26.2.18

போராடுபவர்களைப் பாதுகாப்போம்

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.

01. இந்த வழக்கிலிருந்து எளிதில் தோழர் விடுதலை பெறுவார். வழக்கு தள்ளுபடியாகும் என்று அந்த டில்லி எடுபிடிகளுக்கு நன்றாகவே தெரியும். தெரிந்தும் கைது செய்யக் காரணம் தமிழர் உரிமைக்கு போராடுபவர்களை அச்சுறுத்தவும் மிரட்டவுமே.

02. தொடர்ந்து பாஜக-வுக்கு எதிராக விவாதங்களில் அவர் பங்கெடுப்பது பலருக்கு தலைவலியாக இருக்கிறது. எதிர்ப்பாரின்றி பொய்யை பரப்ப சூழலை ஏற்படுத்திக் கொண்டது பாஜக.

03. தமிழ் அமைப்புகளைக் கண்டு உண்மையிலேயே டில்லி மிரளத் துவங்கியுள்ளது என்பது இதிலிருந்து வெளிவரும் நுண் உண்மை.

04. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியும் ஒரு அட்டைகத்தி, எதிர்க்கட்சியும் ஒரு அட்டைகத்தி. இம்மாதிரியானதொரு அருமையான சூழலில் மே 17 மாதிரியான அமைப்புகளையும் முடக்கினால் டெல்லிக்கு மிக வசதியாக இருக்கும்.

05. தோழருக்கு சிறையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். கேட்க வலுவான தலைவர்களில்லை.

06. தமிழகத்தின் பல பிரச்சினைகளுக்கு இடையிலும் எந்த போராட்டத்திலும் பங்கெடுக்காமல் நாங்க அப்படி இப்படி, எங்க தலைவர்தான் தமிழின தலைவர், நாங்கதான் உண்மையான போராளிகள் என்று வழக்கம்போல முகநூலிலேயே பலரும் கம்பு சுத்திக் கொண்டிருப்பது டில்லிக்கு இன்னும் கூடுதல் வசதி.

07. அடிக்கடி ஐநா-வில் இந்தியாவுக்கு எதிராக இலங்கைக்கு எதிராக உண்மைகளைப் பேசி இரு நாடுகளின் முகமூடியை தோலுரித்து கிழிக்கும் திருமுருகன் காந்தியை டில்லி மிரட்டுவது பழிவாங்கும் நோக்கில்தான்.

"தோழரை விடுவிக்க குரல் கொடுப்போம். போராடுகிறவர்களை பாதுகாப்போம்"
 
29-05-2017
 

No comments:

Post a Comment