26.2.18

விசித்திர நீதிபதிகள்

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருக்கும் 98 சதவிகிதமானவர்கள் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் அல்ல. ஒரு பணக்கார பெற்றோரின் மகனாக பிறந்து, கான்வென்டில் படித்து, செல்வாக்காக காரில் பயணித்தவர்களே நீதிபதிகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு கிராமப்புற ஆரம்ப சுகாதார மையங்களின் பணி என்ன, அதில் பணியாற்றும் மருத்துவர்களின் சேவை என்ன, ஆரம்ப சுகாதார மையங்கள் எத்தகைய சேவைகளை ஏழை மக்களுக்கு ஆற்றிக் கொண்டிருக்கின்றன என்பது குறித்து துளியும் அறிவு இருக்காது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினால், முதுகலை மருத்துவப் படிப்பில் 50 சதவிகித இட ஒதுக்கீடு என்ற ஒரே காரணத்துக்காகவே எம்பிபிஎஸ் பட்டதாரிகள் கிராமப்புரங்களில் பணியாற்றுகிறார்கள். இந்த இட ஒதுக்கீடு இல்லையென்றால் என்ன ------க்கு இவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்ற வேண்டும். ?

தமிழகத்தின் மருத்துவ சூழலை முழுமையாக சிதைக்கும் வகையிலான இந்த தீர்ப்பை எழுதிய நீதிபதிகள் வெட்கப்பட வேண்டும்.
 
சவுக்கு சங்கர்
 
06-05-2017

No comments:

Post a Comment