12.3.19

NEET - பாஜக-வின் சூழ்ச்சி

நீட் விவகாரத்தில் தமிழகத்தை நம்பவைத்து கழுத்தை அறுத்தது மத்திய பிஜேபி மோடி அரசு தான்..

காங் ஆட்சியில், தன்னாட்சியுடைய மெடிகல் கவுன்சில் ஆப் இந்தியாவால் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வு முறையில், மாநிலங்கள் விரும்பினால் விலக்கு அளிக்கப்பட்டது.. கட்டாயப்படுத்தவில்லை... மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்த நேரத்திலேயே, நீட்டை எதிர்த்து வழக்குகள் போடப்பட்டு 18-7-2013ல் மருத்துவக் கவுன்சில் அறிவிக்கைகள் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது..

உச்ச நீதிமன்றத்தால் 2013லேயே ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வை மீண்டும் 2014ல் ஆட்சிக்கு வந்ததும், கொண்டு வந்தது மத்திய பாஜக அரசு.. மேலும், மோடி பிஜேபி ஆட்சியில் அதை திருத்தி, அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாயம் என மாற்றினார்கள்..

இங்கே தமிழ்நாட்டில், ஜெயா இருந்தவரை, கட்டாய நீட் முறைக்கு கையெழுத்து போடவில்லை.. அவர் அப்பலோவில் அட்மிட் ஆகியவுடன், பிஜேபியின் பினாமி ஓபிஎஸ் & அப்போது அமைச்சராக இருந்த பிஜேபியின் ஒற்றன் மாபா பாண்டியராஜன் இருவரும் சேர்ந்து தமிழ் நாட்டை மத்திய பிஜேபி அரசிடம் அடகு வைத்து கையெழுத்து போட்டார்கள்..

இந்த ஆண்டும் கடைசிவரை நீட்டுக்கு விலக்கு என சொல்லிவிட்டு, தமிழகத்துக்கு வந்த நிர்மலா சீதாராமன் போன்ற பல மத்திய அமைச்சர்களும் ஆமாம் சாமி போட்டார்கள்... தமிழக சட்டமன்றம் இயற்றிய தீர்மானத்தை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமால், மாதக்கணக்கில் கிடப்பில் போட்டது மத்திய பிஜேபி மோடி அரசு..

பின்னர், மீண்டும் அவசர சட்டம் கொண்டு வாருங்கள், ஒப்புதல் கிடைக்கும் என சொல்லிவிட்டு, அப்படி இயற்றப்பட்ட அவசர சட்டத்துக்கு, செல்லும் என மத்திய அமைச்சகத்துக்கு லீகல் ஒப்பினியன் கொடுத்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், அப்படியே பல்டி அடித்து, சுப்ரீம் கோர்ட்டில், தமிழகத்துக்கு தனியே சலுகை அளிக்கமுடியாது என குட்டிக்கரணம் அடித்தார்...

இப்படி நீட் விவகாரத்தில் தமிழகத்தை நம்பவைத்து கழுத்தை அறுத்தது மத்திய பிஜேபி மோடி அரசு தான்.. சும்மா, ஒன்னும் தெரியாமல் அரசியல் பேசக்கூடாது..

Prakash JP
 
செப் 02, 2017

No comments:

Post a Comment