26.2.18

இயற்கைக்கு மதமில்லை

இந்த இயற்கையில் உயிரினங்கள் தோன்றுகின்றன..

அவை சில காலம் அவைகளின் தாய், தந்தை, சுற்றம் தன்முயற்சி இவற்றாலும் பின் தனித்தும் வளர்ந்து வாழ்கின்றன..

இந்த வளர்ச்சியின் போது நாம் என்ன செய்தாலும் அதற்கு ஒரு எதிர்வினை உண்டு அவ்வளவே!

கடவுளோ! இயற்கையோ! உயிர்களும் இந்த இயற்கையும் தோன்ற, இருக்க, காரணமானது எதுவாக இருந்தாலும் அதற்கு கருணை, பாவம், புண்ணியம், நல்லது, கெட்டது, நியாயம், தர்மம், எதுவும் தெரியாது.

அந்த பண்புகள் அனைத்தும் படிப்படியாக வளர்ந்து, பரிணாமத்தில் மனிதனுக்கு ஆறாவது அறிவு தோன்றிய பின்னரே பகுத்தறியும் திறனால் இன்று மேலும் வளர்ந்து வந்துள்ளது.

அதுவே கடவுள் என்ற கருத்தையும் உருவாக்கியுள்ளது.

மனிதன் நல்வழியில் நடந்தால் மட்டுமே இந்த இயற்கையும் உயிர்களும் நலமோடு இருக்க வாய்ப்புண்டு. இல்லையேல் எவருக்கேனும் துன்பம் ஏதாவது ஒரு வழியில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும்.

மனிதனால் ஏற்படுத்தப்பட்ட கடவுள் என்ற கருத்து ஒரு போதும் உங்களுக்கு துண்பங்களை ஏற்படுத்துவதும் இல்லை தீர்க்கப்போவதும் இல்லை.

இயற்கை, காலம் இவை தன் வழியில் பயணித்துக் கொண்டிருக்கும் அதில் சில காலம் நாமும் நம் இச்சைப்படி பயணிக்கிறோம். அவ்விச்சைகளை வரன்முறை படுத்தினால் மட்டுமே நல்ல வாழ்வுண்டு எல்லோருக்கும்.

கடவுளை ஏற்றுக்கொள்ளலாம், அது சுய ஒழுக்கம், அமைதி, அன்பு, இவற்றிற்காக பின்பற்றப்படும் வரை. ஆனால் ஒரு போதும் அது அந்த நிலையிலேயே நின்று விடுவதில்லை.

இன்று கடவுள், மதம் என்பது வெறும் சம்பிரதாய நிகழ்வுகளுக்காகவும், அது பிற கடவுள் மதங்களின் மீது வெறுப்பை வளர்ப்பதற்கும், பணம் ஈட்டும் ஒரு வணிகமாகவும்,

இவை எல்லாவற்றையும் விட மோசமான ஒன்றாக மனிதனின் துன்பங்களுக்கு சக மனிதனும் அவனை ஆட்சி செய்யும் முறையுமே காரணம் என்பதை மறைத்து, கடவுளின் பெயரால், விதி என்றும் கர்மா என்றும் அவனை மூளைச்சலவை செய்து அவன் துன்பங்களை நீக்க போராட்ட குணம் கொள்ளாமல் மங்குனியாக மாற்றுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது என்ற காரணத்தால் அப்படி கடவுள் என்ற கருத்து அவசியமற்ற ஒன்றாகவே இருக்கிறது.

அப்படி கடவுள் பக்தி மிகுந்தவர்களையும் விட அதிகமாக, சக மனிதர்களையும், சக உயிர்களையும், மண்ணையும், இயற்கையையும், மதிப்பவர்களாக அன்பு செலுத்துபவர்களாக, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களே இருக்கின்றனர் என்பது தான் நிதர்சனம்.

ஒரு மார்க்கத்தை பின்பற்றுபவன் பிற மார்க்கவாதிகளிடம் அன்பை செலுத்துபவனாக இருப்பதில்லை. எந்த மார்க்கத்தையும் பின்பற்றாதவனே எல்லோரிடத்தும் அன்பு கொண்டவனாக இருக்க முடியும்.

Selvakumar Appakutti 10-05-2017




No comments:

Post a Comment