர்கள் 1419, உயர் வகுப்பினர் 1228, அருந்ததியர் 928, மலை வாழ் மக்கள் 232.

பொதுப் போட்டிக்கான இடங்கள் 884. அதிக மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு:

பிற்படுத்தப்பட்டோர் 599, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 159, பொதுப் பிரிவினர் (உயர் ஜாதியினர்) 68, இசுலாமியர் 32, தாழ்த்தப்பட்டோர் 23, அருந்ததியர் 2, மலைவாழ் மக்கள் 1 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றவர்கள் மூன்று பேர். இந்த மூவரும் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆவார்கள். பார்ப்பன உயர்சாதியினரின் எண்ணிக்கை மூன்று சதவீதம் கூட இல்லை

நீட் தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கை இருப்பின் எப்படி இருக்கும் ?

ஒடுக்கப்பட்ட ,தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் வாய்ப்புகள் பறிக்கப்பட்டு உயர்ஜாதி, பார்ப்பனர்கள் பனியாக்கள் ஆக்கிரமித்து இருப்பார்கள்.
 
23-04-2017
 


 

விவசாயிகள் அழிய வேண்டும், ஏன்?

விவசாயத்தைக் காப்பாற்றுவது விவசாயியின் வேலை இல்லை. அவன் மட்டும் தலைமுறை தலைமுறையாய் ஊருக்கு உழைத்து சாகவேண்டும் என்று எழுத்தில்லை. விவசாயிகளுக்கு ஆதரவாக பேசி பேசி அவர்களை மட்டும் உழைத்து ஏமாந்து போகும்படியே எல்லோரும் விட்டதுதான் மிச்சம்.

மிகப்பெரிய உணவகங்களில் ஒரு சாதா தோசையின் விலைகூட இன்னும் விவசாயிக்கு தினசரி வருமானமாகவில்லை. 30 ஆயிரம் செலவழித்து 4 மாதம் காத்திருந்தால் 40 ஆயிரம் கிடைக்கிறது. அவனது உற்பத்திப் பொருளை வாங்கி விற்கும் வணிகனுக்குத்தான் ஆதாயமே கிடைக்கிறது.

வாழ்நாள் முழுதும் உழைத்துவிட்டு உழைப்புக்கு தகுந்த விலையும் கிடைக்காமல் எந்த வசதிகளையும் அனுபவிக்காமல் கஞ்சனைப்போன்றே நிர்பந்தமாக வாழ்ந்து உடலில் சத்தில்லை, விஷக்கடி, அந்த இந்த நோய் என்று கடைசிக்காலத்தில் அல்லல்பட்டு சாகும்படியாகிறது அவன் வாழ்க்கை.

வங்கிகளில் அலைக்கழிப்பு, காவல் நிலையங்களில் அலைக்கழிப்பு, நீதிமன்றங்களில் இழுத்தடிப்பு, தாசில்தார் அலுவலகங்களில் அலைக்கழிப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அலைக்கழிப்பு, அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களால் அலைக்கழிப்பு என வாழ்நாள் முழுதும் உதாசீனங்களையே சந்தித்து முடிகிறது அவர்கள் வாழ்க்கை. லஞ்சம் அதிகமாக சுரண்டப்படுவதும் விவசாயிகளிடமிருந்துதான்.

விவசாயத்திற்கு கொடிபிடிக்கும் நகரத்துவாசிகள் யாரும் ஒரு விவசாயிக்கு பெண் கொடுப்பதையோ விவசாயி வீட்டில் பெண் எடுப்பதையோ விரும்புவதில்லை.

விவசாயிகளுக்காக போராடுவதாக அறிக்கை விடும் எந்தத் தலைவனும் முழுநேர விவசாயி இல்லை. வருமானத்திற்கு வேறு தொழில் வைத்துக்கொண்டு விவசாயிகளுக்கான தலைவர்கள் ஆகவே முயற்சிக்கின்றனர்.

அரசின்மீது நம்பிக்கை இழந்து புலம்பும் விவசாயிகளை ஜாதி பெருச்சாளிகள் ஒருபக்கம் மூளைச்சலவை செய்து ஒன்றுசேரவிடாமல் பிரித்து வைத்திருக்கிறது.

எல்லா பக்கமும் அடிவாங்கிக் கொண்டு வேறு வழி தெரியாமல் மீண்டும் மீண்டும் கடனில் வீழ்ந்து மண்டிக்காரனுக்காகவே உழைத்து முடிகிறான் விவசாயி.

