2.3.15

"ஜீவா" திரைப்படம் - பார்ப்பன எதிர்ப்பு

விளையாட்டில் (கிரிக்கெட்) ஒன்றை மட்டும் தூக்கிப்பிடித்து மற்ற விளையாட்டுக்களை மட்டமாக்குவதைப் பற்றியும், விளையாட்டுகள் அரசியல்மயமாகிவிட்டதைப் பற்றியும் தெளிவாகப் பேசிய படம் "வல்லினம்". இயக்கம் அறிவழகன். வெகுசனத்துக்கு அறிமுகமில்லாத விளையாட்டைப் பற்றி பேசியதாலும், அப்படி அறிமுகமான விளையாட்டைப் பற்றி பேசாததாலும் அதன் அரசியல் வெகுசன மக்களிடம் சேரவில்லை. அல்லது எடுபடவில்லை. இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் "ஜீவா" என்ற படத்தில், இன்றைக்கு ஏராளமான தமிழ் இளைஞர்களின் உயிர் மூச்சாகிப்போன கிரிக்கெட்டில் எப்படி மேல்சாதி அரசியல் ஆனந்த தாண்டவமாடுகிறது என்பதை தெளிவாக எவ்வித மழுப்பலுமின்றி நெத்தியடியாய் பேசியிருக்கிறார் இயக்குனர். அழகான திரைமொழி. அதாவது இதுவரையில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 16 கிரிக்கெட் விளையாட்டு வீரர்களில் 14 பேர் அவாள்கள். ஏன் மற்றவர்களுக்கு திறமையில்லையா? என்று நம்மை யோசிக்க வைக்கிறது படம். அரசு அதி உயர் கல்வி பேராசிரியர்கள், தனியார் மற்றும் அரசு வங்கிகள், நீதித்துறை, தேர்தல்துறை, அனைத்து மாநில தலைமைச் செயலகங்கள், ஆட்சியர் பணிகள் இங்கெல்லாம் இன்றைக்கும் அவாள்களின் கொடிதான் பறந்துகொண்டிருக்கிறது. இதுவும், நம் மக்களின் பிறவி அடிமை வரலாறும் சமூகநீதியைப் பற்றியும் தெரியாத அரைகுறைகள், இடப்பங்கீட்டால் பயனடைந்துகொண்டே அதற்கு எதிரான பார்ப்பன பிரச்சாரத்தையும் ஆதரித்துக்கொண்டு அவ்வப்போது தனது கீழ்ச்சாதி எதிர்ப்பையும் சொரிந்துகொள்கிறது. கிரிக்கெட் விளையாட்டைக்கூட விட்டுவைக்காத அவாள்களின் மேல்சாதி அரசியலை வெளிக்கொணர்ந்த இப்படத்தின் இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பெரியாரியவாதிகள் மற்றும் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பாளர்கள் அனைவரும் கட்டாயம் பார்த்து ஆதரித்து பரப்பவேண்டிய படம். 

படக்குழுவினருக்கு நன்றி...

No comments:

Post a Comment