திருமணத்திற்கு பின் வேறு நபருடன் பாலியல் தொடர்பு...
திருமணம் என்பது ஒரு சமூக கட்டமைப்பு. பலவித சௌகரியங்களுக்காக மனிதனால் உருவாக்கப்பட்டது. இயற்கையில் 'ஒருவனுக்கு ஒருத்தி' கோட்பாடுகள் கிடையாது. 5000 வகையான பாலூட்டி உயிரினங்களில். 3 முதல் 5 % மட்டுமே இயற்கையில் Monogamous (ஒருவனுக்கு ஒருத்தி) அவை ஓநாய் மற்றும் சில வகையான வவ்வால்கள். அதில் மனிதன் கிடையாது. மற்றவை எல்லாமே polygamous. ஆனால் மனிதன் ஒரு social monogamy. சமூகத்துக்காக ஒருவன் - ஒருத்தி கான்சப்ட்டை ஏற்றுக் கொண்டவன். சமூகத்திற்கு முன்னால் அவனை ஒழுக்கமானவனா(ளா)கவும் நல்லவனா(ளா)கவும் காண்பித்து கொள்ள, அவன்(ள்) தன் மனதளவில் கூட social monogamy’யாக வாழ்வதையே அடிப்படையில் விரும்புபவன்.
தன் சுய கட்டுப்பாட்டை மீறி வேறு நபருடன் தொடர்பு ஏற்படும் போது, சமூகத்தின் சட்ட திட்டத்தின் படி அது தவறு. அதில் மாற்றமில்லை. ஆனால்,ஏதோ ஒரு காரணி ஒருவரை இந்த சூழலுக்குள் இட்டு சென்று விட்டது. அந்த சூழலில், சமூகத்தின் சட்டத்தை தன் மனசாட்சியில் ஆரம்பித்து வேறு, வேறு தளங்களில் உடைக்க வேண்டி வரும். அதனால் தனி நபர், குடும்பம், சமூகம் என ஏற்படும் பாதிப்புகள் நிறைய. அது சரியா ?தவறா ? என்பதெல்லாம் பல மணி நேரம் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள்.
இவற்றில் தனி நபருக்கு ஏற்படும் பாதிப்புகளில் முக்கியமான குற்ற உணர்வினை கையாள்வது பற்றி நடந்த ஒரு சம்பாஷனையின் தொகுப்பு இங்கே உள்ளது… ஒரு மனநல ஆலோசகர் பார்வையில், ஒரு தனி நபரின் குற்ற உணர்வை போக்கும் விதமாக மட்டுமே இந்த கட்டுரையை அணுகுதல் நலம்… மாற்றுக்கருத்து இருந்தே ஆக வேண்டும். அதையும் பதிவு செய்யலாம்….
// தவறு செய்வது எளிது தான் சார், ஆனால் அதை பொதுவில் நான் சொல்ல முடியாது. கலாச்சாரம் என்ன ஆவது??
கலாச்சாரம் என்பது சமூகத்துக்கானது தான். சமூகத்துக்கு முன் நீங்க கலாச்சாரத்தை காப்பாத்திக்கலாம். ஒரு தனிநபர் கலாச்சாரத்தை பற்றி கவலைப்பட எதுவும் இல்லை…
பொதுவில இதை விவாதிக்கவே முடியாது சார், இரண்டு வார்த்தை பேசினாலோ, சிரிச்சாலோ போதும் இங்க ஆண்கள் உடனே ப்ரொபோஸ் பண்றாங்க. நிறைய அனுபவபட்டிருக்கேன். ஆண்கள் இவ்ளோ வீக்காவா இருப்பாங்கன்னு அதிர்ச்சியா இருக்கு
இதில் அதிர்ச்சி அடைய எதுவும் இல்லை. இயற்கையில் பெண்கள் தான் துணையை தேர்வு செய்வது. ஆண்களுக்கு முதல் முறை எப்படி இருந்தாலும் ஓகே தான். அந்த பெண்ணிடம் ஏதோ ஒரு வகையில் இம்ப்ரெஸ் ஆனால் தான் தொடர்ச்சியா உறவை காப்பாற்றுவான்.
அதெப்படி சார் ஆண்கள் மனசில எத்தனை பெண்களுக்கு வேண்டுமானாலும் இடம் இருக்கு?
