பட்டாசுகளை விற்பனை செய்பவர்கள் முறையான முன் அனுமதி பெறவேண்டுமென்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சாலைகளிலோ அல்லது நடைபாதைகளிலோ கடை விரிக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது. எவ்வளவுதான் கடுமையான உத்தரவு போட்டாலுங்கூட வருடாவருடம் தீபாவளி முடிவில் எங்கேனும் அப்பாவிகள் பட்டாசு வெடிவிபத்தில் வாழ்க்கை இழப்பது வாடிக்கையாகத்தான் தொடர்ந்துகொண்டிருக்கிறது. விதிமுறைகளை மீறி பெரும் லாபத்தை எதிர்பார்த்து விற்பனை செய்பவர்கள் யாரும் இம்மாதிரியான விபத்துக்களில் சிக்குவதில்லை என்பது கவனிக்கத்தக்கது. பிச்சையெடுத்தே வாழ பழக்கப்பட்டுவிட்ட சில காவலர் சிகாமணிகளின் அற்ப பட்டாசு தேவைகளுக்காகவே நீதிமன்ற விதிமுறைகள் சாதாரணமாக மீறப்படுகிறது.
எம்.ஜி.ஆர் நகர் / கே.கே.நகர் / அசோக் நகர் அருகாமையில் எங்கேனும் உங்கள் பார்வையில் பட்டாசு கடைகள் சாலைகளிலோ, நடைபாதைகளிலோ அமைக்கப்பட்டிருந்தால் அதை அப்படியே முகவரியுடன் தெளிவாக ஒரு படமெடுத்து, எந்த காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியென்பதையும் குறிப்பிட்டு உடனடியாக ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.
உங்கள் புகார் மேல் தீவிரமாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின்மீது நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க ஒரு வழக்கறிஞர் குழுவும் சமூக ஆர்வலர் குழுவும் தயாராக இருக்கிறது.
நீங்கள் படம் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி :gopalakrishnanvelu@gmail.com
29-10-2013
No comments:
Post a Comment