உண்மையிலேயே விவசாயிகள் மீது அக்கறை இருப்பவர்கள் அவர்கள் தற்காலிகமாக விவசாயத் தொழிலை நிறுத்திவிட்டு கூடுமானவரையில் உணவகத் தொழிலில் ஈடுபட அறிவுறுத்த வேண்டும். (உணவக தொழிலில் அரசு யாரையும் எதிலும் கட்டுப்படுத்துவதாக தெரியவில்லை. விரும்பம்போல விலை. அதற்கும் வரி. 200% லாபம்) வருமானத்திற்கு வேறு தொழிலை வைத்துக்கொண்டு தங்கள் குடும்பத்திற்கு தேவையானதை மட்டும் விவசாயிகள் உற்பத்தி செய்துகொள்ள வேண்டும். நிலங்களை விற்கக் கூடாது. தரிசாகவே விட்டுவைக்க வேண்டும். இது எதுவரைக்கும் என்றால் அவனது முக்கியத்துவத்தை அரசு உணரும் காலம் வரை.

சேட்டு, பனியா, மார்வாரியெல்லாம் யாராலும் சுரண்டப்படாமல் சொகுசாக வாழ்வதைப்போல ஒரு விவசாயியும் வாழும் நிலை இங்கு வரவேண்டும்.

தலைமுறை தலைமுறையாய் விவசாயம் செய்பவர்கள் நல்ல வருமானமுள்ள தொழிலுக்கு மாற வேண்டும்.

"நீ விவசாயத்தை விட்டால் ஊருலகத்திற்கு எப்படி உணவு கிடைக்கும்?" என்ற அறிவுரையை தொடர்ந்து அவனுக்கு போதித்து, கடவுளே நீதான் என்று பாராட்டி நயமாய் பெருமை பேசி மயக்கி அவனை மேலும் அதே படுகுழியில் தள்ளும் அனுதாபிகள் தங்கள் நீலிக்கண்ணீர் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

தங்களுக்காக மட்டும் உழைத்துக்கொண்டும்; தகுந்த முன்னேற்பாடு செய்துகொண்டும் நாடெங்கும் உணவுப் பஞ்சம் வரும் சூழலை ஒருமுறையாவது விவசாயிகள் உருவாக்க வேண்டும்.

விவசாயிகள் என்ற வர்க்கம் தற்காலிகமாக அழிய வேண்டும். விவசாயம் நிறுத்தப்பட வேண்டும். இதுவன்றி விவசாயிகளுக்கு இந்த நாட்டில் எப்போதைக்கும் விடிவில்லை.
 
23-04-2017
 
 

ரகசியம்

வேதங்களில் எல்லாமே அடங்கி இருக்கிறது. நீங்கள் உண்மையிலேயே பரிபூரணத்துவமான தேடலுடன் ஆய்ந்து பார்த்தீர்களெனில் தெர்மோகோல் ரகசியமும் அதில் மறைபொருளாய் அடங்கியிருப்பது உங்களுக்கு அகப்படும். அதற்கு தேவை எதிர் கேள்வி எழுப்பாத ஆழ்ந்த பக்தி.

மந்திரங்களாலே மழை வரவைக்கவும், மழையை நிறுத்தவும், நீராவியை தடுக்கவும் இயலும் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? தொடர்ந்து 48 மணி நேரம் நிறுத்தாமல் காயத்ரி மந்திரத்தை பாடிப்பாருங்கள். அதன் அருமையை நீங்களே உணருவீர்கள்.

நாஸ்டர்டாமின் குறிப்புகளில் 138 வது குறிப்பே தெர்மோகோல் பற்றியதுதான்.
 
22-04-2017

பெருமை கொள்வோம்...

உலக அறிவியல் விஞ்ஞானிகள் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு அமைச்சர் செல்லூர் ராஜை சந்திக்க வருகை. இன்றைய நூற்றாண்டின் புதிய கண்டுபிடிப்புக்கான உயர் விருதுக்கு அமைச்சரின் பெயர் பரிந்துரைக்கப்படுகிறது. விஞ்ஞானிகளை எல்லாம் கட்சியில் வைத்திருந்த ஜெயா அம்மாவின் தொலைநோக்கு பார்வைக்கு சன்மானமாக நாசாவில் ஜெ. -வின் படத்திறக்க முடிவு.

அதிமுக-காரனாக இருப்பதிலும் / எடப்பாடியார் ஆட்சியில் வாழ்வதிலும் பெருமை கொள்வோம்.

(தெர்மோகோல் அட்டையும் பிளாஸ்டிக் பந்துகளும் நீராவி நடப்பதை தடுக்கும் என்பது உண்மைதான். அதை 10 லட்சம் ரூபாய் செலவிட்டுத்தான் முன்னோட்டம் பார்க்க வேண்டுமா?)
 
22-04-2017
 
 

சத்யராஜ்...

"சத்யராஜ் மன்னிப்பு கேட்டால்தான் பாகுபாலி 2 வெளியாகும்" - வாட்டாள் நாகராஜ்

01. சத்யராஜ் ஒரு பெரியாரிஸ்ட் / வாட்டாள் நாகராஜனோட தாத்தா (ஒரு ரைமிங்குக்கு) வந்தாக்கூட மன்னிப்பு கேட்க மாட்டார்.

