18.1.14

ஜெயமோகனின் நோக்கம்தான் என்னவோ?

"தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது? தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?" - சிலேடைக்கவி காளமேகம்.

"திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே” - அருணகிரிநாதர்.

# பெரியார் சொன்னதற்கும் இந்த தற்குறி ஜெயமோகன் சொல்வதற்கும் எள்ளளவும் தொடர்பில்லை. பயங்கர விஷமத்தனமானது. தமிழர்கள் ஏன் இவர் சொல்வதையெல்லாம் இவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்கிறார்களோ தெரியவில்லை. இதையெல்லாம் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் மூடர்களை என்ன சொல்வது? காளமேகத்தின் சிலேடைக்கவிக்கும், அருணகிரிநாதரின் "த" வரிசை செய்யுளுக்கும் நிகரான சந்தங்களோடு பொருளைக் கொணரும்படியாக உலகில் எந்தமொழியாவது ஈடாய் குறிப்பிடமுடியுமா? பிழைப்புக்காகவும் புகழுக்காகவும் தமிழை மேலோட்டமாக வாசித்து தன்னை பெரும் அறிவாளியாகக் காட்டிக்கொள்ளும் அறிவுஜீவி தற்குறிகள் சங்ககால இலக்கியத்தை ஆழ்ந்து படித்துப்பார்க்கட்டும். ஜெயமோகன் என்ற கழிசடையெல்லாம் கருத்துசொல்லி மாற்றக்கூடிய நிலையில் தமிழ் இல்லை. அதற்கான அவசியமுமில்லை. தமிழைவிடவும் மலையாள எழுத்துருக்கள் அதிக எண்ணிக்கையிலானது. இந்த கழிசடை ஜெயமோகன், தனது தாய்மொழியான மலையாள எழுத்துருக்களை குறைப்பது பற்றியும் மாற்றுவது பற்றியும் முதலில் கருத்து வெளியிட்டுப் பார்க்கட்டும். சந்து கிடைக்கும்போதெல்லாம் தமிழ் சமூகத்தின் மீதும் பெரியார் மீதும் நாசூக்காக தன் ஏதாவதொரு விஷத்தை கக்கிக்கொண்டே இருக்கிறார் இவர். உண்மையில் தமிழைவிட ஹிந்திய எல்லா மொழிகளின் எழுத்துருக்களும்தான் எண்ணிக்கை அதிகமானது. தமிழ் வளர்ச்சியை விரும்பாத தற்குறிகளின் கூவலே இவை. பேனா பிடிக்கிறவனெல்லாம் பெரியாராகிவிட முடியாது என்பதை அந்த தற்குறி உணர்வேண்டும். அதிலும் தமிழ் எழுத்துருக்களை 'தங்கிலீசு' வடிவில் மாற்ற வேண்டுமென அவர் சொன்ன இக்கருத்தை 'தி ஹிந்து' வெளியிட்டிருப்பது என்பது யதேச்சையானதல்ல. தைரியமிருந்தால் ஜெயமோகன் தன் அடுத்த நாவலை தான் சொல்லும்படியாக எழுத்துரு வடிவில் அச்சடித்து வெளியிடட்டும். ஹிந்து நாளிதழும் அப்படியே செய்யட்டும் பார்க்கலாம்...

No comments:

Post a Comment