22.1.14

2014 புத்தக சந்தையில்...

நேற்றுகாலை அலுவலகம் சென்றதும், உடன் பணியாற்றும் நண்பர் ஒருவர் எங்கள் எல்லோருக்கும் முன்னம் அவரவர்கள் பேசிக்கொண்டிருந்ததற்கேற்ற புத்தகங்களை பரிசளித்தார். 

யவனராணி / பேராசிரியர்.தொ.பரமசிவன் நேர்காணல்கள் / இந்தியா எனும் 356 தேசங்கள் / இதுவரையில் நான் - வைரமுத்து / திரைக்கதை எழுதுவது எப்படி? - சுஜாதா. இதில் அவர் எனக்கு பரிசளித்தது பேரா.தொ.பரமசிவம் நேர்காணல்கள். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அதன் விளைவாக நானும் நண்பர் வேலுதாஸ் அவர்களும் இணைந்து மாலை 3 மணிப்பொழுதுக்கு மேல் புத்தக சந்தைக்கு சென்றோம். இருந்த பணத்திற்குள் நான் வாங்கிய புத்தகங்கள்...

கிறிஸ்துவும் கிருஷ்ணனும் கற்பனையே - ஜோசப் இடமருகு,
பகவத் கீதை ஏன்? எதற்காக? - கி.வீரமணி,
கருக்கு (நாவல்) - பாமா,
பெத்தவன் - இமையம்,
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கும் தீர்ப்பும் - பெ.சண்முகம்,
உலகைக் குலுக்கிய அறிவியல் நூல்கள் - ஆயிஷா நடராசன்,
கப் பஞ்சாயத்து சாதியின் கோரமுகம் - அசோகன் முத்துசாமி,
இனியவன் இறந்துவிட்டான் (குறுநாவல்) - ஜீ.முருகன்,
நூறு நாற்காலிகள் - ஜெயமோகன்,
குறத்தி முடுக்கு - ஜி.நாகராஜன்,
பால்யகால சகி - முகம்மது பஷீர்,
வாடிவாசல் - சி.சு.செல்லப்பா,
மதில்கள் - முகம்மது பஷீர்,
பண்பாட்டு அசைவுகள் - பேராசிரியர் தொ.பரமசிவம்,
இலக்கிய மொக்கைகள் - வினவு,
படிப்பும் விடுதலைக்கான அறிவும் - மருதையன்,
அரசுத் தோட்டத்தில் ஏட்டுச்சுரைக்காய்கள் - ஆர்.கே. (மகஇக),
மருத்துவ அரசியல் - மகஇக கட்டுரைகள்,
சாவி - சத்யஜித் ரே,
கல்லறை ரகசியம் - சத்யஜித் ரே,
கைலாஷில் கொலையாளி - சத்யஜித் ரே,
மகாராஜாவின் மோதிரம் - சத்யஜித் ரே,
பூட்டிய பணப்பெட்டி,
தங்கக்கோட்டை - சத்யஜித் ரே,
ரத்தினக்கல் - சத்யஜித் ரே,
பம்பாய் கொள்ளையர்கள் - சத்யஜித் ரே,
கத்மாண்டு கொள்ளையர்கள் - சத்யஜித் ரே,
தேவியின் சாபம் - சத்யஜித் ரே,
கேங்டாக்கில் வந்த கஷ்டம் - சத்யஜித் ரே, 
மரணவீடு - சத்யஜித் ரே,
வங்கப்புலி - சத்யஜித் ரே,
ஒரு மர்மமான குடித்தனக்காரர் - சத்யஜித் ரே,
கல்கா மெயிலில் நடந்த சம்பவம் - சத்யஜித் ரே,
பிள்ளையாருக்குப்பின்னே மர்மம் - சத்யஜித் ரே,
நெப்போலியனின் கடிதம் - சத்யஜித் ரே,
அனுபில் மர்மம் - சத்யஜித் ரே,
பிணம் நடந்த மர்மம் - சத்யஜித் ரே,
டார்ஜிலிங்கில் ஓர் அபாயம் - சத்யஜித் ரே, 
புலித்தலைமை படுகொலை,

என்னுடன் பணிபுரியும் இயக்குனர் குழு நண்பர்களுக்கு பரிசாக வழங்க நான் வாங்கிய புத்தகங்கள்... ( எல்லாம் மூன்று பிரதிகள் )

அர்த்தமற்ற இந்துமதம் - மஞ்சை வசந்தன் (தி.க),
பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள்,
Periyar on God and Man,
Dear Youths - Periyar,
Why were Women enslaved? - Periyar,
"பாரதீ"ய ஜனதா பார்ட்டி - வே.மதிமாறன்,
ஆட்டிசம் சில புரிதல்கள்,
செய்திகளின் அரசியல்,
வன்கொடுமைகள் ஒழிப்போம்,
பகவத்கீதை ஏன்? எதற்காக? - கி.வீரமணி,
பெரியாரின் 100 அறிவுரைகள்,

இன்னும் ஏராளமான புத்தகங்கள் வாங்க வேண்டும்தான். ஆனால் இந்த வருடத்தோடு என் வாழ்க்கை முடிந்துவிடாது என்ற நம்பிக்கை அதிகம் இருப்பதால் மிச்சம் வைத்துவிட்டு திரும்பியிருக்கிறேன். அடுத்த இலக்கு எம்.டி.வாசுதேவன் நாயரின் அனைத்து கதைகளும்... 

( ** அவரின் "வானப்ரஸ்தம்" குறுநாவல் உங்கள் பார்வையில் கிடைத்தால் யாரேனும் எனக்கு வாங்கிக்கொடுத்து உதவுங்கள். பதிலுக்கு உங்களுக்கு ஒரு புத்தகம் அளிக்கிறேன். கூடுமானவரையில் தேடினேன். விசாரித்தேன். கிடைக்கவில்லை )

No comments:

Post a Comment