02. இந்த வாட்டாள் நாகராஜ் கன்னடனே இல்லை. அங்கு இவன் ஒரு ஆளே இல்லை. தேர்தலில் பிணைத்தொகையைக்கூட காப்பாற்ற முடியாமல் தோற்றுப்போனவன்.

03. ஒருவேளை சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் வாட்டாள் நாகராஜனுக்கு இந்த வருஷம் நல்லா பிழைப்பு ஓடும். இது நடக்காது என்பதால் அவன் நேரடியாக பிச்சை கேட்கலாம். சத்யராஜ் நல்ல மனிதர். வாட்டாள் நாகராஜனோட இருக்கும் எல்லாருக்குமே நிச்சயம் உதவி செய்வார்.

04. கன்னடம் தெரிந்தவர்கள் இத்தகவலை வாட்டாள் நாகராஜனுக்கு தெரிவிக்கவும்.

(சத்யராஜ் என்றால் ஏதோ கைத்தட்டலுக்காக மட்டும் பேசுகிற நடிகரோ அல்லது தமிழனுக்காக சினிமாவில் மட்டும் சொத்தை இழக்கிறமாதிரி நடிக்கிற நடிகரோ இல்லை. தமிழர் உரிமைக்காக போராடுகிற தமிழிய அமைப்புகளுக்கு மாதாமாதம் சலிப்பில்லாமல் குறைந்தபட்சம் 5 லட்சம் நிதியாவது வழங்கிக் கொண்டிருப்பவர்)
 
21-04-2017

Extra Marital Affair

திருமணத்திற்கு பின் வேறு நபருடன் பாலியல் தொடர்பு...

திருமணம் என்பது ஒரு சமூக கட்டமைப்பு. பலவித சௌகரியங்களுக்காக மனிதனால் உருவாக்கப்பட்டது. இயற்கையில் 'ஒருவனுக்கு ஒருத்தி' கோட்பாடுகள் கிடையாது. 5000 வகையான பாலூட்டி உயிரினங்களில். 3 முதல் 5 % மட்டுமே இயற்கையில் Monogamous (ஒருவனுக்கு ஒருத்தி) அவை ஓநாய் மற்றும் சில வகையான வவ்வால்கள். அதில் மனிதன் கிடையாது. மற்றவை எல்லாமே polygamous. ஆனால் மனிதன் ஒரு social monogamy. சமூகத்துக்காக ஒருவன் - ஒருத்தி கான்சப்ட்டை ஏற்றுக் கொண்டவன். சமூகத்திற்கு முன்னால் அவனை ஒழுக்கமானவனா(ளா)கவும் நல்லவனா(ளா)கவும் காண்பித்து கொள்ள, அவன்(ள்) தன் மனதளவில் கூட social monogamy’யாக வாழ்வதையே அடிப்படையில் விரும்புபவன்.

தன் சுய கட்டுப்பாட்டை மீறி வேறு நபருடன் தொடர்பு ஏற்படும் போது, சமூகத்தின் சட்ட திட்டத்தின் படி அது தவறு. அதில் மாற்றமில்லை. ஆனால்,ஏதோ ஒரு காரணி ஒருவரை இந்த சூழலுக்குள் இட்டு சென்று விட்டது. அந்த சூழலில், சமூகத்தின் சட்டத்தை தன் மனசாட்சியில் ஆரம்பித்து வேறு, வேறு தளங்களில் உடைக்க வேண்டி வரும். அதனால் தனி நபர், குடும்பம், சமூகம் என ஏற்படும் பாதிப்புகள் நிறைய. அது சரியா ?தவறா ? என்பதெல்லாம் பல மணி நேரம் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள்.

இவற்றில் தனி நபருக்கு ஏற்படும் பாதிப்புகளில் முக்கியமான குற்ற உணர்வினை கையாள்வது பற்றி நடந்த ஒரு சம்பாஷனையின் தொகுப்பு இங்கே உள்ளது… ஒரு மனநல ஆலோசகர் பார்வையில், ஒரு தனி நபரின் குற்ற உணர்வை போக்கும் விதமாக மட்டுமே இந்த கட்டுரையை அணுகுதல் நலம்… மாற்றுக்கருத்து இருந்தே ஆக வேண்டும். அதையும் பதிவு செய்யலாம்….

// தவறு செய்வது எளிது தான் சார், ஆனால் அதை பொதுவில் நான் சொல்ல முடியாது. கலாச்சாரம் என்ன ஆவது??

