RSS பாஜக/அதிமுக, மற்றும் இன்னப்பிற "தரம்" உயர்ந்தவர்கள சொல்லும் / நம்பும் சில மிக அபத்தமான விசயங்களுக்கான விளக்கம்.
1) காசு கொடுத்து சீட் வாங்கிட்டு டாக்டர் ஆகுறாங்க, அத தடுக்க கொண்டு வந்தது தான் நீட்.
இத மேலோட்டமா பாத்தா சரிதானேன்னு தெரியும். ஆனா மேனேஜ்மண்ட் சீட், டொனேசன் சீட் வாங்குறது எத்தப்பேரு.? நியாயமா தேர்ச்சி பெற்று சீட் வாங்குறது எத்தனப்பேரு. சில நூறு பேரை தண்டிக்கிறதுக்கு பல ஆயிரம் பேர தண்டிக்கிறது நியாயமா ? அப்படியே அத தடுக்குறது தான் உங்க நோக்கம்னா Deemed Universities / Private Collegeல எல்லாம் கூட மெரிட் லிஸ்ட் தான் ஃபாலோ பண்ணனும்னு கட்டுப்பாடு விதிச்சிருக்கலாமே.
2) தரம் தரம் தரம்...CBSE அளவுக்கு கல்வி தரம் உயர்த்தனும். அப்போ தான் மாணவர்கள் திறன் வளரும்.
கல்வித்தரத்தை உயர்த்தனும்னு சொல்றதே மிக மிக மிக முட்டாத்தனமான ஸ்டேட்மெண்ட். நம்ம கல்வித்தரத்தை எப்படி இன்னொன்னு கூட ஒப்பிடனும். நம்ம மாநில கல்வியாலர்கள வச்சு , நம்ம மாணர்வர்களுக்கு , சூழலுக்கு ஏற்றார்போல் வகுக்கப்பட்ட பாடத்திட்டத்த, வேற ஒன்னு கூட ஒப்பிடுறது எவ்வளவுப் பெரிய அபத்தம். இந்த மாநிலப்பாடத்திட்டத்த படிச்சு வந்த மருத்துவர்கள் இருக்குற இதே மாநிலம் தான் மருத்துவ தலைநகரமா , இந்தியாவுக்கே சுகாதாரத்துல முன்னுதாரனமா இருக்கு. பத்து வருசமா அப்டேட் பண்ணாததுனால நம்ம மாநில பாடத்திட்டம் மோசம்னு சொன்னா, CBSE பாடத்திட்டத்த அப்டேட் பண்ணி 11 வருசம் ஆச்சு. மேலும் cbse பாடம் ஏன் சிறந்ததுன்னு ஒரு மாயை இருக்குன்னா அதுல படிச்ச மாணவர்கள் அதிக பேரு பாஸ் ஆகியிருக்காங்க. பொதுவான தேர்வுல cbse மாணவன் அதிகமா தேர்ச்சி பெற்று இருந்து இத சொன்னா கூட லாஜிக் இருக்கு. ஆனா இங்க என்ன பித்தலாட்டம்னா நடத்தப்பட்ட நீட் தேர்வு அவன் பாடத்திட்டமான CBSEல இருந்து கேட்கப்பட்டது தான். அதுல அவன் தேர்ச்சி பெற்றா அந்த கல்வித்தரம் உயர்ந்ததுன்னு சொல்றது முட்டாத்தனம். பொய். மாயை. தயவு செய்து நம்பாதிங்க. அதுனால கல்வித்தரத்த உயர்த்த வந்தது இல்ல நீட், படிச்சா அவங்க வாழ்க்கைத்தரம் உயர்ந்துரும்னு தடுக்க வந்ததே நீட்.
3) தமிழ்நாட்டு மாணவர்கள் "நீட்" தேர்வுக்கு ஏன் பயப்படுறாங்க.? எழுத வேண்டியது தான?
பயப்படுற அளவுக்கு தமிழக கல்வித்தரமோ மாணவர்களோ எந்த விதத்திலும் குறைந்து போகவில்லை, எங்கள் கேள்வி எல்லாம் இதற்கு உதாரணமாக பலமுறை கூறிய ஒப்பீடையே சொல்லலாம் "ஓட்டப்பந்தயத்தில் தங்க மெடல் வாங்கியவனை புதிதாக உயரம் தாண்டுதலில் போட்டியிட சொல்லி அவன் அதில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அதற்கு பெயர் தான் பயம் என நீங்கள் சொல்வது பச்வை அயோக்கியத்தனம். அதற்கு பெயர் தகுதியிழப்பு செய்வது". ஜெயித்தவன் தகுதி பெற்றவன் என்று அர்த்தம் கிடையாது. இதே நிலமை தான் நீட் தேர்வு மோசடியிலும் நடக்கிறது.
4) காங்கிரஸ் / திமுக கூட்டணி தான் கொண்டு வந்துச்சு பாஜக செயல்படுத்த மட்டும் தான் செஞ்சாங்க. சிவசங்கர் நீட் எரிர்த்து வழக்கு போட வச்சாரு , ப.சிதம்பரம் மனைவி வழக்கறிஞர் நளினி நீட் தேர்வுக்கு ஆதரவா வழக்கு நடத்துறாங்க கூட்டு சதி
கொஞ்சம் கூட மண்டைல மூளை இல்லாம வேற எதோ இருக்குறவன் தான் இத நம்பி பொலம்புவான். இந்த நேரத்துலையும் "காங்கிரஸ-திமுக"வ குறைசொல்லி பொழப்பு நடத்தறது கேவலம்.
நீட் காங்கிரஸ் ஆட்சில கொண்டுவந்துனாலும் அது கட்டாயப்படுத்தப்படல, இன்னும் சொல்லப்போனா கலைஞரும்-ஜெயலலிதாவும் சேர்ந்தே எதிர்த்தாங்க.அதுனால தமிழ்நாட்டுக்குள்ள வரல. இப்ப முழுக்க முழுக்க பாஜக, அதிமுக அடிமைய வச்சு நிறைவேத்துன்னது தான் நீட்.
சினிமாவுல அடுத்தவன் 'கை' ரேகை பட்ட கத்தித வச்சு கொலை பண்ணா பழி அவன் மேல விழும்கிற கதை தான் இப்ப பாஜக/அதிமுக உண்மை கொலையாளிகள் பண்ணிட்டு இருக்குறது. இதுக்கு பொய்சாட்சி சொல்ற கூட்டம் தான் சீமான், கிருஷ்ணசாமி எல்லாம்.
திமுகவின் சிவசங்கர் அனிதாவிற்காக போராடியது, அவர் நிலமையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது எல்லாம் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை உணர்த்துவதே. 2016 திமுக தேர்தல் அறிக்கையில் கூட " ஆட்சிக்கு வந்தால் நீட் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்படு" என வாக்குறுதி அளித்திருந்தார் தலைவர் கலைஞர். அதனால் திமுகவும் சரி சிவசங்கர் என்ற தனி மனிதரும் சரி நீட் தேர்வுக்கு என்றும் எதிரானவர்களே.
இது எந்த வித கட்சி பேதமின்றி மக்கள அனைவரும் ஒன்று சேர்ந்த்து எதிர்க்கவேண்டிய அதி முக்கியமான பிரச்சனை. அனிதாவின் மரணத்திற்கு / சமூகநீதி சமத்துவ கொலைக்கு எதிராக ஒன்றினைந்து போராடவேண்டும்.
Ilanchezhian Rajendran
செப் 04, 2017