ஒரு மாவட்டத்தின் தலைமை அலுவலர் யார் என்றால் மாவட்ட ஆட்சி தலைவர். இவரை சந்திப்பதற்கு எந்தவிதமான பயமும் இல்லாமல் செல்லுகிற ஒரு சாமானியன், பதவியளவில் சாதரணமாக இருக்கும் காவல் சார்பு ஆய்வாளரை சந்திக்க அச்சபடுகிறான். இது ஏன்?
குற்றத்தில் ஈடுபடுகிற வன்முறை கும்பல் மீது எந்த அளவிற்கு பயம் இருக்கிறதோ... அதே அளவிலான பயம் போலீஸ் மீது ஏன் இருக்க வேண்டும்?
தன் பக்கம் நியாயம் இருந்தும் காவல் விசாரணைக்கு செல்ல அச்சப்படுவது ஏன்?
படிப்பு அளவிலும் தகுதி அளவிலும் கீழ் இருக்கக்கூடிய ஒரு காவலர், படித்த பெரிய மருத்துவர்களை கூட ஏய்... என்று எப்படி கூப்பிட முடிகிறது?
சட்டையை பிடித்து இழுத்தால், இழிவாக பேசினால் கூட... வழக்கு பாய்ந்துவிடும் என்று நாம் பயப்படுகிறோம். ஆனால், லத்தி கம்பால் அடிப்பது நிர்வாணமாக்குவது போன்ற கொடுமைகளை போலீஸ் எப்படி சாதரணமாக செய்கிறது?
பத்து ரூபாய் கடன் கேட்கக்கூட நாம் கூச்சப்படுகிறோம். ஆனால்.. போலீஸ்காரர்களால் பொது மக்களை மிரட்டி எப்படி பணம் பறிக்க முடிகிறது?
குற்றத்தில் ஈடுபடுபவர்களை எளிதாக நேரடியாக நம்மால் பார்க்க முடிவது இல்லை. ஆனால்... போலிசை பார்க்க முடிகிறது.
( எவிடென்ஸ் கதிர் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து )
No comments:
Post a Comment