கலாச்சாரம் என்பது சமூகத்துக்கானது தான். சமூகத்துக்கு முன் நீங்க கலாச்சாரத்தை காப்பாத்திக்கலாம். ஒரு தனிநபர் கலாச்சாரத்தை பற்றி கவலைப்பட எதுவும் இல்லை…

பொதுவில இதை விவாதிக்கவே முடியாது சார், இரண்டு வார்த்தை பேசினாலோ, சிரிச்சாலோ போதும் இங்க ஆண்கள் உடனே ப்ரொபோஸ் பண்றாங்க. நிறைய அனுபவபட்டிருக்கேன். ஆண்கள் இவ்ளோ வீக்காவா இருப்பாங்கன்னு அதிர்ச்சியா இருக்கு

இதில் அதிர்ச்சி அடைய எதுவும் இல்லை. இயற்கையில் பெண்கள் தான் துணையை தேர்வு செய்வது. ஆண்களுக்கு முதல் முறை எப்படி இருந்தாலும் ஓகே தான். அந்த பெண்ணிடம் ஏதோ ஒரு வகையில் இம்ப்ரெஸ் ஆனால் தான் தொடர்ச்சியா உறவை காப்பாற்றுவான்.

அதெப்படி சார் ஆண்கள் மனசில எத்தனை பெண்களுக்கு வேண்டுமானாலும் இடம் இருக்கு?

மனசுன்னு ஒன்னும் தனியா கிடையாது. வெறும் சிந்தனையும் ஞாபகங்களும் தான் மனசு. அப்படி எடுத்துகிட்டா.. ஒருத்தர் கூட உறவு வைத்து கொள்வது சினிமா பார்க்கிற மாதிரி வெறும் பொழுது போக்கு விசயம் தான். பல கலாச்சாரங்களில் அவ்வளவு எளிதானது தான் அது. பிடிச்ச படம் ரொம்ப நாளைக்கு மனசுல இருக்கும். ரொம்ப பிடிச்ச படம் திரும்ப திரும்ப பாக்கலாம். .

ஐய்யொ . இப்படி படக்குன்னு சொல்லீட்டிங்க. கல்யாணத்துக்கு பின்னான உறவு ரொம்ப நாளைக்கு நீடிக்காதே…

அது ஏன் நீடிக்கனும்?

காதல் என்றால் நீடிக்கனுமே… இல்லியா?

நீடிக்க வேண்டியது திருமணம் தான் அது ஒரு கமிட்மென்ட். சமூக அமைப்பு. அதற்கு வெளியே ஏற்படுத்திகொள்ளும் உறவுகள் உங்களின் சந்தோசத்திற்காக தானே. அது கிடைக்கவில்லை என்றால் அப்புறமா அந்த உறவு எதற்கு? இந்த அளவுக்கு பக்குவம் இருந்தால் மட்டும் அப்படி ஒரு உறவை அமைத்து கொள்ளலாம். இல்லேன்னா கம்முன்னு இருப்பது நல்லது. அடிப்படையில் எல்லாமே நம்ம சிந்தனைகள் தானே, தன்னோட மனசாட்சிக்கு பதில் சொல்ல முடியும்ன்னா பண்ணலாம். குற்ற உணர்வு ஏற்படுத்தும் எந்த செயலையும் செய்ய கூடாது. நிம்மதி போய்டும். காதல், குடும்பம், உறவு, கத்திரிக்காய் இதெல்லாம் விட ஒரு தனி நபருக்கு அவரோட நிம்மதி முக்கியம்.

உண்மை தான், சந்தோசத்தை தேடி தானே அந்த பக்கமெல்லாம் மனசு போகுது. எனக்கு குற்ற உணர்வெல்லாம் இல்லை. உண்மையில் இப்போ ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். ஆனால் இது இப்படியே நீடிக்கனும்ன்னு ஆசையா இருக்கு.

அது பொசசிவ்னஸ். அந்த சந்தோசம் நிரந்தரமாக வேண்டும் என்கிற சுயநலம். அதுக்கு வாய்ப்பு இல்லை. உயிர் இல்லாத பொருளை மட்டும் தான் யாரும் சொந்தம் கொண்டாட முடியும். உயிர் மற்றும் சிந்தனை உள்ள பொருளை சொந்தம் கொண்டாடுவது கஷ்டம். அது மாற்றத்திற்கு உட்பட்டது. அதற்கு நம்மை தயாரா வச்சுக்கனும். விருப்பம் இல்லாத விசயத்தை வற்புறுத்தி செய்ய வைப்பது சித்ரவதை.

இப்போ தான் ஆரம்பிச்சிருக்கு… ஆனால் முடிவுக்கும் தயாரா இருக்கனும் போல…

காதலும் போர்கள்மும் ஒன்னு. இங்கே சமூகத்தின் எந்த நியாயங்களும் தர்மங்களும் எடுபடாது. வெளியேற வழி ஏற்படுத்திகொண்டு தான் இரண்டிலும் நுழையனும் அது தான் புத்திசாலித்தானம்.

