(இது கொம்பு சீவி விடும் சாதிவெறிப் பதிவல்ல)
ஆயர் / இடையர் / கோன் / கோனார் என்ற வார்த்தைகள் பயன்பாட்டிலும் பதிவேட்டிலும் வழக்கொழிந்து வெறும் "யாதவர், யாதவ்" என்ற பெயரே அடையாளப்படுத்தப்பட்டால் தமிழ் மண்ணில் வடக்கிலிருந்து வந்தேறிகளாக குடிபெயர்ந்த அடையாளம் இச்சமூகத்திற்கு எதிர்காலத்தில் பதிய வாய்ப்புள்ளது. பயன்படுத்தும் சாதிப்பெயரை வைத்தே அவர் எந்த மொழி / எந்த இனம் என்பதை அடையாளம் கண்டுகொள்ளப்படும்போது இதன் வரலாறு காலப்போக்கில் திரிபுபடுமென்பதில் சிறிதும் ஐயமில்லை. இன்றைய தமிழ்ச்சாதிகளில் ஐந்திணைகளில் குறிப்பிடப்படும் (முல்லை) தொழிற்பெயர்களில் ஆயர் / இடையர் என்பது வரலாற்றுடன் இணைந்தது. இந்து மதத்துள் நுழைந்து இந்த வரலாறு நெடுங்காலமாய் புதைந்துகொண்டிருக்கிறது. ஆதிகாலத்திலிருந்தே தமிழர்களின் பூர்வீகத்தொழில்களில் ஆநிரைகள் மேய்ப்பது என்பது முக்கியமான தொழிலாக வேலையாக இருந்துள்ளது. முல்லை நில கடவுள் திருமாலுக்கும் இப்போதைய திருமாலுக்கும் தொடர்பில்லை. ஒரு தொன்மையான தமிழ்ப்பழங்குடி, நன்கு விவரம் தெரிந்தவர்களாலேயே வடவர்கள் அடையாளமாக வளர்த்தெடுக்கப்படுகிறது. இச்சமூக வரலாறு இவர்களாலேயே மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது...
சமூக பொது அடையாளப்பெயர்கள் தமிழிலேயே இருக்கவேண்டும் அல்லது வடமொழி ( யாதவ் ) அடையாளத்தை பயன்படுத்தி வளர்ப்பதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். இல்லையேல் வெகுவிரைவிலேயே தமிழ்ச்சமூகத்தில் இச்சமூக வரலாறு இருண்டுபோக 100% வாய்ப்புள்ளது என்றே கருதுகிறேன்...
No comments:
Post a Comment