21.1.14

நானும் ரவுடிதான்...

போன வருசம் புத்தக சந்தைல வாங்கிட்டு வந்த புத்தகங்களையே இன்னும் படிக்கல. அதுக்குள்ளாற இந்த வருசம் புத்தக சந்தை வந்துடிச்சு. முகநூல்ல ஆளாளுக்கு தன் இலக்கிய தாகத்தை வரிஞ்சி கட்டிக்கிட்டு வெளிப்படுத்துறாங்க. மகிழ்ச்சியாக இருக்கிறது. கூடவே ஆதங்கமும் எழுகிறது... 

ஆயிரக்கணக்கான அறிவுஜீவி எழுத்தாளர்களும், லட்சக்கணக்கான வாசகர்களும் வாழ்ந்துட்டிருக்கிற இந்த நாட்ல... அதாவது இந்த தமிழ்நாட்டுல இன்னும் எப்படி ஜெயலலிதாவும் கருணாநிதியுமே அதிகார மையமா இருக்கிறார்கள்? தருமபுரி கலவரங்கள் / குருபூசை கலவரங்கள் பெருகுவதேன்? 2009 ஈழப்போரில் கொல்லப்பட்ட ரெண்டு லட்சம் மக்களுக்காக இதில் எத்தனைப்பேர் நடுத்தெருவுக்கு போராட வந்தார்கள்? அதன் பிற்பாடு எந்தெந்த போராட்டங்களை முன்னெடுத்தார்கள் அல்லது கலந்துகொண்டார்கள்? இதற்காக இவர்களால் இந்தியாவில் ஏதேனும் ஒரு சிறிய அசைவாவது ஏற்படுத்தி வைக்கப்பட்டதா? 

"எழுதுகிறவன் எழுதுகிறவற்றுக்கு உண்மையாக இருத்தல் வேண்டும் - மாவோ" 

இந்த வரிகளை ஆழமாக கவனித்துப்பாருங்கள். அச்சமில்லையென்றும் விடுதலைக்காகவும் புரட்சிகரமாக பாட்டெழுதிய பாரதி, வெள்ளைக்காரனின் வாரண்ட்டுக்கு பயந்து புதுச்சேரி போய் ஒளிந்து கொண்டான். பின் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து வெளியே வந்தான். அவன்தான் நம் தேசியக்கவி. 

நம் மண்ணின் எழுத்தாளர்களில் நிறைய பேருக்கு தலையில் கொம்பு முளைத்து இருப்பதை கொஞ்சம் உற்றுக் கவனித்தால் நீங்கள் உணரலாம். எந்நேரமும் துருத்திக்கொண்டு வெளியே நீட்டிக்கொள்ளும் இந்தக் கொம்பு தெரியாதபடி சக மனிதனிடம் மரியாதையாக, எளிமையாக பழகக்கூட முடியாமல் இருக்கும் எழுத்தாளுனர்கள் அநேகம்பேர். 

"எழுதுவதென்பது திறமையுமல்ல ; எழுத்தாளனென்பது தகுதியுமல்ல" என்றபடியான தோழர் வெ.மதிமாறன் அவர்களின் கருத்துக்களைப் பாருங்கள். (பின்வரும் சுட்டியை அழுத்தவும்) 

http://mathimaran.wordpress.com/2010/07/08/article-320/

கொம்பு முளைத்த எழுத்தாளர்களைவிடவும் "கட் அவுட்"டுக்கு பால் ஊற்றும் ரசினி ரசிகனும், விசய் ரசிகனும், அசித் ரசிகனும் சற்று மேலானவர்களே தெரிகிறார்கள் என் பார்வையில். ஏனென்றால் "பொறுமை கைமீறிப் போகும்போது நடுத்தெருவில் இறங்கி சண்டை பிடிக்கும் தன்மையும் கொம்பு முளைக்காத மண்டையும்" அவர்களிடம் இருப்பதால்....

( **நல்ல புத்தகங்களை பரிந்துரை செய்யுங்கள் நண்பர்களே. வாங்கிப் படித்துவிடுகிறேன் )

No comments:

Post a Comment