10.3.14

கொத்தடிமைத்தனம் மாறுமா?

கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் 1976 ம் ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்டதை பொதுமக்களின் நலன் கருதி புறந்தள்ளி மாபெரும் தியாக மனப்பான்மையுடன் தொண்டாற்றும் அதிமுக சட்டமன்ற / பாராளுமன்ற கீழவை மேலவை உறுப்பினர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த நாட்டிலே ஏன் இந்த உலகிலே மிக மிக மிகப் பணிவோடு வளைந்து நெளிந்து இன்னபிற யோகாசனங்களின் முறையோடு தன் தலைமைக்கு இவ்வாறாக சேவகம் பார்ப்போர் எங்ஙேனுமுண்டோ? மீனவன் செத்தாலென்ன குடியால் மாணவன் செத்தாலென்ன? அல்பாயுசும் ஆண்மைக்குறைபாடும் ஆல்போல் பெருகி தமிழகத்தில் தழைத்தோங்க நல்வழிசெய்து கிராமந்தோறும் தமிழ்க்குல தாய்மார்களின் தாலிகளை இயற்கைக்கு தானமிடும் செயற்கரிய வள்ளல் திட்டங்களால் நாட்டிற்கு வருமானம்பெருகவும், செலவின்றி மக்கள்தொகை குறையவும் வகைசெய்யும் ஒப்பிலா நிர்வாகத்திறன்கொண்ட தங்கத்தாரகை மாண்புமிகு அம்மா அவர்களின் சொத்துக்குவிப்பு வழக்கில் நீதியும் தருமமும் நல்லபடியாக வென்று, நீதி தேவனின் அருள்பெற்று நிம்மதியாய் அம்மா நீடூழி வாழ எல்லாம் வல்ல உங்கள் இறைவனை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்.

அம்மா நாமம் வாழ்க....! - அவர் நம் 
தமிழுக்கு போடும் நாமம் ஒழிக....!

No comments:

Post a Comment