26.2.18

பாகுபலி எந்த ஜாதி?

பிழைக்க வழியில்லாமல் வாழ்வு தேடி நரிகளிடம் சிக்கி குருவிகளைப் போல் திட்டமிட்டு சுடப்பட்டு தமிழன் சாகடிக்கப்பட்டான் ஆந்திர வனப்பகுதியில். ஆளாளுக்கு அறிக்கை வாசித்தார்கள். இதுவரையில் யாருக்கு என்ன நியாயம் கிடைத்தது? இன்னமும் நிர்வாணப்படுத்தப்பட்டு தமிழன் சித்ரவதைக்குள்ளாவது தொடர்கிறது. கிட்டத்தட்ட பொய்வழக்கின்பேரில் 2000 பேர் சிறைக்கொட்டடியில் வாடுவதாக செய்திகள் தெரிவிக்கிறது. மீட்க ஆளில்லை.

வீரப்பனை தேடுகிறோம் என்ற பேரில் அப்பாவி மக்களை கொன்றும் பெண்களை கற்பழித்தும் ஆட்டம்போட்ட தமிழக கர்நாடக கூட்டு அதிரடிப்படை & வனத்துறைகளை எதிர்த்து போராடி நீதி பெற்றுத்தர ஆளின்றி நெடுநாள் கத்தி கத்தி ஓய்ந்துபோனார்கள். இன்னும் சிலர் கர்நாடக சிறைகளில் பொய்க் குற்றச்சாட்டில் அடைந்து கிடக்கின்றனர். மீட்க ஆளில்லை.

பேரழிவைச் சந்தித்து ஆறாத ரணமாய் ஈழம் இன்றும் அடக்குமுறைக்குள் சிக்கியிருக்கிறது.

தமிழனையும் இங்குள்ள எந்த ஜாதியையும் எவனும் மதிப்பதாகத் தெரியவில்லை. எல்லா ஜாதியுமே டில்லி ஏகாதிபத்திய கொத்தடிமைகள்தான். டில்லியிடம் முட்டவோ அரச பயங்கரவாதத்தை வலுவாக எதிர்க்கவோ யாரையும் காணோம். ஆனால் எல்லாருமே தங்களை விசேஷ பிறப்புகளாய் எண்ணி சுயவின்பம் அடைந்துகொள்கின்றனர்.

தொழில் வாய்ப்பின்றி தமிழ் மாணவர்களின் எதிர்காலமே இருண்ட காலத்திற்குள் மூழ்கும் சூழலிலும் இங்கே பாகுபலி எந்த ஜாதி என்று ஆராய்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.

தமிழர்கள் இவ்வாறான கேவலமான மனநோயிலிருந்து விடுபடப்போவது எக்காலமோ?...
 
05-05-2017
 



 

No comments:

Post a Comment