தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் இழவு வீட்டில் ஒப்பாரி
வைக்கத்தான் கூடுகிறார்களே தவிர இழவை தடுத்து நிறுத்த கூடுவதில்லை.
நாங்களும் போராட்டம் பண்ணினோம் என்று எல்லாமே அடையாளத்துக்குத்தான். நாளைக்கு அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்னு சொல்றாங்க. நல்லதுதான், ஆனா
ஒவ்வொரு கட்சியிலயும் 50 பேரு வருவாங்க, 50 பேரும் 50 கொடி கொண்டு வருவாங்க.
இது சுய விளம்பரமன்றி வேறென்ன? இம்மாதிரியான போராட்டங்களுக்கு வரும்போது
தனிப்பட்ட அடையாளம் கூடாதுன்னா தலைவர்களே வரமாட்டாங்க. அரசியல் கட்சிகளோட
இந்த அடையாள போராட்டங்களை மக்கள் ஏறெடுத்துப் பார்க்கிறார்களா? என்று
சிந்திக்க வேண்டும்.
1. முல்லைப் பெரியாறு போராட்டங்களை எந்த அரசியல் கட்சியும் முன்னின்று வழிநடத்தவில்லை. மக்களே கிளர்ந்தெழுந்தார்கள்.
2. அவ்வாறே கூடங்குளம் போராட்டமும். அரசியல் கட்சிகளின் துணையின்றி மக்கள் அவர்களாகவே கிளர்ந்தெழுந்திருக்கிரார்கள். நாடெங்குமுள்ள மக்களிடம் உணர்வு பரவுகிறது. இதுவே சரியான வழி.
பொதுமக்களின் போராட்டங்களில் அரசியல் அடையாளம் நுழைந்தால் அது சுருக்கப்பட்டுவிடுகிறது. எனவே கூடங்குளப் போராட்டத்திற்கு ஆதரவு தருபவர்கள் அரசியல் அடையாளத்தோடு கலக்காதீர்கள்.
எழுச்சியாக நடக்கும் போராட்டங்களை, பொதுமக்களிடம் கடந்த காலத்தில் நன்மதிப்பு பெறாத நம் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலால் திசை திருப்பி நம் அரசியல்வாதிகளின் மீதான வெறுப்பை அதில் கலந்து நீர்த்துப்போக செய்யாதீர்.
இனி எல்லா அரசியல்வாதிகளும் உதயகுமாரை பின்பற்ற முயற்சிப்பதே தமிழனுக்கு நல்லது. அவரைப் போன்றவர்களே இனி நாடாள ஆசைப்பட வேண்டும். செய்வார்களா?... அல்லது ஆளாளுக்கு தனித்தனி அரசியல் அடையாளமின்றி அனைவரும் பொதுமக்களாய் அவர்பின் நிற்கவேண்டும்.

செப் 11, 2012
No comments:
Post a Comment