பிறப்பு என்பது இயற்கை. இதன் அடிப்படையில் ஜாதி மத பேதம் இல்லாத முறையும், யாரும் யாருக்கும் அடிமையுமில்லை மேலானவனுமில்லை அனைவரும் சமம் என்பதை உணர்ந்து அறிவு மேலோங்கி விரும்பியவரை மணம் முடித்து மகிழ்ச்சியாய் வாழ்ந்துவிட்டு போகும் சூழலை உருவாக்குவதையும் இலக்காய் கொண்ட கொள்கையையே தமிழ்த்தேசியமாக நான் எதிர்பார்க்கிறேன். எல்லோரையும் இணைக்கும் மையமாக அவரவர் தாய்மொழியே அடிப்படையாகவும் அடையாளமாகவும் இருக்க வேண்டும். வேறெந்த அடையாளங்களும் இருத்தல் கூடாது. அதேபோல் மொழியின்பொருட்டு உயர்வு தாழ்வு பேசுவதோ பகை கொள்வதும் கூடாது. நமக்குத் தேவையான சட்டங்களை, அறிவியல் கல்வியை, சகல துறைகளையும் பேதமற்ற நீதி நிர்வாக முறைகளையும், வேற்று மொழிக்காரன் கீழல்லாமல் சகல துறைகளையும் நாமே நிர்வகித்துக்கொள்ளும் பலம் பொருந்திய தனி நாடாக தமிழ்நாட்டை ஆக்குவதே தமிழ்த்தேசியர்களின் இலக்காக இருக்க விரும்புகிறேன். எனது அதிகபட்ச ஆசையும் எனது தமிழ்த்தேசிய பார்வையும் இதுதான்.
செப் 10, 2017
No comments:
Post a Comment