" ஜ, ஹ, ஷ, ஸ " இம்மாதிரியான உச்சரிப்பு ஒலிகள் தமிழில் இல்லை. வடமொழி உள்ளே நுழைந்த பிற்பாடே இந்த உச்சரிப்புகள் தமிழில் கலந்தன. பொதுவாக " கசடதபற " வல்லின ஒற்றெழுத்தில் முடியும்படியான எந்த பெயர்ச்சொல்லும் / வினைச்சொல்லும் தமிழில் கிடையாது. மெல்லினத்தில் "ண், ம், ன் "என்ற ஒற்றெழுத்துக்களில் தான் பெயர்ச்சொற்கள் முடியும். இடையினத்தில் " வ் " தவிர ஏனைய " ய், ர், ல், ழ், ள் "எழுத்துக்களில் பெயர்ச்சொல் முடியும். முதலில் தமிழ் வார்த்தைகள் எல்லாமே இலக்கணப்படி அமைந்ததுதான். தற்போது நாம் பயன்படுத்தும் வார்த்தைகளில் தமிழ் இலக்கணப்படி அமையா வார்த்தைகள் தமிழே இல்லை என்பதே உண்மை.
"ராஜ்ஜியம் / ராஜ" என்பது வடமொழியே. குமார் என்பதும் தமிழ்ப்பெயர் அல்ல. தமிழில் "குமரன்" என்பதே சரியானது. "அரசகுமாரன்" என்பதும் வடமொழியே. "இளவரசன்" என்பதே இதற்கு சரியான தமிழ் பெயர்.
பெயர்ச்சொல்லுக்கு இலக்கணம் தேவையில்லை என்பது தவறு. நமது பெயர்ச்சொற்களில்தான் ஏனைய எல்லா மொழிகளையும் நாம் 99% உட்புகுத்தியிருக்கிறோம். தமிழ் வார்த்தைகள் எல்லாமே தமிழ் இலக்கண விதிக்குள் அடங்கியதே என்பது மிக முக்கியமானது. நாம் எதைப்பற்றியும் அக்கறை கொள்ளாமல் நிறைய கலப்பு செய்துவிட்டோம்.
தமிழை ஊனப்படுத்தியுள்ளோம்.
No comments:
Post a Comment