10.3.14

மீண்டும் அதே காங்கிரசு அதே மன்மோகன்சிங் ஆட்சி

பொதுவாக ஹிந்திக்காரர்கள் நாம் நினைப்பது போல இந்தியன் என்ற உணர்வில் செயல்படுவதில்லை. வடகிழக்கு மற்றும் தெற்கு ஆட்களை அவர்கள் பெரிதாக மதிப்பதில்லை. அவர்களின் நலம்போக மீதிதான் நம்மைப்பற்றிய அக்கறை. உண்மையில் இந்தியன் என்ற உணர்வு வடக்கை விடவும் தெற்கேதான் பலமாக உள்ளது. வடக்கே சாதி மதத்திற்கு பிற்பாடுதான் எதுவும். பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாக குஜ்ஜார் / ஜாட் / ராஜ்புத் / இவர்களின் மேலாதிக்கமே வடக்கில். தெற்கு பிராந்தியங்களை படிப்படியாக தீவிர ஹிந்திய காலணி பகுதிகளாக மாற்றுவதே அவர்களின் நோக்கம். உதாரணம் பாலாறு / கவிரி / முல்லைப் பெரியாறு நதிப்பிரச்னைகளை ஹிந்திகள் கையாளும் விதத்தை சொல்லலாம். சிந்து நதி பாகிஸ்தானுக்கு பிரச்னையில்லாமல் செல்வது கவனிக்கத்தக்கது. ஹிந்தியன் என்னும் உணர்வு நம்மை நாமே மயக்கத்தில் அடிமைப்படுத்திக்கொள்ளும் குறியீடாக உணரவேண்டிய தேவை இன்று அதிகமாக உள்ளது. தென்னிந்தியாவின் தமிழ் / தெலுகு / கன்னட / மலையாள மக்கள் சகோதர மனப்பான்மையுடன் ஹிந்திகளுக்கு எதிராக இணைந்து ஒட்டுமொத்த பிரதிநிதித்துவத்தை பலப்படுத்தினாலொழிய தெற்கு மக்களுக்கு ஒன்றுபட்ட ஹிந்தியாவால் எந்த பயனுமில்லை. வெள்ளைக்காரன் பயன்படுத்திய அதே பிரித்தாளும் சூழ்ச்சியைத்தான் இன்று ஹிந்திக்காரன் பயன்படுத்திக்கொண்டிருக்கிறான். 

மதச்சார்பற்ற ஜனதாதளம் என்று பெயர் வைத்துக்கொண்டு பாஜக-வுடன் கூட்டணி வைத்து அதன் தயவில் அரசாண்ட நிதீஷ்குமார் இன்று யோக்கிய சிகாமணியாக நடிக்கிறார். தேவகவுடா & கருணாநிதியும் இப்படித்தான். 

மதம் என்பது எப்படி பெரும் லாபமுள்ள வணிகமானதோ அவ்வாறே "மதச்சார்பற்ற" என்ற வார்த்தை அரசியலும் பெரும் லாபமுள்ள வணிகமாகிவிட்டது. சிறுபான்மை மக்களுக்கான அரசியல், பெருபான்மை மக்களுக்கான அரசியல் என்பதெல்லாம் நேரடித் தந்திரமான வியாபார யுத்தி.

ஆக நான் என்ன சொல்லவருகிறேன் என்றால்...

மறுபடியும் மத்தியில காங்கிரசே தனி பெரும்பான்மை பலத்துல வெல்லனும், மன்மோகன்சிங்கே மீண்டும் பிரதமர் ஆகணும், போராட ஆயுதத்தை தூக்கிக்கிட்டு சனங்கெல்லாம் தெருவுக்கு வரணும். இந்த நாடு ஒரு பெரும் மாற்றத்தை சந்திக்க இதுவொரு சரியான சந்தர்ப்பம். அவ்ளோதான் இப்போதைக்கு என் விருப்பம். 

No comments:

Post a Comment