7.5.14

பெரியார் யோக்கியமா? 72 வயதில் 26 வயது பெண்ணை திருமணம் செய்தது நியாயமா?

பெரியார் மனிதர். உடல் ஆசைக்காக திருமணம் செய்யவில்லையென்பதை தெளிவாக அறிவித்தார். தேர்தல் அரசியல் கூடாது என்ற கொள்கையை விட்டு தேர்தல் அரசியலுக்குவர விருப்பப்பட்ட அண்ணா இதையே காரணம் காட்டினார். தம் எல்லா செயல்களிலும் வெளிப்படையாக இருந்தார் பெரியார். கடவுள் கதைகளின் அயோக்கியத்தனத்திற்கு சிறிதும் நியாயமின்றி வக்காலத்து வாங்கும் இதுதான் உங்கள் பக்தி அறிவா? முதலில் மத மயக்கத்தில் கண்ணை மூடிக்கொண்டு எல்லாவற்றுக்கும் சப்பைக்கட்டு கட்டுவதை நிறுத்துங்கள். சனாதன தர்மத்தையும், பாகவதத்தையும், ஹிந்து மதத்தையும் கரைத்துக் குடித்திருக்கிறீர்கள் என்றால் வெளிப்படையாக அறிவுடைமையுடன் கருத்தை சொல்லுங்கள். உண்மை என்பது "நான் அறிவாளி, எனக்கும் தெரியும்" என்பதல்ல. உங்கள் கருத்து சற்றாவது ஏற்கும்படி இருக்கவேண்டும். உலகில் 90% பேர் இயல்பிலேயே கற்றுக்கொடுக்கப்பட்ட; திணிக்கப்பட்ட இவ்விதமான மத அறிவுடன்தான் இருக்கிறார்கள். ஒரு மனிதனுடன் கடவுளை ஒப்பிட்டு முட்டு கொடுப்பதுதான் ஒப்பற்ற மதத்தின் பலம்? "பசி, நித்திரை, இந்திரிய இச்சை இம்மூன்றும் ஜீவசுபாவம்" என்றார் பெரியார். பதிவுக்கு நேரடியாக பதில் சொல்லுங்கள்...

கொலை பண்ணாத, அடுத்தவன் மனைவியைக் கெடுக்காத யோக்கியமான கடவுள் இருக்கிறதா? 

(யேசுவும் கட்டுக்கதைதான். ஆனால் அக்கதையில் ஒழுக்கமற்று அவரை சித்தரித்தார்களா?)

No comments:

Post a Comment