அறிஞர்
ம. சோ. விக்டர் அவர்களின் "சமற்கிருதத்தின் தாய்மொழி தமிழே" என்ற
புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மிக மிக பிரமிப்பாய் இருக்கிறது
அவரது கருத்துக்கள். யாராலும் மறுக்கவே முடியாத ஆதாரங்களை அவர்
எடுத்தாண்டிருப்பது அபாரம். தமிழுக்கு மிக தேவையான அவசியமான புத்தகம்.
தமிழ் மொழியின் வரலாற்றையும், உலக மொழிகளில் பயன்படுத்தப்படும் பல
சொற்களின் வேர்ச்சொற்கள் தமிழில் இருப்பதையும் அருமையாக
எடுத்துக்காட்டியுள்ளார். தமிழ் உணர்வு கொண்டவர்கள் கண்டிப்பாக அவரது
இப்புத்தகத்தை ஒருமுறையாவது வாசிப்பது மிகவும் அவசியம்....
No comments:
Post a Comment