சென்னை காவல்துறை கமிஷ்னர் அலுவலகம் நிறுவப்பட்டதின் நோக்கம் மற்றும் தலையாய பணி யாதெனில், நடிகர், நடிகைகளின் மற்றும் சினிமா பிரபலங்களின் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து பிரச்னையை தீர்த்துவைப்பதே. அவ்வாறு ஏதும் அவர்களுக்கு பிரச்னையற்ற காலங்களில் மட்டுமே பிற உதிரி மக்களின் பிரச்னைகள் மேல் அக்கறை செலுத்த ஆவணசெய்யப்படும். ஊடகங்களும் இந்த விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும் என்பது இருதரப்பு முக்கிய ஒப்பந்தமாதலால் விதிமுறைகளை அவைகள் மீறக்கூடாது. எனவே தென்னிந்திய மக்கள் அனைவரும் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு உடனடியாக தமிழ் சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகளாகும்படி சங்கத்தின் சார்பாக உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு :
எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை. சென்னை கமிஷ்னர் அலுவலகமே சிறந்த அலுவலகம். போலிகளைக் கண்டு ஏமாறவேண்டாம்.
(*தாமதமின்றி உடனடியாக நேரடியாக மனு பெற்றுக்கொள்ளப்படும்)
No comments:
Post a Comment