18.5.14

திருவாளர் திருமுருகன் காந்தி அவர்களுக்கு பெரும் நன்றி

இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்காக விளக்கேற்றி அஞ்சலி செலுத்திய கடற்கரை மக்கள் கூட்டத்தில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக ஒரு அருமையான சொற்பொழிவை நிகழ்த்தினார் திருமுருகன் காந்தி அவர்கள். அதில் இம்மியளவும் மக்களை வெறுமனே உசுப்பேற்றும் பேச்சில்லை. தனிநபர் நாயகத்தன்மையுமில்லை. தமிழர்களுக்கெதிரான அமெரிக்க அரசியலையும் ஹிந்திய அரசியலையும் தெளிவாக விளக்கினார். இவ்வாறான அமைப்புகளும் போராளிகளும் தமிழ் மண்ணில் பெருக வேண்டும். சாதி மயக்கத்தால் சுரண்டப்படும் தமிழ் இளைஞர் கூட்டம் தமிழின போராட்டத்திற்கு திரள வேண்டும். சாதி மயக்கத்தை ஊட்டி மக்களை தன் சாதிக்காரனின் சுரண்டலுக்கு தயார் செய்யும் அறிவுஜீவிகள் மனம் மாறவேண்டும். அனைத்து தமிழ் அமைப்புகளும் தோழமையுடன் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். 'ஹிந்தியாவின் துணையின்றி ஈழம் சாத்தியமா?' என்று எதற்கெடுத்தாலும் ஹிந்திய மயக்கத்திலிருக்கும் முதுகெலும்பில்லாத குதர்க்கவாதிகள் சொந்த மக்களைப் பற்றி இப்படி அக்கறைப்பட வேண்டும். 

காலம் கனியுமென்றே எண்ணுகிறேன். 

பிரபாகரா, 
நீ மூட்டிய தீ இனி மெல்ல மெல்ல கனன்றெழும் வீரியமாய்..!





No comments:

Post a Comment