18.1.14

ஐயப்பன் மகிமை ஒரு மாசத்துக்கு மட்டும்தான் வேலை செய்யுமா?

சென்னையில இப்ப நான் இருக்குற ஒரு தெருவுல, ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி ஒரு 30 வயசு பையன் அவங்க அம்மாவை நடுத்தெருவுல நிக்கவெச்சி, அசிங்க அசிங்கமா கேவலமா திட்டிக்கிட்டே அடிச்சி அவமானப்படுத்துனான். அவன் போதையில இருந்ததால, எல்லாரும் வேடிக்கை பார்த்தாங்க. மீறி விலக்க வந்தவங்களையும் கேவலமா பேசி சண்டை போட்டான். வழக்கமா நடக்கிறதுதான்னு பலபேரு எதையும் கண்டுக்கல. அந்த அம்மா ஒரு வாரமா அக்கம்பக்கத்துல அழுதுக்கிட்டே ஏதேதோ சம்பவத்தையெல்லாம் பேசிக்கிட்டிருந்துச்சி. எங்க வீட்டு முதலாளியம்மாகிட்ட அப்படி பேசும்போது நானும் கவனிச்சேன். இப்ப என்னடான்னா, அப்படி அடிச்ச அந்த பையன் இப்ப ஐயப்ப சாமிக்கு கழுத்து நிறைய மாலை போட்டுக்கிட்டு ரொம்ப பக்திப் பழமா மாறியிருக்கான். செருப்பில்லாம நடந்து போறான். காலையிலயே குளிச்சி பார்க்க லெட்சணமா தெரியுறான். இன்னிக்கி அவனோட அந்தம்மா, சாமந்திப்பூ வாங்கிவந்து "இந்தா சாமி"ன்னு அவங்கிட்ட கொடுக்க, அவனும் வாங்கிக்கிட்டு போனான்.

" ஜெய் ஹிந்த்....! "

(வேற என்னத்த சொல்றது?)

No comments:

Post a Comment