எனக்காக வாழ ஆரம்பிச்ச பிறகு எல்லாமே டேக் இட் ஈசி தான், சந்தோசமா இருக்கேன். ஃப்ரீயா, Freek out’டா இருகேன். வாழ்க்கையே சந்தோசமா இருக்கு… இது முடிவுக்கு வந்துட்டா அதில் இருந்தும் வெளியேற முடியும் என்கிற நம்பிக்கை வந்திருக்கு இப்போ…

மகிழ்ச்சி… நாம பேசிக்கிட்டதை பொது வெளியில் போடவா.. எதும் அப்ஜக்ஷன் இருக்கா?? பெயர் இல்லாமல் தாரளமா போடுங்க… நானே சொல்லலாம்ன்னு நினைச்சேன்… மற்றவர்களின் எண்ணங்களும் தெரிஞ்சிக்கலாமே….
 
- Sarav Urs

ஹிந்தியா சீனமா?

இந்த வீணாப்போன ஹிந்தி எதுக்கு இப்ப இங்க நடுவால? அநேகமா இன்னும் கொஞ்ச நாள்ல அவனுங்களே மொத்தமா சீன மொழி படிச்சாகணும்போல.

செய்தி : அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் என அறிவித்து ஆறு ஊர்களின் பெயரையும் மாற்றியது சீனா.

மோடிஜி ஆப் கிதர்ஹே...?
 
20-04-2017

தனி நாடு

தேசியவாதிகளின் அரசியல் செல்வாக்கை குறைக்க வேண்டுமானால், அவர்கள் கேட்கும் தனி நாட்டை பிரித்துக் கொடுத்து விடுவது சிறந்த வழி. இருபது வருடங்களுக்கு முன்னர், தமிழீழம் கிடைத்திருந்தால், இன்று தமிழ் தேசியவாதிகள் காணாமல் போயிருப்பார்கள்.

உலகில் பல நாடுகளில் நடந்த தேசிய இன விடுதலைப் போராட்டங்கள், அதனை உறுதிப் படுத்துகின்றன. உதாரணத்திற்கு, செக்கோஸ்லோவாக்கியா என்ற நாடு, செக் மற்றும் ஸ்லோவாக்கியா குடியரசுகள் என்று பிரிந்த வரலாற்றை எடுத்துப் பார்ப்போம்.

செக் மொழிக்கும், ஸ்லோவாக்கிய மொழிக்கும் இடையில் என்ன வேறுபாடு? ஒன்றுமேயில்லை. சில நூறு சொற்களைத் தவிர, வேறெந்த வித்தியாசமும் இல்லை. வீம்புக்கு ஒரே மாதிரியான சொற்களை, வேறு எழுத்தை பாவித்து எழுதுகிறார்கள். (வேறு மொழி என்று காட்ட வேண்டுமாம்.)

அதே மாதிரி, ஈழத் தமிழையும் வித்தியாசமாக எழுதலாம். ஏற்கனவே அப்படித் தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். "T" என்ற ஒலிக்கு, ஈழத் தமிழில் "ரி" என்று எழுதுவார்கள். இந்தியத் தமிழில் "டி" என்று எழுதுவார்கள். அது போதும், ஈழத் தமிழ் மொழி தனித்துவமானது, ஈழத் தமிழர்கள் தனியான தேசிய இனம் என்று ஒரு இயக்கம் ஆரம்பித்து விடலாம். அதே தான், ஸ்லோவாக்கியாவில் நடந்தது. (மசிடோனியா, குரோவாசியா போன்ற பல தேசியவாத இயக்கங்கள் அப்படித் தான் ஆரம்பமாகின.)

செக்கோஸ்லோவாக்கியாவில் கம்யூனிச ஆட்சி முடிவுக்கு வந்ததும், செக், ஸ்லோவாக்கிய தேசியவாதிகளின் செல்வாக்கு உயர்ந்தது. செக்கியர்களின் தேசியத் தலைவர் Václav Klaus, ஸ்லோவாக்கியர்களின் தேசியத் தலைவர் Vladimír Mečiar, இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு தான், செக்கோஸ்லோவாக்கிய பிரிவினை. (ஒரு காலத்தில், இருவரையும் கம்யூனிஸ்டுகள் போட்டு உதைத்ததால், கடுப்பில் இருந்திருப்பார்கள் போலும்.)

உண்மையில் பெருமளவு மக்கள் அதனை ஆதரிக்கவில்லை. இரண்டு பக்கமும் முப்பத்தைந்து சதவீதமானோர் மட்டுமே ஆதரித்தார்கள். நீண்ட காலம் குடும்பம் நடத்திய கணவனும், மனைவியும் விவாகரத்து செய்வதைப் போல நாட்டை பிரித்தார்கள். அரசு உடைமைகள், இராணுவ உபகரணங்கள், ரயில் பாதைகள் எல்லாம் மூன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் பிரிக்கப் பட்டன. ஏனென்றால், செக் மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையாகவும், ஸ்லோவாக்கிய மக்கள், மூன்றில் ஒரு சிறுபான்மையாகவும் இருந்தனர்.

