12.3.19

NEET... எதற்கு?

சூட்டோடு சூடா இன்னொரு விஷயத்தையும் பேசிருவோம். இவனுங்க எதை திறமை திறமைனு குதிக்கிறானுங்கன்னு புரியும்.

தமிழ்நாட்டு MBBS சீட் ஒரு 3000 இருக்கு, 69% இடஒதுக்கீடு, மத்திய தொகுப்பு எல்லாம் போக ஒரு 500 சீட்டு மதிப்பெண்களின் படி அவர்கள் தகுதி, திறமை அடிப்படையில் ஒதுக்கப்படுத்து, அதில் 400-450 இடங்கள் வரை பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்கள்தான் எடுக்கிறார்கள்.

எப்படி?. இவர்கள் சொல்லும் தகுதி திறமையின் அடிப்படையில், சரி இது ஒருபக்கம் இருக்கட்டும்..

இப்போ அதே மாதிரி சென்னை IIT இருக்கு, மதிப்பெண் திறமை அடிப்படையில் அதிக MBBS இடங்களை வெல்ல முடிந்த நம் மாணவர்களால் ஐஐடி-ல் இடங்களை எடுக்க முடியவில்லை ஏன்?..

ஏனென்றால் அவன் ஒரு நுழைவு தேர்வு வச்சிருக்கான், தகுதி திறமைன்னு சொல்லி. அந்த தெருவுல நம்மாளு மார்க் எடுக்க முடியல. அல்லது எடுக்க கூடாதென்பதற்குத்தான் அந்த தேர்வே வச்சிருக்கான்,

அதெப்படி அப்படி சொல்றீங்கன்னு கேட்டீங்கள்னா, மாம்பழம், மைலாப்பூர், நங்கநல்லோர் பகுதிகளில் பிராமண மாணவர்களுக்கென்றே ஐஐடி நுழைவுத்தேர்வுக்கான கோச்சிங் வகுப்புகள் நடத்தப்படும், வீடுகளில் தனி இடங்களில்..

ஏன் அதே மாதிரி நம்மாளுங்களும் நடத்த வேண்டியதுதானே என்று கேட்பீர்கள் என்றால், சென்னை ஐஐடி-யில் வேலை பார்க்கும் ஆசிரியர்களில் 95% பேர் பிராமணர்கள், எல்லா ஐ.ஐ.டி-யிலும் அப்படித்தான்.

அதெப்படிங்க 12 வதில் மாநிலத்துலயே அதிக மதிப்பெண் எடுத்து MBBS-ல் அதிக சீட்டுகளை வெல்லும் நம் மாணவர்களின் திறமை சென்னை ஐஐடி ல் மட்டும் செல்லுபடியாக மாட்டேங்கிது?.. அல்லது தெறமைனு ஐஐடி-ல நுழைய முடிஞ்ச கூட்டத்தால் MBBS ஓப்பன் கேட்டகிரியில் செயிக்க முடியல?

ஆங் நீங்க இப்படி கேப்பீங்கன்னு தெரியும் இனிமே உங்களுக்கு அந்த கேள்வியே வரக்கூடாது என்பதற்காகத்தான் மருத்துவ கல்விக்கும் நுழைவு தேர்வு கொண்டுவர்றான்.

ஐஐடி க்களில் இதுகாறும் நிகழ்ந்து வருவதுதான் இனி மருத்துவத்திலும் நிகழ போகிறது..

எல்லாமே தகுதி திறமையின் அடிப்பதில், அவன் சொல்லும் தகுதி திறமை என்னணான்னு வெளங்குதா?

Anne Selva
 
செப் 04, 2017
 
 

No comments:

Post a Comment