20.2.18

NEET-க்கு எதிரான போராட்டத்தில்...

NEET தேர்வுமுறையை எதிர்த்து தந்தை பெரியார் தி.க சார்பில் இன்று பல்லாவரத்தில் நடைபெற்ற இரயில் மறியல் போராட்டத்தில்....
*
NEET தேர்வை ஏன் எதிர்க்க வேண்டும்?

பல்வேறு கல்வி முறைகள் உள்ள ஒரு நாட்டில் குறிப்பிட்ட முறையிலான பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு மட்டும் பயன் அடையும் வகையில் தேர்வு நடத்துவது நியாயத்திற்கு புறம்பானதாகும்


+2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்கி இருந்தாலும் அதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் நீட் தகுதி தேர்வு மதிப்பெண்கள் மட்டும் கணக்கில் எடுத்து கொண்டு மருத்துவ சேர்கை நடத்தினால் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களும், கிராமப்புற முதல் தலைமுறையில் படித்து வரும் மாணவர்களும் வஞ்சிக்கபடுவார்கள்

மாநில அரசுகள் பணம் செலவு செய்து மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி அத்தனை இடங்களையும் பொது தொகுப்புக்குத் தாரை வார்ப்பது மத்திய அரசின் அராஜக போக்கு ஆகும்

பல ஆண்டு காலமாக நடத்தப்பட்டு வரும் இந்த நீட் நுழைவுத் தேர்வினால் பலன் பெற்றவர்கள் யார் யார் என்ற பட்டியல் வெளியிடப்படுவதில்லை

தென் இந்தியாவில் தேர்வுகள் நியாயமாக நேர்மையாக நடைபெறுவதை போல் வட மாநிலங்களில் தேர்வுகள் நேர்மையாக நடைபெறுவதில்லை இரண்டையும் ஒரு தட்டில் வைத்து பார்ப்பது மிக பெரும் தவறு

தமிழ்நாட்டில் உள்ள தரமான மருத்தவ கல்லூரிகள் போல் மற்ற மாநிலங்களில் இருப்பதில்லை நீட் தேர்வின் மூலம் மற்ற மாநிலத்திற்கு அது களவாடப் படும்

தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், இப்பொழுதுள்ள தேர்வு முறையில் (+2 தேர்வு அடிப்படையில்) அதிக இடங்களைப் பெற்று விடுகிறார்கள் என்பதால், இதனை எப்படியும் ஒழித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சூழ்ச்சி, வஞ்சகம், சதித் திட்டம்தான் அகில இந்திய நுழைவுத் தேர்வு (நீட்) என்பதாகும். ஆகவே தான் நீட் தேர்வை எதிர்க்க வேண்டும்

+2 தேர்வு முடிவின் அடிப்படையில் கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை எப்படி இருந்தது ?

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்கள் 2853. விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 25379. +2 மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டோர் 10,538, தாழ்த்தப்பட்டோர் 5720, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 5314, பிற்படுத்தப்பட்ட இசுலாமியர்கள் 1419, உயர் வகுப்பினர் 1228, அருந்ததியர் 928, மலை வாழ் மக்கள் 232.

பொதுப் போட்டிக்கான இடங்கள் 884. அதிக மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு:

பிற்படுத்தப்பட்டோர் 599, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 159, பொதுப் பிரிவினர் (உயர் ஜாதியினர்) 68, இசுலாமியர் 32, தாழ்த்தப்பட்டோர் 23, அருந்ததியர் 2, மலைவாழ் மக்கள் 1 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றவர்கள் மூன்று பேர். இந்த மூவரும் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆவார்கள். பார்ப்பன உயர்சாதியினரின் எண்ணிக்கை மூன்று சதவீதம் கூட இல்லை

நீட் தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கை இருப்பின் எப்படி இருக்கும் ?

ஒடுக்கப்பட்ட ,தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் வாய்ப்புகள் பறிக்கப்பட்டு உயர்ஜாதி, பார்ப்பனர்கள் பனியாக்கள் ஆக்கிரமித்து இருப்பார்கள்.
 
23-04-2017
 


 

No comments:

Post a Comment