இரண்டு தேசியங்களும், தங்களுக்கென்று தனியான கொடிகள், தேசிய கீதங்கள், கடவுச்சீட்டு, நாணயம் என்றெல்லாம் உருவாக்கினார்கள். இதற்காக கோடிக் கணக்கில் செலவிட்டார்கள். இரண்டு நாடுகளுக்கு நடுவில், எல்லை போட்டு காவலர்களை நிறுத்தி வைத்தார்கள். செக்கியர்களும், ஸ்லோவாக்கியர்களும், "இனிமேல் ஒருவரோடு ஒருவர் சேர்ந்து வாழ முடியாது," என்று சொல்லி பிரிந்து சென்றார்கள்.

பிரிந்து வாழ்ந்து சில வருடங்கள் ஆகவில்லை. நேட்டோ கூட்டமைப்பில் இரண்டு நாடுகளும் சேர்ந்து கொண்டன. அதனால், பிரிந்த இராணுவம் மீண்டும் ஒன்றாக சேர்ந்தது. இன்னொரு பக்கத்தில், ஐரோப்பிய ஒன்றியமும் ஆள் சேர்த்துக் கொண்டிருந்தது. அதிலே இரண்டு நாடுகளும் சமர்த்துப் பிள்ளைகளாக சேர்ந்து விட்டன. ஐரோப்பிய ஒன்றியம் கேட்ட படி, செங்கன் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார்கள்.

அதற்குப் பின் என்ன நடந்தது? இரண்டு நாடுகளுக்கு நடுவில் இருந்த எல்லைக் கட்டுப்பாடுகள் நீக்கப் பட்டன. இப்போது இரண்டு நாட்டு பிரஜைகளும் பாஸ்போர்ட் இல்லாமல், சுதந்திரமாக போய் வரலாம். ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை நாடுகள் என்பதால், ஒரு நாட்டின் பிரஜை மற்ற நாட்டில் வாழவும், வேலை செய்யவும், வர்த்தகம் செய்யவும் பூரண சுதந்திரம் பெற்றவராகிறார்.

வருங்காலத்தில் யூரோ வந்தால், ஒரே நாணயம் புழக்கத்தில் இருக்கும். (ஏற்கனவே ஸ்லோவாக்கியா யூரோ பயன்படுத்துகிறது.) தற்போது, செக் குடியரசும், ஸ்லோவாக்கிய குடியரசும், நடைமுறையில் ஒரே நாடாக உள்ளன. ஆனால், பெயருக்கு இரண்டு அரசாங்கங்கள் இருக்கின்றன. இது எப்படி இருக்கிறது என்றால், விவாகரத்து பெற்று சென்ற கணவனும், மனைவியும் பின்னர் ஒரே வீட்டில் வாழ்வதைப் போன்றுள்ளது.

உலகில் உள்ள எல்லா நாட்டு மக்களையும் போலத்தான், செக்கோஸ்வாக்கிய மக்களுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. பெரும்பான்மை மக்களுக்கு, அவர்களது குடும்பப் பொறுப்புகள், வேலை, பணம், இவை மட்டுமே முக்கியமானவை. அவர்களிடம் சென்று, "எதற்காக ஸ்லோவாக்கியா பிரிந்தது?" என்று கேட்டு விடாதீர்கள். பெரும்பான்மை மக்களுக்கு அதற்குப் பதில் தெரியாது.

Kalai Marx
 
 

எச்ச புத்தி

தமிழக உயர் நீதிமன்றத்தில் வழக்காட தமிழுக்கு அனுமதி இல்லை, ஆனால் இங்கே ஹிந்தி கட்டாயமாம்.
 

18-04-2017

பெரியார் நினைவிடத்தில்...

பெரியார் நினைவிடத்தில் இன்று... 17-04-2017



திருமணம் பற்றி ஓஷோ

கேள்வி : திருமணமும் செய்து கொண்டு சுதந்திரமாகவும் இருப்பதென்பது சாத்தியமா?

கடினம்தான். ஆனால் அசாத்தியமானதல்ல. சற்றே புரிந்து கொள்ளும் திறன் இருந்தால் போதும். சில அடிப்படை உண்மைகளை முதலில் அங்கீகரித்துக் கொள்ள வேண்டும். ஒன்று இன்னாருக்கு இன்னார் என்று யாரும் யாருக்காகவும் பிறக்கவில்லை. இரண்டாவது இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற உங்களின் கோட்பாடுகளை நிறைவேற்றுவதற்காக யாரும் இங்கு வரவில்லை. மூன்றாவது உங்கள் அன்புக்கு நீங்கள்தான் அதிகாரி. எனவே நீங்கள் விரும்பும் வரை வழங்க முடியும். ஆனால் மற்றவர்களிடமிருந்து அன்பை நீங்கள் வற்புறுத்தி பெற முடியாது. ஏனெனில் மற்றவர் உங்கள் அடிமையல்ல. இந்த எளிய உண்மைகளை புரிந்து கொண்டால் நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தாலும் ஆகாதவராக இருந்தாலும் சேர்ந்திருக்க முடியும். ஒருவருக்கொருவர் விட்டுத் தர முடியும். ஒருவர் மற்றவரின் தனித்தன்மையில் ஒருபோதும் குறுக்கிடாதிருக்கமுடியும்.