மனசுன்னு ஒன்னும் தனியா கிடையாது. வெறும் சிந்தனையும் ஞாபகங்களும் தான் மனசு. அப்படி எடுத்துகிட்டா.. ஒருத்தர் கூட உறவு வைத்து கொள்வது சினிமா பார்க்கிற மாதிரி வெறும் பொழுது போக்கு விசயம் தான். பல கலாச்சாரங்களில் அவ்வளவு எளிதானது தான் அது. பிடிச்ச படம் ரொம்ப நாளைக்கு மனசுல இருக்கும். ரொம்ப பிடிச்ச படம் திரும்ப திரும்ப பாக்கலாம். .
ஐய்யொ . இப்படி படக்குன்னு சொல்லீட்டிங்க. கல்யாணத்துக்கு பின்னான உறவு ரொம்ப நாளைக்கு நீடிக்காதே…
அது ஏன் நீடிக்கனும்?
காதல் என்றால் நீடிக்கனுமே… இல்லியா?
நீடிக்க வேண்டியது திருமணம் தான் அது ஒரு கமிட்மென்ட். சமூக அமைப்பு. அதற்கு வெளியே ஏற்படுத்திகொள்ளும் உறவுகள் உங்களின் சந்தோசத்திற்காக தானே. அது கிடைக்கவில்லை என்றால் அப்புறமா அந்த உறவு எதற்கு? இந்த அளவுக்கு பக்குவம் இருந்தால் மட்டும் அப்படி ஒரு உறவை அமைத்து கொள்ளலாம். இல்லேன்னா கம்முன்னு இருப்பது நல்லது. அடிப்படையில் எல்லாமே நம்ம சிந்தனைகள் தானே, தன்னோட மனசாட்சிக்கு பதில் சொல்ல முடியும்ன்னா பண்ணலாம். குற்ற உணர்வு ஏற்படுத்தும் எந்த செயலையும் செய்ய கூடாது. நிம்மதி போய்டும். காதல், குடும்பம், உறவு, கத்திரிக்காய் இதெல்லாம் விட ஒரு தனி நபருக்கு அவரோட நிம்மதி முக்கியம்.
உண்மை தான், சந்தோசத்தை தேடி தானே அந்த பக்கமெல்லாம் மனசு போகுது. எனக்கு குற்ற உணர்வெல்லாம் இல்லை. உண்மையில் இப்போ ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். ஆனால் இது இப்படியே நீடிக்கனும்ன்னு ஆசையா இருக்கு.
அது பொசசிவ்னஸ். அந்த சந்தோசம் நிரந்தரமாக வேண்டும் என்கிற சுயநலம். அதுக்கு வாய்ப்பு இல்லை. உயிர் இல்லாத பொருளை மட்டும் தான் யாரும் சொந்தம் கொண்டாட முடியும். உயிர் மற்றும் சிந்தனை உள்ள பொருளை சொந்தம் கொண்டாடுவது கஷ்டம். அது மாற்றத்திற்கு உட்பட்டது. அதற்கு நம்மை தயாரா வச்சுக்கனும். விருப்பம் இல்லாத விசயத்தை வற்புறுத்தி செய்ய வைப்பது சித்ரவதை.
இப்போ தான் ஆரம்பிச்சிருக்கு… ஆனால் முடிவுக்கும் தயாரா இருக்கனும் போல…
காதலும் போர்கள்மும் ஒன்னு. இங்கே சமூகத்தின் எந்த நியாயங்களும் தர்மங்களும் எடுபடாது. வெளியேற வழி ஏற்படுத்திகொண்டு தான் இரண்டிலும் நுழையனும் அது தான் புத்திசாலித்தானம்.
எனக்காக வாழ ஆரம்பிச்ச பிறகு எல்லாமே டேக் இட் ஈசி தான், சந்தோசமா இருக்கேன். ஃப்ரீயா, Freek out’டா இருகேன். வாழ்க்கையே சந்தோசமா இருக்கு… இது முடிவுக்கு வந்துட்டா அதில் இருந்தும் வெளியேற முடியும் என்கிற நம்பிக்கை வந்திருக்கு இப்போ…
மகிழ்ச்சி… நாம பேசிக்கிட்டதை பொது வெளியில் போடவா.. எதும் அப்ஜக்ஷன் இருக்கா?? பெயர் இல்லாமல் தாரளமா போடுங்க… நானே சொல்லலாம்ன்னு நினைச்சேன்… மற்றவர்களின் எண்ணங்களும் தெரிஞ்சிக்கலாமே….
- Sarav Urs
No comments:
Post a Comment