உலகில் தமிழர்களுக்கெதிராக நடந்த கொடுமைகளில் சில...
1930 - பர்மாவில் தமிழர்களுக்கு எதிராக முதல் சிறு கலவரம்.
1937 - பிரிட்டிஷ் அரசு தமிழ்நாட்டில் ஹிந்தியை ஆட்சிமொழியாகக் கொண்டு வரும் சட்டம் கொண்டு வருகிறது. ராஜாஜி கொண்டு வந்த இந்தச் சட்டத்தை எதிர்த்து தாளமுத்து , நடராசன் என்ற இரு மாவீரர்கள் உயிர் துறக்கிறார்கள். அந்தச் சட்டம் திரும்பப் பெறப்படுகிறது.
1938 - ஹிந்தியை எதிர்த்து நடந்த பெரும் போராட்டத்தில் 1500 பேர் சிறை செல்கின்றனர். அதில் எழுபது எண்பது பேர் தாய்மார்கள். அவர்களுடன் முப்பது குழந்தைகளும் சிறை சென்றனர். இந்தப் போராட்டத்தின் விளைவாக அந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட்டது.
1939 - ஈழத்தில் தமிழர்களுக்கு எதிரான முதல் கலவரம்.
1940 - இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை மறுப்பு.
1950 - இந்தியா ஹிந்தியை ஆட்சி மொழியாக்க சட்டம் இயற்ற முயற்சி. தென்னிந்தியர்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக ஆங்கிலம் இணைப்பு மொழியாக 15 வருடம் இருக்கும் என மாற்றப்பட்டது.
1956 - இலங்கை சிங்களம் மட்டுமே ஆட்சி மொழியாக இருக்கும் என சட்டம் இயற்றியது.
1957 - மலேசியா பூமி புத்திரர்களுக்கு சாதகமாக அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றியது.
1958 - ஈழத்தில் தமிழர்களுக்கு எதிரான கலவரத்தில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
1962 - கிட்டத்தட்ட பர்மா முழுவதற்கும் சொந்தக்காரர்களாக இருந்த தமிழர்கள் அங்கிருந்து அடித்து விரட்டப்பட்டனர். தமிழர்களின் பொருளாதாரம் முறிக்கப்பட்டது இந்த வருடம் தான்.
1963 - இந்தியப் பாராளுமன்றத்தில் ஹிந்தியை ஆட்சிமொழியாக்கும் விவாதம். அதில் " " என்ற வரிக்கு பதிலாக ஒரு வார்த்தையை மாற்றி "" என மாற்றுமாறு அண்ணா விவாதம். நேரு மறுப்பு.
1965 - ஹிந்தியை ஆட்சி மொழியாக்கும் முயற்சியை எதிர்த்து ஜனவரி 24 இல் தமிழகம் மாபெரும் போராட்டம். இந்திய ராணுவம் சுட்டு குறைந்தது ஆயிரம் தமிழர்கள் உயிர் இழப்பு. இதில் குறிப்பிடத்தக்க விடயம் இந்த நேரத்தில் இதே நேரத்தில் கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் வசித்த தமிழர்கள் மாபெரும் போராட்டங்களை செய்தனர்.
1967 - ஹிந்தியை தேசிய மொழியாக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது.
1971 - பங்களாதேஷ் சண்டை. இதில் கலந்து கொண்டு வங்காளிகளுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்க ஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிர் இழப்பு.
1976 - வட்டுக்கோட்டை தீர்மானம் ஈழத்தில் நிறைவேறல்.
1977 - தமிழர் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 300 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
1981 - ஈழத்தில் யாழ்ப்பாண நூலகம் கொளுத்தப்பட்டது.
1983 - ஈழத்தில் கறுப்பு ஜூலை கலவரம். கிட்டத்தட்ட 3000 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
1986 - தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் ஆரம்பம். அதை எதிர்த்து 30 தமிழர்கள் தற்கொலை.
1987 - ஈழத்தில் இந்திய அமைதிப்படை சென்று ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை.
1991 - கர்நாடகாவில் ஒரே மாதத்தில் இரண்டு லட்சம் தமிழர்கள் உடைமைகளை இழந்து விரட்டி அடிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அப்போதைய கர்நாடக அரசால் இழப்பீடாக கொடுக்கப்பட்டது.
2006 - மலேசியாவில் தமிழ் சைவக் கோவில்கள் இடிக்கப்பட்டன.
2007 - மலேசியாவில் பிரிட்டிஷ் அரசிடம் தமிழர்களுக்கு எதிரான அரசியல் அமைப்பை ஒத்துக் கொண்டதற்காக இழப்பீடு கேட்டு மூர்த்தி வழக்கு தொடர்கிறார். கோலாலம்பூரில் கிட்டத்தட்ட 50000 தமிழர்கள் கலந்து கொண்ட மாபெரும் போராட்டம். 2007 டிசம்பர் மாதம் தமிழ்த் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
2008 - தலைவர்களை விடுதலை செய்ய சொல்லி பிரதமரை சந்திக்கச் சென்ற ஆறு வயது குழந்தை உட்பட பனிரெண்டு பேரை மலேசியா அரசு கைது செய்தது. அடுத்து நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்த் தலைவர்கள் உட்பட போராடிய தலைவர்கள் அனைவரையும் ஆண்டுகணக்கில் சிறையில் அடைத்தது மலேசியா.
2009 - ஈழத்தில் இரண்டு லட்சம்பேர் கொலை.
தமிழர்களே ,
இதை படித்தால் உங்களுக்கு ஒன்று புரியும். பிரிட்டிஷ் அரசில் இருந்து, இந்திய அரசு வரை , பர்மா தொடங்கி இலங்கை, மலேசியா வரை நாம் எந்தத் தீங்கும் செய்யாமலே நமது மொழியை , இனத்தை அழிக்க அத்தனை பெரும் முயல்கின்றனர்.
நம்மை காக்க நமது மதத்தை சேர்ந்தவர்கள் வரவில்லை. நம்மை நமது நாடுகளே கொன்றன. நமது மொழியை நாம் நல்லவர்கள் என நம்பிய தலைவர்களே அழிக்க முயன்றனர். நமது பொருளாதாரத்தை அழிக்கும் போது அதை மௌனமாக நமது சொந்த நாடுகளே வேடிக்கை பார்த்தன. நாம் அடிமையாக இருப்பதையே யாவரும் விரும்புகின்றனர்.
No comments:
Post a Comment