இங்கே இணையத்தில் பலரும் நான் அந்த வம்சம் இந்த வம்சம் என்று
வெட்டிப்பெருமை பேசிக்கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
நாம் என்ன சாதியில் பிறக்கவேண்டும் என்பதை நாமா தீர்மானிக்கிறோம். அவனவன்
அந்தந்த சாதியில் பிறந்ததற்கு அவரவரா காரணம்? இதில் என்ன பெருமை இருக்கப்
போகிறது? ஒவ்வொரு சாதியிலும் ஒரு பெருமை வாய்ந்தவன் வாழ்ந்துவிட்டுப்
போயிருக்கிறான். அதைச் சொல்லிச் சொல்லியே
சொறிந்துகொள்வதில் என்ன இருக்கிறது? முடிந்தால் தானும் பலர்
பாராட்டும்படியாக, பெருமைப்படும்படியாக வாழ முயற்சிக்க வேண்டும்.
ஒருவனுக்கு பெருமை என்பது பிறப்பால் வருவதில்லை. செயலால்தான் வருகிறது.
சுயசாதி வெட்டிப்பெருமையை பேசிக்கொள்ளும் பலரது கருத்தியல் விளக்கங்களும், செயல்பாடுகளும் மிக கேவலமாக இருக்கிறது. வீரம் என்பது ஒரு விஷயமா? வலுவில்லாதவனோடு மோதுவதும், வெட்டுவதும், குத்துவதும், பலரை இழிவாகப் பேசுவதும் வீரமா?
அநியாயத்தையும், அக்கிரமக்காரர்களின் ஆட்பலத்தையும் (தனியாளாய்) எதிர்த்து நிற்கிறவன் எவனோ அவனே வீரன். எதற்கும் பயமின்றி நியாயத்திற்கு குரல் கொடுப்பவன் எவனோ அவனே வீரன்.
இம்மாதிரியான வீரர்களை நேரடியாக எதிர்க்கத் துணிவின்றி கூலிப்படையால் கொல்பவர்களெல்லாரும் சமூகத்திற்கு தங்கள் முகத்தை வீரனாகத்தான் காட்டிக் கொள்கிறார்கள்.
எம்.எல்.ஏ வை எதிர்த்து சுவரொட்டி ஒட்டும்போது கை வெட்டப்பட்டு மாண்ட தொப்பி குமார், மற்றும் பெரியார் தி.க பழனிச்சாமி, திருவண்ணாமலையில் சாலையில் வெட்டிக்கொள்ளப்பட்ட சமூக ஆர்வலர்.... இவர்கள்தான் இந்த நாட்டின் உண்மையான வீரர்கள். இவர்களிடம் பணபலமில்லை, ஆட்பலமில்லை. ஆனால் நெஞ்சில் வீரமும், துணிவும் மட்டுமே இருந்தது.
சாதிக்காக வாழ்வதும் / உயிர் விடுவதும் / பலர் உயிரை வாங்குவதும் வீரம் என்றால் இவர்களது வீரத்திற்கு என்ன பெயர்?
வெட்டி வீரம் என் சாதிக்கு சொந்தம் என்று மார்தட்டுவதை விடுத்து அறிவு என் சமூகத்திற்கு சொந்தம் என்று உரக்கச் சொல்லுங்கள். ஊரும் உலகமும் உங்களை பாராட்டும். உண்மையான பெருமை என்பது இதுதான்....

No comments:
Post a Comment