12.3.19

மௌனம் கலையுங்கள்

சமூக அநீதிகளைப் பற்றி கோபமாய் எழுதுவதால் நட்பு வட்டத்தில் உங்கள் மீதான பிம்பம் குலையுமென்று தயங்கி பலரும் பல கோபங்களை வெளிக்காட்டுவதில்லை. இப்படி எடுக்கும் நல்ல பெயரும் ஒன்றுக்கும் உதவப்போவதில்லை. நாளை நம் வீட்டுக் குழந்தைகளின் மரணம் நேரும்போது தடுக்க யாரும் இருக்கப்போவதில்லை. யாரும் நமக்கு சான்றிதழ் கொடுத்து ஒன்றும் ஆகப்போவதில்லை. இதற்குக்கூட உதவாத கோபம், இனி எதற்குமே பயன்தரப் போவதில்லை. குறைந்தபட்சம் உங்கள் எழுத்துக்கள், அதிகாரத்தின் மீதான எளியவர்களின் பயத்தையாவது போக்கட்டும்.


மக்களின் பணியாளர்களைக் கண்டு மக்கள் பயந்துகிடப்பது இனியாவது மாறட்டும்.
செப்டம்பர் 02, 2017

No comments:

Post a Comment