10.3.14

தேவரின் நல்லதொரு வார்த்தை

// ஜாதி என்பது பச்சை அநாகரீகம், ஜாதியை பார்ப்பவன் அரசியலுக்கும் லாயக்கில்லை, ஆன்மீகத்திற்கும் லாயக்கில்லை. தன் ஜாதிக்காக எதையும் செய்பவன் அரசியலில் புகுந்தால் அரசியல் கெடும் " - பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர்" //

இந்தப் பதிவிற்காக நான் எழுதிய கருத்து...

# நான் வட மாவட்டத்தைச் சேர்ந்தவன். சென்னைக்கு வரும்வரையில் தேவர் என்ற சாதியைப் பற்றியே தெரியாது. அவரைப் பற்றி அறிந்ததே பிற்பாடுதான். வடமாவட்டம் பெரும்பாலும் இப்படித்தான். முத்துராமலிங்கத்தேவரின் புகழைப் பரப்புகிறேன் என்று தீயா வேலை செய்யும் பலரின் செயல் மற்றும் அணுகுமுறைகளே அவரின் பிம்பத்தை தேவரல்லாத மாற்று சமூக மக்களிடம் வெறுப்பை தோற்றுவிக்கிறது என்பதே உண்மை. ஒருவரின் பெருமையை பரப்புகிறவர்கள் முதலில் அவரை ஒழுங்காய் முழுமையாய் புரிந்துகொள்ளவேண்டும். எதற்கெடுத்தாலும் வறட்டு விவாதம் செய்வதால் எந்தப் பயனுமில்லை. இவர்கள் அனைவரும் சும்மாயிருந்தாலே அல்லது சும்மாயிருந்திருந்தாலே அவரை எல்லா சமூகத்தினரும் வணங்கும்படி ஆகியிருக்கும். இவர்களே மற்ற சமூகத்தினர் அவரை அறியத் தேவையற்றவராய் மாற்றினர். பெரியார் அம்பேத்கருக்கும் இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. முதன்முதலாக பரவாயில்லையே தேவர் இப்படியெல்லாம் பேசியிருக்கிறாரே என்று பூபதியின் இந்தப் பதிவைக்கண்டுதான் வியக்கிறேன். இப்படியான அவரைப்பற்றின பொதுக்கருத்துக்கள் வெளிவந்தாலொழிய அவரை அவர் சமூகம் மட்டுமே குறுகிய வட்டத்துள் வைத்து கொண்டாடிக்கொண்டிருக்கும். தமிழ் இன உணர்வு உள்ளவர்கள் இதை புரிந்து ஆரோக்கியமான செயல்வடிவத்திற்கு வரவேண்டும். உண்மையில் அவரோடு யாருக்கும் எந்த பிரச்சனையுமில்லை. அவரை அறியாமலே வெறும் சாதிக்காரர் என்ற தொடர்பில் ஆதரிப்பவர்களாலேயே பிரச்சனை. ஆதரிப்பவர்கள் உண்மையில் அவருக்கு உண்மையாய் இருந்திருந்தால் பார்வர்டு பிளாக்கை விட்டுவிட்டு யாரும் அதிமுக-வுக்கு கொடி தூக்குவார்களா? 

பொன்னெழுத்தால் பொறிக்கப்படவேண்டிய அவரது இவ்வார்த்தைகளை அவருடைய எல்லா சிலைக்கு கீழேயும் பதியலாம். அப்படியே ஊருக்கு ஊர் டிஜிட்டல் பேனர் வைக்கலாம். நல்லது Keep it well bro...

No comments:

Post a Comment