12.3.19

NEET - முதுகெலும்பிழந்த திமுக...

நீங்க என்ன நினைக்கிறீங்க? திமுக நாடு முழுக்க போராட்டம் பண்ணி தமிழ்நாட்டையே ஸ்தம்பிக்க வைக்கும்னா?, அவங்க என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றாங்க?..

முக்கியமான நான்கு முனைகளில் ரயிலமறியல் பண்ணா இந்தியாவையே ஸ்தம்பிக்க வைக்கலாம், மொத்தமா 400 பேர் தேவைப்படும், 15 நாள் ரிமாண்ட் ஆகலாம், மிகப்பெரிய வழக்கறிஞர் அணி இருக்கு 2 நாளில்கூட வெளியில் வந்திறலாம்,

உண்மை என்னென்ன அப்படி காத்திரமா போராடுறதுக்கு 400 பேர்கூட இல்லாத கட்சிதான் திமுக.. திமுக மட்டுமல்ல எல்லா அரசியல் கட்சிகளிலும் அதுதான் நெலமை.

முழுசா ஒரு வழக்கறிஞர் கூட இல்லாத இயக்கங்கள், 10 பேர் தேறாத மாணவர் அமைப்புகள் தினமும் போராட்டம் பண்ணுது, முற்றுகை இடுது, ரயில் மறியல் பண்ணுது, இதெல்லாம் பாத்துட்டு நீங்க அரசியல் கட்சிகள் இதுபோல இல்லையேன்னு கேட்டா அதன் இயல்பே அதுதான்,

இயக்கங்கள் முன்னணி படையாக இருந்து மக்களை வழிநடத்தும், அது தேர்தலை மதிக்காது, ஆனால் அது ஏற்படுத்திய எழுச்சியை தேர்தல் காட்சிகள் ஓட்டாக மாற்றிக் கொள்ளும் அவ்வளவுதான்.

காலப்போக்கில் மக்களும் ஓட்டுபோடுவதுதான் போராடுவதற்கான ஆரம்பித்து விடுகிறார்கள், அது ஒரு இல்லூஷன்.

திமுகவில் அதுதான் நிலைமை, ஏதோ பாதி லோக்கல் காண்ட்ராக்டர்கள், சிறுமுதலாளிகள் அவர்களின் சாதி செல்வாக்குகள் அதன்மூலம் இறுகிப்போன ஒட்டு வங்கிகள், மீடியா, பெருமுதலாளிகள் கரிசனம். மீதி முகநூலில் முற்போக்கு பேசுற 200 ரூவா பார்ட்டிங்கன்னு பட்டி டிங்கறீங் பண்ணி ஒட்டிக்கிட்டு இருக்காங்க, அவங்கள போயி ஏன் போராட வரலைன்னு கேட்டா?..

facebook ல 1000 லைக் வாங்குனா சாலையில் ஒரு பேருந்தாவது வேணாம் ஆட்டோவாவது நிற்குமா?..

எங்கள் பெரியக்கத்தில் ஒரு கோடி உறுப்பினர்கள்னு பெருமையா சொல்லிக்கலாம், ஆனால் மக்கள் பிரச்சினைகளில் முன்னின்று போராட, வழிநடத்த 1000 பேர் கூட இல்லாத கட்சி என்பதுதான் எதார்த்தம்..

மக்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்ன வென்றால் ஒரு கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சியை விட ஏதோ ஒரு தெருமுனையில் நின்று உங்களுக்காக போராடும் 5 பேர் 10 பேர் ஒப்பீட்டளையில் இந்த கட்சிகளைவிட பெரிய ஆற்றல்கள்,

மக்கள் பிரச்சினைகளுக்கான உண்மையாக போராடும் வலிமையான ஆற்றல்கள். உங்கள் ஆதரவை யாருக்கு அளிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொள்ளுங்கள்..

Anbe Selva
 
செப் 05, 2017

No comments:

Post a Comment