10.3.14

கே.கே.நகர் காவல் நிலையம் முற்றுகை...!



சென்னை மாநகராட்சி பூங்காவில் சிவராத்திரி விழா! கொண்டாடுவதை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக கே.கே.நகர் காவல் நிலையம் முற்றுகை!

பிப்ரவரி 27, 2014 வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் காவல் நிலையம் எதிரில் உள்ள பூங்கா பொது உடமை சிந்தனையாளர் தோழர் ஜீவானந்தம் பெயரில் உருவானது காலப் போக்கில், எம்.ஜி.ஆர் பூங்காவாக மாற்றி தற்போது சிவன் பூங்காவாக சொல்லப்படுகிறது.

ஆனால் நடிகர் சிவாஜி நடித்த திருவிளையாடல் படம் எடுத்த நாகிரெட்டி, படப்பிடிப்பு முடிந்தவுடன் சிறிது சேதம் அடைந்ததால் ஒரு சிவன் சிலையை மட்டும் விட்டுவிட்டு சென்று விட்டார்கள்.பூங்காவில் ஒரு ஓரத்தில் இருந்த இந்த சிலை காலபோக்கில் புதுப்பித்து பூங்காவின் நடுவில் வைத்துவிட்டார்கள்.

பூங்காவில் ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி விழா! இரவு முழுவதும் கொண்டாடினார்கள் மதவெறியர்கள். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் முயற்ச்சியால் இரவு முழுவதும் கொண்டாடுவதை தடுத்து நிறுத்தி மதவெறியர்களை விரட்டிவிட்டு வழக்கம் போல் இரவு 9 மணிக்கு பூங்காவை காவல் துறையினர் பூடிவிட்டர்கள்.

கே.கே.நகர் காவல் நிலையம் முற்றுகை! தந்தை பெரியார் திராவிடர் கழக தென் சென்னை மாவட்ட செயலாளர் ச.குமரன் தலைமையில் வடக்குமண்டல அமைப்பாளர் கரு.அண்ணாமலை மற்றும் காஞ்சி மாவட்ட தலைவர் பரந்தாமன், வாட சென்னை மாவட்ட செயலாளர் சனார்தணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சசிகுமார், காஞ்சி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கரிகாலன், இணையதள பொறுப்பாளர்கள் சோ.மதிவாணன், குருசரவணன் மற்றும் ராமாபுரம் சுப்பிரமணி, சிலம்பம் சிவாஜி, எம்.ஜி.ஆர்.நகர் பகுதி செயலாளர் மணி மொழியான், டைலர் கண்ணன் மற்றும் திலீபன், பாஸ்கர், மணிபாரதி மற்றும் திரளான கழக தோழர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள்.


குறிப்பு : முகநூலில் இப்போராட்டத்தையும் எம் தோழர்களையும், 'நாய்கள்' என்றும், 'சுட்டுத்தள்ளவேண்டும்' என்றும் மிகவும் கொச்சைப்படுத்தி கருத்து தெரிவித்த "நாகராஜா" என்பவருக்கு நான் எழுதிய கருத்து இதோ...

// நாகராஜா என்ற சக நாய்க்கு... (பிற தோழர்கள் மன்னிக்கவும்)

படுக்கையில் கலவி கொள்வது என்பதும் தனி மனித உரிமைதான். இனி இந்த "நாகராஜா" நாயின் குடும்பத்தினர் இந்த பூங்காவில் தொடர முயற்சிக்கலாமே. பொது இடத்தில் வழிபடுவது மட்டும்தான் தனி மனித உரிமையா? //















No comments:

Post a Comment