இசைப்பிரியாவின் காட்சியைக்கண்டு தமிழுணர்வோடு கலங்கிய ஒருவர் அதற்காக இந்தியாவை உடைக்க நினைத்தால் வல்லபாய் படேலாக காப்பாராம். காங்கிரசை மட்டும் விரட்டினாலே போதுமாம். தேசியமும் தெய்வீகமும் இரு கண்ணாகக் கொண்டு இந்தியாவை பாதுகாப்பாராம். அவருக்கு கீழ்க்கண்ட பதிலைப் போட்டதும் unfriend செய்துட்டார்.
# 01. நீங்கள் வல்லபாய் படேலையும், 1947 வரையிலாக இங்கு இருந்த பல நாடுகளின் கலாச்சாரத்தையும் தெளிவாக படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இப்போது எல்லாவற்றையும் ஹிந்தி ஆதிக்கம் விழுங்க வழி செய்த வல்லபாய்படேலாய் நீங்கள் பலபேர் உருவாகுவீர்கள் என்றால் காங்கிரசில் இணைந்து மேலும் அதை பலப்படுத்துவதை விட்டுவிட்டு எதற்கு நீங்கள் அதை எதிர்த்து உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கவேண்டும்?
# 02. பல நாடுகளில் தேசிய மொழியாக இருக்கும் தமிழை நிர்மூலமாக்குவதே ஹிந்தியின் அடுத்த செயல்திட்டம். மத்தியில் யார் வந்தாலும் இந்த வேலைத்திட்டத்தை மாற்றிவிடமுடியாது. நுரையீரலில் பிரச்னை என்றால் அதை மட்டும் வெட்டியெடுத்து வெளியே போட்டுவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடுமா? இனி இந்தியா பலவாறாய் பிரிந்து அவரவர்களை அவரவர்களே ஆண்டுகொள்ளும்படுயாக விடுவதே நல்லது. வலுக்கட்டாயமாக சேர்த்துவைத்திருப்பது ஹிந்திக்காரர்களையன்றி யாருக்கு லாபம்?
No comments:
Post a Comment