10.3.14

தேவை ஒரு அதிரடி தலைமை

போர் முடிந்து ஐந்தாண்டு கடக்கப்போகிறது. இன்னமும் அதேநிலைதான் நீடித்துக்கொண்டிருக்கிறது. காலம் கடக்க கடக்க மறதி பெருக்கெடுக்கும். இந்நிலை தொடர்ந்தால் போராடும் தலைமைகள் நாளடைவில் அயற்சியுறும். சிங்களர்க்கென்று உள்ள அரசும், ராணுவமும் அவர்களின் வெறி உணர்வை வளர்த்துக்கொண்டேயிருக்கும். ஆனால் தமிழன் அதிகாரம் செலுத்த எதுவுமேயில்லை. எல்லோரையும் எதிர்ப்பது தனிமைப்படுவதில் கொண்டுபோய் சேர்த்துவிடும். வீரிய செயலாற்றலும் செயல் திட்டமும்  இல்லாத வெறும் எதிர்க்குரல்களால் காலவிரயத்தைத் தவிர வேறு ஏதும்  பயனில்லை என்றே கருதுகிறேன். மக்களின் ஆதரவு பெற்ற தலைமைகள் ஒருங்கே குவியாமல் கூறுபட்டு இருப்பது எந்த புரட்சிக்கும் வழிவகுக்காது. தனிமனித நாயகத்தனமைகொண்ட அடையாள போராட்ட வழி அரசியலுக்கே மீண்டும் இட்டுச்செல்லும் என்றே நினைக்கிறேன். மீண்டும் இன்னொரு கருணாநிதியே உருவெடுப்பார். 

மான் கள் மெதுவாக நடைபோடுவதில் அர்த்தம் இருக்கலாம். ஆமைகள் மெதுவாக நகர்வது? 

நெடுநாளாக எந்த மாற்றத்தையும் காணாத சராசரி தமிழ் இளைஞர்கள், எந்தவொரு தலைமையின் மீதும் நம்பிக்கையற்ற ஒரு விரக்தியான மனநிலைக்கு ஆட்படுத்தி அவர்களின் செயலாற்றலை குறைக்கும் என்றும் கருதுகிறேன். இனி அறிக்கை தலைவர்களாக இல்லாத அதிரடி தலைவர்களே வேண்டும். 

தளர்ந்துகிடக்கும் தமிழ் இளைஞர்களுக்கு தற்போது தேவை புதிய ரத்தமும் நம்பிக்கையூட்டும் நகர்வுகளை மேற்கொள்ளும் ஒரு தலைமையுமே. "பழைய கள்ளு புதிய மொந்தை" அரசியலல்ல என்பதே என் விருப்பு.

No comments:

Post a Comment