10.3.14

முசுலீம் வெறியும் பார்வைப் பிறழ்வும்

பிரபாகரனும் மோடியும் ஒரே நேர்க்கோடெனும் மிஸ்டர் அறிவாளி, ஈழத்தில் எத்தனை முஸ்லீம் பெண்கள் புலிகளால் கற்பழிக்கப்பட்டார்கள்? கொலைசெய்யப்பட்டார்கள்? சிங்களனுக்கு ஆட்காட்டி வேலைசெய்துவிட்டு இன்று ராஜபக்சேவையும் குறைபட்டுக்கொண்டால் எப்படி? உண்மையான விடுதலை உணர்வும் புரிதலும் இருந்திருந்தால் புலிகளின் பக்கமல்லவா முஸ்லீம்கள் நின்றிருக்கவேண்டும். மோடியோடு பிரபாகரனை ஒப்பிடும்போதே உங்கள் கீழ்த்தரம் தெரிகிறது. உங்களைப் போன்ற அரைகுறை அறிவுஜீவிகள் முதலில் பிரபாகரனை தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள் அல்லது மோடியையாவது தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள். மத மயக்கத்தோடே யாவற்றையும் அணுகாதீர்கள்.

மத துவேஷத்திற்காகவா புலிகள் முஸ்லீம்களை ஒதுக்கினார்கள். சொந்த மண்ணை மீட்கும் போராட்டத்தை சரிவர உள்வாங்காமல் சிங்களனுக்கு தொடர்ந்து ஆட்காட்டி / தரகு வேலை பார்த்தது நியாயமென்றா கருதுகிறீர்கள். உண்மையில் சிங்கள பௌத்த ஆதிக்கத்திலிருந்து பரிபூரண விடுதலைபெற புலிகள் பக்கமல்லவா முஸ்லீம்கள் நின்றிருக்கவேண்டும். இம்ரான் படையணி என பெயரிட்ட பிரபாகரன் என்ன இந்து வெறியரா? மோடியைப்போல மதத்திற்காகவா போராடினார் அவர்? இப்படியெல்லாம் ஒப்பிட உங்களைத் தூண்டும் உங்கள் மத உணர்வு கேவலமாக படவில்லையா? கடைசிவரையில் கருணாவை இழுக்க சிங்களத் தரப்பிற்கு ஒட்டுவேலை பார்த்தது யாராம்?

ஒரு இந்து மோடியை எதிர்ப்பதும், ஒரு முஸ்லிம் மோடியை எதிர்ப்பதும் அடிப்படையில் வேறானது. வெறும் சொம்படிப்பவர்களை மட்டும் வைத்துக்கொண்டு முகநூலில் உங்களை அறிவாளியாய் வளர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்னை unfriend செய்ததுகூட நீங்கள் சொல்லித்தான் தெரியவருகிறது. உங்களிடம் உண்மையில்லை அதனால் பதிலில்லை. பிரபாகரன் செய்தது 100 சதவீதம் சரியே. உங்கள் மேற்படி பதிலிலேயே தெரிகிறது நீங்கள் ஈழத்தை / ஈழத்தமிழர்களை ஆதரிக்கிற லட்சணம். வெறும் மதவெறியை மறைத்துக்கொண்டு சனநாயகம் பேசுபவர்களோடு நட்பு பாராட்ட நானொன்றும் அரசியல்வாதியில்லை. நீங்களும் உங்கள் சாயம் தோய்த்த கருத்துக்களை ஆதரிப்பவர்களுமே உண்மையில் மோடியைவிடவும் பயங்கரமானவர்கள். முதலில் மதச்சட்டையை கழற்றிவிட்டு வெளியேவந்து நடுநிலையாக செயல்படுங்கள், பிறகு பிரபாகரனை விமர்சித்துவிட்டு ஈழத்தமிழர்களை ஆதரிக்கலாம்.

No comments:

Post a Comment