9.5.14

தி கிரேட் "இராமாயணம்" பற்றிய கருத்துக்கள்

மகாத்மா காந்தி: என்னுடைய ராமன் வேறு, அயோத்தி ராமன் வேறு. என் ராமன் சீதையின் கணவனல்ல-தசரதன் மைந்தனல்ல. ராமாயணக் கதையில் வரும் ராமனை நான் பூஜிக்கவே மாட்டேன்.
சுவாமி விவேகானந்தர்: தென்னிந்தியாவில் உள்ள மக்களேதான் குரங்குகளாகவும் அரக்கர்களாகவும் வர்ணிக்கப்பட்டார்கள்.
ஜவகர்லால் நேரு: ஆரிய திராவிடப் போராட்டமே ராம-ராவண யுத்தம்.
ஹென்றி ஸ்மித்: ராமாயணத்தில் குடிகாரர்களை சுரர்களென்றும் குடியாதவர்களை அசுரருகள் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
ரமேசு சந்திரதத்: ராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென்னிந்தியாவில் உள்ளவர்களை, ஆரியர் அல்லாதவர்களைக் குறிப்பதாகும்.
பண்டிதர் பி பொன்னம்பலம் பிள்ளை: ராமாயணக் கதையானது ஆரியர்களை மேன்மையாக கூறவும் திராவிடர்களை இழிவுபடுத்திக் கூறவும் எழுதப்பட்ட நூலாகும்.
சி. ஜே. வர்க்கி: ராமாயணம் தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதையும் அதை கைப்பற்றியதையும் உணர்த்தும் நூல்.
ஷோஷி சந்திரதத்: திராவிடர்களை ஆரியர்கள் வென்று விட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். ஆனால் இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்து பல நாகரீகங்களை இந்த பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள்.
சி.பி. காவெல்: விட்டுணு என்கிற கடவுள் ஆரியக் கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக் கொடுக்கவும், யோசனைக் கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாக கூறப்பட்டிருக்கிறது.
சந்திரசேகர பாவலர்: சூத்திரன் தவம் செய்யக்கூடாது என்பதற்காகவே ராமன் சம்பூகனை கொன்றான்.
ராவ்சாகிப் திமேசு: இராவணன் சீதையை வலுக்கட்டாயமாகக் கவர்ந்து சென்றான் என்பதற்கு ஆதாரமே கிடையாது.

No comments:

Post a Comment