12.3.19

தமிழ்த்தேசியம்

இங்கு இரண்டுவிதமாக தமிழ்த்தேசியம் பேசப்படுகிறது. 
ஒன்று தமிழ் இனக்குழு அடையாளமுள்ளவர்கள்தான் இந்த மண்ணை ஆளவேண்டும், ஜாதியைக் கொண்டுதான் தமிழர்களை அடையாளம் காணமுடியும் என்பவர்கள். இன்னொன்று ஜாதி ஒழிந்த ஏற்றத்தாழ்வற்ற தமிழின விடுதலை. 
தேசிய இன விடுதலையை ஆதரிக்கும் பொதுவுடைமைவாதிகளும் இதையே ஆதரிக்கின்றனர். எல்லாருமே பேசுவது பொதுவாக "தமிழ்த்தேசியம்" என்றுதான்.

இப்படியிருக்க, முகநூலில் பலர் எவ்வாறான இயக்கங்கள் தவறானது என்பதை நேரடியாகக் குறிப்பிட்டு அவர்களை மட்டும் தனிமைப்படுத்தி எழுதாமல் பொதுவாகவே "தமிழ்த்தேசியம்" பேசுபவர்கள் எல்லாருமே ஜாதிவெறியர்கள் என்பதாக மோசமான வசவு வார்த்தைகளால் சகட்டுமேனிக்கு எழுதுகிறார்கள்.

எதிர் கருத்துக்களை வைத்ததுமே "போலி பெரியாரிஸ்ட்" என்று பட்டம் கொடுப்பதில் முனைப்பு காட்டும் இந்த "புரட்சிக்காரர்களின்" உண்மை நோக்கம் என்ன? இவ்வாறானவர்களின் கடந்தகால செயல்பாடுகள் என்னவென அறிந்துகொள்ள ஆர்வப்படுகிறேன்.

செப் 10, 2017

No comments:

Post a Comment