20.2.18

ஆதித்யநாத்... (உ.பி முதல்வர்)

பதவி ஏற்றதுமே அதிரடியாக இதை செய்துள்ளார் அதை செய்துள்ளார் என இவரைப்பற்றி ஆகா ஓகோவென பலரும் எழுதுகிறார்கள். இன்னும் உறுதியாகாத பல சாகசவாத கட்டுக்கதைகளை இவரது சாதனை என திட்டமிட்டு பரப்புகிறார்கள் பலரும்.

இன்னும் சில மாதங்களிலேயே அகிலேஷ் யாதவின் ஆட்சியே பரவாயில்லை என்றுதான் மக்களை எண்ண வைக்கப் போகிறார் இந்த சாமியார் ; அதாவது மன்மோகன் சிங்கே மேல் என்று திருவாளர் மோடி ஜீ எண்ண வைத்ததைப் போல.

பதவியேற்றவுடனே இவ்வளவு அதிரடி காட்டும் இவர் ஏற்கெனவே 3 முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அப்போதெல்லாம் அந்தந்த தொகுதிக்கு இவர் ஆற்றிய சாதனைகள் என்னென்னவென கேட்டால் யாரிடமிருந்தும் பதில் வரவில்லை.

யாரேனும் தெரிவித்தால் தெரிந்துகொள்ளலாம்.

பாரத் மாதாகீ... Bye...
 
(13-04-2017)

No comments:

Post a Comment