உண்மையில் கல்யாணம் என்பது காலாவதியாகிப்போன ஒரு நிறுவனம். முதலாவதாக, எந்த நிறுவனத்தின் உள்ளேயும் வாழ்வது நல்லதல்ல. எந்த விதமான அமைப்பும் அறிவுபூர்வமானதே. கோடிக்கணக்கான மக்களின் மகிழ்ச்சிக்கான எல்லா சாத்தியங்களையும் திருமணமானது ஏறக்குறைய அழித்து விட்டிருக்கிறது. முற்றிலும் பயனற்ற காரணங்களுக்காக. எனவே முதல் விஷயமே, திருமணமே – திருமண சடங்கே கூட – போலித்தனமானதுதான்.

திருமணத்தை நீங்கள் விளையாட்டாக எடுத்துக் கொண்டால் நீங்கள் சுதந்திரமாக இருக்க முடியும். வினையாக எடுத்துக் கொண்டால் சுதந்திரம் சாத்தியமேயில்லை. திருமணத்தை விளையாட்டாக எடுத்துக் கொள்ளுங்கள் – அது ஒரு விளையாட்டுத்தான். கொஞ்சம் நகைச்சுவை உணர்வுடன் பாருங்கள். வாழ்க்கை மேடையில் நீங்கள் நடிக்கும் பாத்திரமே திருமண வாழ்க்கை. ஆனால் அது வாழ்க்கையின் ஒரு அங்கமல்ல. அதற்கு எந்த வித யதார்த்தமும் கிடையாது. அது ஒரு கட்டுக்கதை. ஆனால் கட்டுக்கதையையே யதார்த்தம் என்று எடுத்துக் கொள்ளுமளவுக்கு மக்கள் மூடர்களாக இருக்கிறார்கள்.

கண்களில் கண்ணீருடன் கதை படிக்கும் மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன். கதை நிகழ்ச்சிகள் அவ்வளவு சோகமாக போகிறதாம். திரைப்பட அரங்குகளில் விளக்குகளை அணைத்துவிடுவது மிக நல்ல உபாயம்தான். இதனால் எல்லோராலும் சிரித்து, அழுது, வருந்தி, மகிழ்ந்து, படத்தை ரசிக்க முடிகிறது. வெளிச்சம் இருந்தால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று இருக்கும். அதே சமயம் திரை காலியாக உள்ளது. அதில் யாரும் இல்லை என்பது அவர்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியும். அது வெறுமனே ஒளிவீச்சால் தோற்றுவிக்கப்படும் படம்தான். ஆனால் அவர்கள் அதை சுத்தமாக மறந்துவிடுகிறார்கள். இதேதான் நம் கதையிலும் நடக்கிறது. வெறும் விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டிய பல விஷயங்களை நாம் விவகாரமாக எடுத்துக் கொள்கிறோம். அவ்விதமான காரியநோக்கிலிருந்தே நம் பிரச்னை தொடங்குகிறது.

முதலில் நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் ஒருவரை காதலியுங்கள். ஒருவருடன் வாழுங்கள். இது உங்களின் அடிப்படை உரிமைகளில் அடங்கும். நீங்கள் ஒருவருடன் வாழவும் முடியும் ஒருவரை காதலிக்கவும் முடியும்.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது அல்ல. இங்கேதான் இது சூழ்ச்சிக்கார புரோகிதர்களால் சாமியார்களால் நடத்தப்படுகிறது. ஆனால் சமுதாயத்துடனான விளையாட்டில் நீங்கள் சேர்ந்துகொள்ள விரும்பினால், அதேசமயம் தனிப்பட்டு நிற்க விரும்பினால், உங்கள் மனைவியிடமோ, கணவரிடமோ இந்த திருமணம் வெறும் விளையாட்டுத்தான் என்பதை தெளிவாக்கி விடுங்கள். ஒருபோதும் இதை பிரச்னைக்குரியதாக எடுத்துவிடாதே. திருமணத்திற்கு முன்பு இருந்தமாதிரியே நான் சுயேச்சையாகத்தான் இருப்பேன். நீயும் திருமணத்திற்கு முன்பு இருந்தது போலவே சுயேச்சையாக இரு. உன் வாழ்வில் நான் குறுக்கிடப் போவதில்லை. என் வாழ்வில் நீயும் குறுக்கிடாதே. நாம் நண்பர்களாக சேர்ந்து வாழ்வோம். நம் சந்தோஷத்தை, சுதந்திரத்தை பகிர்ந்து கொள்வோம். ஒருவர் மற்றவருக்கு பாரமாக மாற மாட்டோம்.

