18.1.14

ஹிந்தி தேசிய மொழியா?

"ஹிந்தி மே காம் கர்னா ஆஸான் ஹை, ஷூரு த்தோ கரே"
"போல்ச்சால் மே ஹிந்தி கா ப்ரயோக் கரே"

சென்னை மண்டல தலைமை கடவுச்சீட்டு அலுவலகத்தினுடைய எல்லா பெரிய தூண்களின் நான்கு பக்கங்களிலும் ஹிந்தி மொழிக்கு ஆதரவாக நேரு படத்துடனும் ஹிந்திய அரசின் சிங்க முத்திரையுடனும் விளம்பரப் பலகைகள் வைத்திருக்கிறார்கள். தமிழை தேடினாலும் தென்படவில்லை. இருப்பதும் ஒரு ஓரமாக ஒப்புக்கு கைதியாய் கிடக்கிறது. சென்னை விமான நிலையத்திலும் இதுதான் நிலைமை.

ஹிந்தி, ஹிந்தியாவின் தேசிய மொழியில்லை என்பதும், உலகில் ஐந்து நாடுகளில் தமிழ் அலுவல் மொழியென்பதும் கவனிக்கத்தக்கது. ஹிந்திக்கு டவுசர் தைக்கும் இன்னும் பெரும்பாலான தமிழ் அறிவாளிகளுக்கு இது தெளிவாய் தெரிவதில்லை. 

ஹிந்தியின் ஆதிக்கம் தமிழ் மண்ணில் ஆழமாய் ஊடுருவி வெகுநாட்களாகிவிட்டது. நமக்கோ இன்னும் இங்கே எந்த சாதி உயர்ந்ததென்ற பஞ்சாயத்தே முடியவில்லை. 

300 வருடங்களுக்கு முன்பு வெள்ளைக்காரனுக்கு தரகுவேலை பார்த்த அதே தன்மை இப்போது ஹிந்திக்காரனுக்காய் நீண்டுகொண்டிருக்கிறது. 

தமிழர்களின்பால் அக்கறையும் ஆவலும்கொண்டு பாரதிதாசனின் பாடிய "எந்நாளோ?" என முடியும் கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது. 

அந்நாள் எந்நாளோ?

No comments:

Post a Comment