பெரியார் மீது அவதூறு கிளப்பும் ஒருவர், நாம் தமிழர் கட்சி ஒரு அறிவிக்கப்படாத கம்யூனிச்டு கட்சி என்கிறார். அவர் அக்கட்சியில் ஒரு பொறுப்பாளராம்.
நானும் பச்சைத் தமிழன்தான். தமிழ்த்தேசியவாதிதான். ஆனால் திராவிடக் கட்சிகளை வெளிப்படையாக எதிர்க்காமல் ஆதரித்துக்கொண்டே பெரியார் மீது மட்டும் அவதூறு கிளப்பி நிகழ்கால பிரச்னைகளின் கவனத்திலிருந்து தமிழ் உணர்வாளர்களை இவர்கள் திசை திருப்புவது வெறுப்பாக இருக்கிறது. அதுவும் எல்லோரும் மதிக்கும் புலிக்கொடியின் அடையாளத்துடன். இந்த மண்ணில் மாற்றத்திற்கு விதை விதைத்த ஒரு சிந்தனையாளனையே புரிந்துகொள்ளாத இவர்கள் எப்படி அறிவிக்கப்படாத கம்யூனிச்டுகள் ஆவார்கள்?
No comments:
Post a Comment