எந்த கணத்தில் வசந்தம் ஓய்ந்து விட்டதாக, தேனிலவு தேய்ந்து விட்டதாக நாம் உணர்கிறோமோ அக்கணமே மேற்கொண்டு நடிக்கத் தொடங்காத அளவுக்கு ஒருவரிடம் ஒருவர் பின்வருமாறு சொல்லி விடுமளவுக்கு நேர்மையாக இருப்போம். “நாம் நிரம்ப காதலித்தோம், என்றென்றும் ஒருவருக்கொருவர் நன்றியுடன் இருப்போம், நாம் காதலித்த நாள்கள் பொன்னான நாள்களாக நம் நினைவுகளிலும் கனவுகளிலும் நம்மைத் தொடர்ந்து வரும். ஆனால் வசந்தம் முடிந்து விட்டது. நாம் பிரிய வேண்டிய இடம் வந்துவிட்டது. இது வேதனையாக இருந்தாலும் இனியும் நாம் சேர்ந்து வாழ்வது அன்பின் அடையாளமாக இருக்காது. நான் உன்னை காதலிப்பது உண்மையென்றால் என் காதல் உனக்கு துன்பமாக மாறிவிடுவதை கண்ட அக்கணமே நான் உன்னை விட்டு நீங்கி விடுவேன். நீ என்னை உண்மையாக காதலித்தால் உன் காதல் எனக்கு சிறையாக மாறுகிறது என்பதை காணும் அக்கணமே நீ என்னை விட்டு நீங்கி விடுவாய்.”

அன்பே வாழ்வின் உன்னத மதிப்பீடாகும். மூடச்சடங்குகளாக அதை தாழ்த்தி விடக்கூடாது. அன்பும் சுதந்திரமும் ஒன்றிணைந்தே செல்லும் – ஒன்றை தேர்ந்தெடுத்து மற்றதை விட்டுவிட முடியாது. சுதந்திரத்தை அறிகிற மனிதர் அன்பு நிறைந்தவராய் இருப்பார். அன்பை அறிகிற மனிதர் எப்போதுமே சுதந்திரம் தர சித்தமாய் இருப்பார். நீங்கள் நேசிக்கும் ஆளுக்கே சுதந்திரம் வழங்க உங்களால் முடியாவிட்டால் வேறு யாருக்குத்தான் சுதந்திரம் தருவீர்கள் சுதந்திரம் தருவது என்பது பூரணமாய் நம்புவதே தவிர வேறல்ல. சுதந்திரம் என்பது அன்பின் வெளிப்பாடு.

எனவே திருமணம் ஆனவராயினும் ஆகாதவராயினும் நினைவில் கொள்ளுங்கள். எல்லா திருமணங்களுமே போலியானவைதான். சம்பிரதாய வசதிக்காகத்தான். உங்களை சிறைப்படுத்தி ஒருவருடன் ஒருவரை பிணைத்துப் போடுவதல்ல அவற்றின் நோக்கம். இருவரும் சேர்ந்து வளர்வதற்கு உதவுவதே அவற்றின் நோக்கம். ஆனால் வளர்ச்சிக்கு சுதந்திரம் அத்தியாவசியம். ஆனால் கடந்த காலத்தின் எல்லா கலாசாரங்களுமே, சுதந்திரம் இல்லையென்றால் அன்பு மரணமடைகிறது என்பதை மறந்து விட்டன.

சலுகையல்ல, இழப்பீடு...

மேலோட்டமாக கவனித்தால் இது சரிதானே என்று தோன்றும். கொஞ்சம் வரலாற்று அறிவும் நடப்பு சூழலும் மனசாட்சியும் உள்ளவர் எனில் இவ்வாறான திட்டமிட்ட பரப்புரையின் நச்சுத்தன்மை புரியும்.

01. இட ஒதுக்கீடு என்பது சலுகை அல்ல. யாராரை எந்தளவுக்கு முன்னேறவிடாமல் சுரண்டலுக்கு ஆளாக்கி அடக்கி வைத்திருந்தார்களோ அதற்கான இழப்பீடு.

02. திறமையால் மட்டும் வந்தவர்கள் என்று ஊரை நம்பவைத்துக் கொண்டிருப்பவர்கள்தான் சத்தமே இல்லாமல் மிகப்பெரிய ஊழல்களை செய்து சிக்காமல் சுகமாக இருக்கிறார்கள்.

03. தகுதி அடிப்படையில்தான் வேலை என்று கூக்குரல் எழுப்புபவர்கள் "கோயில் கருவறைக்குள் மணியாட்ட என்ன தகுதி வேண்டும்? ஜாதி அடிப்படையில் அல்லாமல் திறமை அடிப்படையில் எல்லா சமூகத்தினரையும் அர்ச்சராக நியமி" என்று குரல் எழுப்புவதில்லை என்பதை கவனிக்கவும்.
 
(16-04-2017)