கடற்கரையில் குழந்தையைத் தொலைத்த பாசமுள்ள ஒரு தந்தையின் தவிப்பை காட்டியிருக்கிறார்கள். குறை காணும் பார்வையைத் தவிர்த்துவிட்டு பாருங்கள். உங்கள் குழந்தையின் அருகாமை இந்த நாட்டில் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டது என்பதை உணர்வீர்கள்.
குழந்தை கடத்தல், விபச்சாரத்திற்கு பெண்கள் கடத்தல் போன்ற மனித குணமற்ற செயல்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் என்னதான் செய்துகொண்டிருக்கிறதோ? ஒரு பக்கம் சாத்வீகமாய் தெரியும் இந்த நாடு இன்னொரு பக்கத்தில்தான் எவ்வளவு பயங்கரமாகயிருக்கிறது?
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்கள் / பார்வையாளர்கள் தங்கமீன்கள் மற்றும் 6 மெழுகுவத்திகள் படங்களுக்கும் கொடுக்கலாம். இரண்டிலுமே ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி கிடைக்கும், நீங்கள் குழந்தைகளை நேசிக்கும் மனிதர்களெனில்...
No comments:
Post a Comment