12.3.19

"கற்க கல்வி அறக்கட்டளை" - முப்பெரும் விழா

அனைவருக்கும் வணக்கம்.
 
"கற்க கல்வி அறக்கட்டளை" சார்பில் மிக சிறப்பான முறையில் தந்தை பெரியார் மற்றும் கல்வித் தந்தை காமராசர் பிறந்த நாள் விழா, சிரி சிந்தி நூல் வெளியீட்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா 06-09-2017 அன்று நடத்தப்பட்டது. 
 
கரு.அண்ணாமலை தலைமையில் வீ.பொற்கோவன், இ.குமணன், க.சுப்பிரமணி, மாசிலா விநாயகமூர்த்தி முன்னிலையில் நிகழ்ச்சிகளை வழக்கறிஞர் ப.அமர்நாத் தொகுத்து வழங்கினார். விழாவிற்கு வருகைபுரிந்த அனைவரையும் பெரியார் மணிமொழியான் வரவேற்று உரை நிகழ்த்தினார். விழா துவக்கத்தில் சுடரேற்றி அனிதாவுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. விழாவில் பேரா.சுபவீ, தி.வேல்முருகன், வாலாசா வல்லவன், இனமான கவிஞர் செ.வை.ர.சிகாமணி மற்றும் எம்.ஜி.ஆர். நகர் வியாபாரிகள் சங்கத் தலைவர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இவ்விழாவில் எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சென்னை மேல்நிலைப்பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் பயிலும் 10ம் வகுப்பு மாணவ மாணவிகள் 181 பேர்களுக்கும், 11ம் வகுப்பு மாணவ மாணவிகள் 239 பேர்களுக்கும், 12ம் வகுப்பு மாணவ மாணவிகள் 219 பேர்களுக்குமாக மொத்தம் 639 மாணவர்களுக்கு ஆங்கில தமிழ் அகராதி, நோட்டுப் புத்தகங்கள், பள்ளிப்பைகள் உட்பட்ட கல்வி உதவிகள் வழங்கப்பட்டது.

மேலும் வரும் செப்டம்பர் 17ம் தேதி தந்தை பெரியாரின் 139வது பிறந்தநாளை முன்னிட்டு புழல் அகதிகள் முகாமைச் சேர்ந்த 200 மாணவ மாணவியர்களுக்கும், கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமைச் சேர்ந்த 300 மாணவ மாணவியர்களுக்கும் கல்வி உதவிகள் வழங்கப்படும்.

விழா சிறப்பாக நடைபெற நிதி உதவி அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்கள் அறக்கட்டளை சார்பாக நன்றி.

மேலும் விழாவை நடத்த வெகுசிறப்பாக பணியாற்றிய அறக்கட்டளை உறுப்பினர்கள் ஜெயசீலன், துரைராசு, மூவேந்தன், சிலம்பு சிவாஜி, கரிகாலன், தமிழ் சேகுவேரா, அன்பரசு ஆகியோர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும்.
 
செப் 08, 2017
 












 

No comments:

Post a Comment